பாக்கியலட்சுமி: ஸ்டேஷனில் கோபி சொன்ன வார்த்தை! ராதிகா கொடுத்த அதிர்ச்சி.. பாக்யா எடுத்த முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நவம்பர் 19ஆம் தேதிக்கான எபிசோடில் கோபி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது ராதிகா கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார். மறுபக்கத்தில் ஈஸ்வரி கோபிக்காக பாக்யாவிடம் வாக்குவாதம் செய்கிறார்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி கடைசி நேரத்தில் மிரட்டியதால் தான் பாக்கியாவை பட பூஜைக்கு வர வேண்டாம் என்று சொன்னேன் என்று குடும்பத்தினர் முன்பு எழில் சொல்ல அதைக் கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் இருக்கிறார். அதோடு பாக்யாவிடம் எழில் மன்னிப்பு கேட்டு அழுகிறார். என்னுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும் போது நீ என்கூடவே இருக்கணும் என்று நான் எப்போதும் நினைப்பேன்.

baakiyalakshmi serial vijay tv

ஆனால் அந்த ஆளால அப்படி நடக்காமல் போயிடுச்சு. நானே என் வாயால் உன்னை வர வேண்டாம்னு சொல்லிட்டேன் என்று அழுது கொண்டு இருக்க, அதற்கு பாக்கியா சமாதானம் செய்கிறார். மறுபக்கத்தில் ராதிகாவின் அம்மா தன்னுடைய மகனுக்கு போன் பன்னி கோபியை ஜெயிலில் இருந்து எடுக்க வேண்டும் என்று கேட்க, அதற்கு அவர் என்னால் இப்போதைக்கு நேரில் வர முடியாது என்று சொல்லிவிடுகிறார்.

அதனால் ராதிகாவை ஸ்டேஷனுக்கு போய் கோபியை கூட்டிட்டு வரலாம் என்று கூப்பிட ராதிகா நான் வரமாட்டேன் நான் தனியாவே மயூவை வளர்த்துக் கொள்கிறேன். கோபியுடன் இப்படி என்னால் வாழ முடியாது. முதலில் கல்யாணம் செஞ்சவர் குடிகாரன் ஆனால் இவர் கொலைகாரனாக இருக்காரு என்று திட்டி விடுகிறார்.

baakiyalakshmi serial vijay tv

மறுபக்கத்தில் பாக்கியா வீட்டில் பாக்கியாவை எல்லோரும் சுற்றி வளைத்து கேள்வி கேட்கின்றனர். அப்போது அம்மா செஞ்சது சரிதான் என்று எழில் சொல்கிறார். ஆனாலும் ஈஸ்வரி நீ கோபி மீது கம்ப்ளைன்ட் கொடுப்பதற்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கணும் என்று சொல்ல இதைக் கேட்டபோது பாக்யா கோபத்தை உச்சியில் நான் ரெஸ்டாரண்ட் பிரச்சனையில் ஜெயிலுக்கு போயிருந்தா பரவாயில்லையா?

என்னை அடிச்சிருந்தா பரவாயில்லையா? நான் வீட்டில் மூளையில் ஒடுங்கி கிடந்தாலும் பரவாயில்லையா? அவர் செய்ததற்கான தண்டனை நிச்சயமா அவருக்கு கிடைக்கத்தான் செய்யும் என்று பதிலடி கொடுக்கிறார். இதனால் ஈஸ்வரி எதுவும் பேசாமல் ரூமிற்கு செல்கிறார்.

baakiyalakshmi serial vijay tv

செழியனும் பாக்கியா மீது கோபத்தில் மேலே செல்ல, இனியாவும் உன்னை பிடிக்கவே இல்லை என்று பாக்கியாவிடம் சொல்கிறார். அடுத்த கட்டத்தில் கோபி ஸ்டேஷனில் எனக்கும் இதுக்கும் சம்பந்தம் கிடையாது அதனுடைய முதல் மனைவி என் மீது பொறாமையில் தவறான கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது செஃப் வந்து நடந்த உண்மைகளை சொல்கிறார்.

இதனால் கோபி அதிர்ச்சியில் நிற்கிறார். அப்போது கோபி நண்பர் வந்து இதுக்கு தான் அப்பவே சொன்னேன் நீ இப்படி பண்ணாதே என்று என திட்ட, அதற்கு கோபி அந்த செஃப் கழுத்தை அறுத்துட்டான் என்று புலம்புகிறார். இறுதியில் நான் இன்னைக்கே வெளியே வரணும் அதற்கான வேலையை பாரு என்று தன்னுடைய நண்பரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் எழில் பாக்கியாவிடம் தான் அந்த படத்தை வேண்டாம் என்று சொல்லப் போவதாக சொல்கிறார். அதற்கு பாக்யா இது உன்னோட கனவு இதை நீ கண்டிப்பா தொடரணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+