பாக்கியலட்சுமி: திருந்தாத பாக்யா! ஈஸ்வரிக்கு மறக்க முடியாத கிப்ட் கொடுத்த ஜெனி! சந்தோஷத்தில் அமிர்தா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 4ஆம் தேதிக்கான எபிசோடில் ஜெனி, பாக்யா மற்றும் ஈஸ்வரிக்கு மறக்க முடியாத பரிசு கொடுத்திருக்கிறார். வழக்கம் போல பாக்கியா தன்னுடைய குடும்பத்திற்காக யோசித்து அவமானப்படுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் அமிர்தாவும் ஜெனியும் பிளான் போட்டபடி பாக்யாவையும் ஈஸ்வரியையும் ரெஸ்டாரன்ட்க்கு கூட்டிட்டு வருகின்றனர். ஈஸ்வரிக்கும் பாக்கியாவிற்க்கும் எங்கே போகிறோம் என்று எதுவும் தெரியாததால் ரெஸ்டாரண்டை பார்த்ததும் பாக்கியா ஏதாவது ஆர்டர் இருக்கா? என்று கேட்கிறார்.

அதற்கு ஜெனி அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்களும் கொஞ்சம் பிரச்சனையில் இருக்கிறீங்க. அதனால இன்னைக்கு ஃபுல்லா ஜாலியா இருக்க போறோம் என்று சொல்ல, அதற்கு பாக்கியா இனியாவையும் கூட்டிட்டு வந்து இருக்கலாம் என்று சொல்கிறார்.
அதற்கு ஜெனி பேமிலி ட்ரிப் இன்னொரு ஒரு வாட்டி போகலாம் இப்ப நீங்க ரெண்டு பேரும் முதலில் ஃப்ரீயா இருங்க என்று சொல்லி ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார். பிறகு எல்லோரும் நடந்து கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்கியாவிற்கு செல்வி போன் செய்ய ஜெனி ஃபோனை வாங்கி பேசுகிறார்.

ஜெனி பேசுவது தெரியாமல் செல்வி, அக்கா உன் மருமகள்கள் உன்னை எங்க கூட்டிட்டு போய் இருக்காங்க என்று கேட்க, நாங்க எங்க போயிருக்கோம் என்று உங்களுக்கு தெரிஞ்சு ஆகணுமா? உங்க அக்கா வந்துவிட்டது சொல்லுவாங்க. ஏதாவது எமர்ஜென்சி இருந்தா மட்டும் போன் பண்ணுங்க மத்தபடி போன் பண்ணாதீங்க என்று ஃபோனை கட் செய்து விடுகிறார்.

பிறகு சின்ன வயதில் செழியனை கூட்டிட்டு வந்து விளையாடிய நினைவுகளை எல்லாம் ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது பாக்யா சாப்பாடு விட நன்றாக இருக்கிறது என்று ஈஸ்வரி கிண்டல் செய்கிறார். அதற்கு பாக்கிய செல்லமாக கோபித்துக் கொள்கிறார். இப்படி நான்கு பேரும் ரெஸ்டாரண்டில் கேரம்போர்டு விளையாடுவது, சாப்பிடுவது, டீ குடிப்பது என்று சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஆனாலும் பாக்கியா எத்தனையோ முறை அவமானப்பட்டாலும் செழியன் சாப்பிட்டானா? இனியா சாப்பிட்டானா? என்று வீட்டு ஞாபகத்தோடு இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications