பாக்கியலட்சுமி: மகள் அசிங்கப்படுத்தினாலும் பாக்கியாவை கைவிடாத ஜெனி.. கோபிக்கு எழில் பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 2ஆம் தேதிக்கான எபிசோடில் பாக்யாவை இனியா அவமானப்படுத்துகிறார். அதே நேரத்தில் பாக்யாவிற்கு சப்போர்ட்டாக எழில் நிற்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் இனியா போட்டியில் வெற்றி பெற்றதும் இதற்கெல்லாம் காரணம் என்னுடைய அப்பாதான் என்று பாக்கியாவை தாண்டி போய் கோபியை ஸ்டேஜ்க்கு கூப்பிட்டு சென்று புகழ்ந்து தள்ளுகிறார். ஆனால் அந்த இடத்தில் பாக்யா நின்று கொண்டிருக்கும் போது இனியா கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை.

பிறகு டான்ஸ் மாஸ்டரை மேடைக்கு கூப்பிட்டு அவரைப் பற்றியும் பெருமையாக பேச, இதை பார்த்த பாக்யாவும் எழிலும் அதிர்ச்சி அடைகின்றனர். இனியா எப்போ டான்ஸ் கிளாஸுக்கு சேர்ந்தா? எனக்கு எதுவுமே தெரியலையே என்று எழிலிடம் சொல்லி புலம்புகிறார். மேடையில் கோபி பாக்கியாவை வெறுப்பேற்றுவதற்காக கெத்தாக பேசுகிறார்.

பிறகு மேடையில் இருந்து இறங்கி வந்து பாக்கியாவிடம் இனி என்னுடைய மூன்று செல்வங்கள் வந்து சேர்ந்திடுவாங்க. உன்னை பத்தி அவங்களுக்கு புரிஞ்சிடுச்சு. இனி நீ தனி மரமா நிற்கப்போற. எனக்கு பண்ணுன துரோகத்துக்காக நீ இனி கண்ணீர் சிந்துவ என்று டயலாக் பேசுகிறார்.
அதற்கு எழில் நான் உங்க கூட எந்த சூழ்நிலையிலும் வரமாட்டேன் என்று சொல்கிறார். ஆனால் கோபி எழில் பேசுவதை நக்கலாக பார்த்து சிரித்து விட்டு போகிறார். பிறகு பாக்கியாவும் எழிலும் அங்கிருந்து செல்கின்றனர். வீட்டுக்கு வந்த இனியா ஈஸ்வரி இடம் சொல்லி சந்தோஷப்பட அங்கு வந்த பாக்கியா, நீ டான்ஸ் கிளாஸ் சேர்ந்ததை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
நான் ஸ்டேஜில் இருக்கும் போது உனக்கு டான்ஸ் மாஸ்டர் அரேஞ்ச் பண்ண முடியலையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன் என்று சொல்ல, நீ சும்மா சொல்லாத உனக்கு பிசினஸ் ரெஸ்டாரண்ட் தான் முக்கியம். என்னை பற்றி யோசிக்க மாட்ட என்று சொல்கிறார். இதை கேட்ட பாக்கியா ஆடிப் போகிறார்.

எத்தனை முறை இனியாவிற்காக பாக்கியா உதவி செய்தாலும் அதை எல்லாம் மறந்து கொண்டு திமிராக நடந்து கொண்டார். அப்போது அங்கு வந்த செழியன் இனியாவிற்கு சப்போர்ட்டாக பேசி அவரை மாடிக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு ஜெனி நாளைக்கு 8 மணிக்கு நான், நீங்க, அமிர்தா, பாட்டி எல்லாரும் ஒரு இடத்திற்கு போறோம் என்று பாக்யாவிடம் சொல்கிறார்.
ஆனாலும் என்ன விஷயம் என்று சொல்லாமல் ஜெனி சஸ்பென்ஸ் வைத்துள்ளார். பிறகு ஜெனி சொன்னது போலவே அடுத்த நாள் காலையில் எல்லோரும் வெளியே கிளம்பி போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications