பாக்கியலட்சுமி: கோபியிடம் நேருக்கு நேர் மோதும் எழில்.. கிழித்தெடுத்த ராதிகா.. பாக்யா எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 15 ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி பற்றிய உண்மைகளை தெரிந்து எழில் கோபியிடம் நேருக்கு நேர் சண்டை போடுகிறார். அதே நேரத்தில் பாக்யாவிற்கு ஆதரவாக கோபியிடம் ராதிகாவும் சண்டை போடுகிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா கோபி வீட்டில் வந்து ரெஸ்டாரண்டில் கோபி செய்த செயல் பற்றி பேசிவிட்டு போனதை வைத்து ராதிகா கேள்வி கேட்கிறார். நீங்க இவ்வளவு கேவலமா நடந்துப்பீங்கன்னு எனக்கு தெரியல. கொலை பண்ற அளவுக்கு மோசமானவங்களா இருந்திருக்கீங்க? நான் உங்களை நம்பி வாழ வந்ததுக்கு எதற்காக எனக்கு இப்படி தண்டனை கொடுத்துட்டு இருக்கீங்க என்று கோபப்பட்டு திட்டி விட்டு போகிறார்.

மறுபக்கத்தில் எழில் பாக்யாவை தேடி ரெஸ்டாரண்டுக்கு வருகிறார். அப்போது ஈஸ்வரியிடமா தன்னுடைய பங்க்ஷனில் கலந்து கொள்ளாதது பற்றி கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி தான் கலந்து கொள்ளாததற்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு அம்மா எங்கே என்று எழில் கேட்டதும், கோபி தான் ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனைகளுக்கு காரணம் என்ற உண்மைகளை ஈஸ்வரி சொல்கிறார்.
இதனால் கோபமாக எழில் அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக எழில் கோபியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார். எழிலை பார்த்ததும் முதல் முறையா என்னுடைய ரெஸ்டாரண்டுக்கு வந்திருக்க வா என்று சந்தோஷமாக கோபி வரவேற்கிறார். அதற்கு எழில் என்னுடைய அம்மாவை இன்னும் எத்தனை நாளைக்கு தான் நீங்க கொடுமைப்படுத்தனும்னு நினைச்சுட்டு இருக்கீங்க?
உங்களுக்கு எதற்கு எங்க அம்மா மேல இவ்வளவு வன்மம் என்று ரெஸ்டாரண்டில் சாப்பாடு விஷயத்தில் கோபி செய்த செயல் குறித்து எழில் கோபப்பட்டு திட்டுகிறார். அதோடு நீங்க எல்லாம் ஒரு மனுஷனா என்று எழில் திட்டியதும் கோபி என்னால் தான் உனக்கு பட வாய்ப்பு கிடைத்தது என்று சொல்ல, நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்.
நான் ப்ரோடுயூசரிடம் பேச போறேன். எனக்கு இந்த சான்ஸ் வேண்டாம் என்று சொல்லப்போறேன் என்று சொல்ல அதற்கு கோபி கோபத்தில் உன்னுடைய வாழ்க்கையை நீயே அழிச்சிடுறாத. உன்னுடைய அம்மா என்னுடைய அப்பாவின் இறுதி சடங்கு செய்யவிடாமல் தடுத்துட்டா என்று சொல்ல, உங்க அப்பா அவருடைய ஆசையை அவர் மனைவியிடம் சொன்னதால்தான் அதை அவங்க நிறைவேற்றி வச்சாங்க.
இதில் எதற்காக நீங்க கோபப்படுறீங்க. நீங்க நடந்து கொண்ட விதத்தால் தானே உங்க அப்பா உங்களை இப்படி வெறுத்து ஒதுக்கினாங்க என்று கேள்வி கேட்கிறார். அதோடு எங்க அம்மாவிற்கு எத்தனையோ பிரச்சனை கொடுத்திருக்கிறீங்க. ஆனால் இதை நான் சும்மா விடமாட்டேன். அம்மா சும்மா விட்டாலும் நான் விடமாட்டேன் என்று கோபிக்கு எச்சரிக்கை கொடுத்துவிட்டு போகிறார்.
பிறகு பாக்யா செஃப் உடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். ஸ்டேஷனில் போலீஸ் செஃப்பை மட்டும் இருக்க சொல்கிறார். மறுபக்கத்தில் கோபி வீட்டிற்கு வருகிறார். ராதிகா எதுவும் பேசாமல் இருக்கிறார். அப்போது கமலா நான் அவளை சமாதானம் செய்கிறேன் உங்க தரப்பு நியாயத்தை சொல்லுறேன் என்று கோபிக்கு சப்போர்ட்டாக பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications