கோபி மற்றும் ஈஸ்வரியை கதறவிட்ட பாக்யா, இப்பவாவது இந்த முடிவை எடுத்தீங்களே.. ராதிகா கொடுத்த சப்போர்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் பாக்யாவிற்கு ஆர்டர் கிடைக்காததால் அதற்கு கோபி மற்றும் ஈஸ்வரி திட்டி அசிங்கப்படுத்த அதற்கு பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவுக்கு உதவி செய்வதற்காக ராதிகாவும் முயற்சி செய்கிறார். இந்த நிலையில் இனியா பாக்கியா மீது கோபத்தில் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் வீட்டில் கோபி இனியாவை ஷாப்பிங் கூட்டிட்டு போனதற்காக ராதிகாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு பாக்யா வர ஹாலில் இனியா கோபத்தில் இருக்கிறார். அதற்கு பாக்கியா இனியாவிடம் சமாதானம் படுத்த போகிறார். அப்போது என்னை நீ மறந்துட்ட தானே ஈவினிங் ஃபங்ஷன் ஒன்னுக்கு போக ஷாப்பிங் போகணும்னு சொன்னேனே இப்போ எல்லாம் உனக்கு என் நினைவே இல்ல என்று இனியா திட்டுகிறார்.
அதனால் கோபமான எழில் இனியாவை திட்டுகிறார். அம்மா என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறார்கள் என்று உனக்கு ஏதாவது தெரியுதா? என்று திட்டிக் கொண்டிருக்க எல்லோரும் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்து விடுகின்றனர். அப்போது அமிர்தா கேன்டீன் ஆர்டர் பற்றி விசாரிக்கிறார். அதற்கு கான்ட்ராக்ட் குழுக்கள் முறையில் வேறொருத்தவங்களுக்கு கொடுத்துட்டாங்க என்று பாக்கியா சொல்ல அதைக் கேட்டது ஈஸ்வரி அப்போ கொடுத்த பணம் எல்லாம் போச்சா என்று கோபப்படுகிறார்.
அதற்கு பாக்யா பணத்தை கொஞ்சம் நாளில் கொடுத்துடுவாங்க என்று சொல்கிறார். அதற்கு ஈஸ்வரி அப்படியெல்லாம் கொடுக்க மாட்டாங்க, நீ எதுவும் பண்ண வேண்டாம். இனி நீ வீட்டிலேயே இரு. நீ வேலை பாக்குறேன்னு சொல்லி அலைந்தது போதும். வீட்டு செலவை பார்க்க மாமாவோட பென்ஷன் பணம் இருக்கு. அதுபோக செழியன், எழில் இருக்காங்க அவங்க வீட்ட பாத்துக்குவாங்க என்று சொல்ல ராதிகா தானும் தன்னுடைய பங்கை கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அதனால் கோபமான பாக்கியா யாரும் பணம் கொடுக்க வேண்டாம் நானே வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கேன்ல்ல அதுபடியே பாத்துக்குறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கோபமாக கிளம்பி போகிறார். அதைத் தொடர்ந்து பாக்கியா தனியாக யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கோபி பாக்யாவை நக்கல் அடிக்கிறார்.
அப்போது பாக்கியா நான் இப்படியே இருந்திட மாட்டேன் சீக்கிரமா இதிலிருந்து மீண்டு வருவேன் என்று கோபியிடம் சவால் விட்டுவிட்டு அங்கிருந்து போகிறார். அதைத்தொடர்ந்து பாக்கியா செல்வியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செல்வி எனக்கு இந்த ஆர்டர் நமக்கே வந்து சேரும்னு தோணுது என்று பாக்யா சொல்ல நீ நினைச்ச மாதிரியே கண்டிப்பா நடக்கும் அக்கா என்று செல்வியும் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.
பிறகு இரவு கோபி தூங்குவதற்காக ரூமிற்கு வந்து ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரியும் அங்கு வர ராதிகா வழக்கம் போல கீழே படுத்து கொள்கிறார். அப்போது கட்டிலில் கோபி பக்கத்தில் ஈஸ்வரி படுத்துக்கொண்டு பாக்கியா செய்வது பிழையாய் இருக்கு. பாக்கியா முன்ன மாதிரி இல்ல. எல்லாமே தப்பா தான் பண்ணிக்கிட்டு இருக்கா. அவளால எல்லாருக்கும் பிரச்சனை வந்துகிட்டு இருக்கு என்று பேசிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்டு ராதிகா கோபம் ஆகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications