பாக்கியலட்சுமி: கோபி போட்ட பிளானுக்கு ஆப்பு வைத்த பழனி.. எழில் சொன்ன வார்த்தை.. மகிழ்ச்சியில் பாக்யா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் எழிலுடைய பங்க்ஷனில் பாக்யா கலந்து கொள்ள கூடாது என்று கோபி பிளான் போடுகிறார். ஆனால் எழில், பாக்யா மற்றும் ஈஸ்வரியை தன்னுடைய பங்க்ஷனுக்கு அழைத்திருக்கிறார். அதேபோல பழனிச்சாமி மூலமும் பாக்கியாவிற்கு மகிழ்ச்சி செய்தி கிடைத்திருக்கிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் எழில் பாக்கியா வீட்டிற்கு வர ஈஸ்வரி சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஈஸ்வரி எதிரில் வந்து எழில் பார்த்துக் கொண்டே இருக்கிறார். பிறகு ஈஸ்வரி சாமி கும்பிட்டு முடித்ததும் எல்லாரையும் கூப்பிடுங்க நான் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லணும் என்று செழியன், ஜெனி, இனியா என எல்லாரும் வருகிறார்கள்.

ஒரு குட் நியூஸ சொல்ல போறேன். நாளைக்கு என்னுடைய படத்திற்கான பூஜை பத்து மணிக்கு நடக்கப்போகிறது என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். அதைக் கேட்டு பாக்கியா எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல, அதற்கு நான் வெற்றி பெற காரணம் நீதான் அம்மா என்று எழில் சொல்கிறார். அதோடு ஈஸ்வரி பாட்டியும் நீங்களும் தான் வந்து விளக்கேத்தி வைக்கணும் என்று எழில் சொல்ல, ஈஸ்வரி நான் வரமாட்டேன் என்று சொல்ல சொல்லிவிட்டு போய்விடுகிறார்.
ஈஸ்வரி போனதும் செழியன் நான் வேலைக்கு போகும்போது பாட்டி வரமாட்டேங்குறாங்க என்று சொல்ல, இனியா நான் காலேஜ் போகும்போதும் என்னை பாக்க மாட்டேங்குறாங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அவங்க அதிர்ஷ்டம் இல்லாதவங்கன்னு அவங்களே நெனச்சிட்டு இருக்காங்க என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
மறுபக்கத்தில் ப்ரொடியூசரை பார்க்க கோபி வந்திருக்கிறார். அப்போது பூஜைக்கான வேலை நல்லபடியாக நடந்துட்டு இருக்கிறது என்று ப்ரடியூசர் சொல்ல, சந்தோசம் என்று சொல்கிறார். அப்போது பூஜைக்கு இன்வைட் பண்ணக்கூடிய ஆள் பெயர் எல்லாம் இதில் இருக்கிறது யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா சொல்லுங்கள் என்று அவர் சொல்ல, அதற்கு ஈஸ்வரியின் பெயர் அடித்து இருப்பதை பார்த்து ஏன் எங்க அம்மா பெயர் அடிச்சிருக்கு என்று கோபி கேட்கிறார்.

அவங்க வரப் போறது இல்லனு எழில் கிட்ட சொல்லி இருக்காங்க என்று ப்ரொடியூசர் சொல்ல, அதற்கு இல்லை எங்க அம்மாவ கூப்பிட சொல்லுங்க ஆனால் ஒரு ரெக்யூஸ்ட் இதுல எழிலோட அம்மா இந்த பங்க்ஷனில் கலந்து கொள்ள கூடாது என்று சொல்ல ப்ரொடியூசர் அது எப்படி நான் சொல்ல முடியும்? உங்களுடைய அம்மா கலந்துக்கணும் நீங்க நினைக்கும் போது எழிலுடைய அம்மா கலந்துனும்னு அவன் நினைக்க மாட்டானா என்று கேட்கிறார்.
பிறகு நான் சொல்லிப் பார்க்கிறேன் என்று அரை மனதாக ப்ரொடியூசர் சொல்ல கண்டிப்பா நீங்க சொல்லித்தான் ஆகணும் என்று சொல்லிவிட்டு கோபி கிளம்பி போகிறார். பிறகு வெளியே வந்து ஏற்கனவே செழியனும் இனியாவும் என் பக்கம் வந்துட்டாங்க எழிலும் வந்துட்டானா? அதுக்கப்புறம் நீ யாருமில்லாமல் நடுத்தெருவில் கதறிய அழும் போது ஆறுதலுக்கு கூட யாரும் இருக்க மாட்டாங்க என்று கோபியே பேசி சந்தோஷப்பட்டு சிரித்து விட்டு அங்கிருந்து கிளம்பு கிளம்புகிறார்.

அடுத்ததாக பாக்கியா அவர்களுக்கு உதவி செய்த பேங்க் மேனேஜரிடம் சென்று அவருடைய ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்கு கொடுப்பதற்காக ஸ்வீட் ஆர்டரை எடுக்கிறார். அங்கு அவருக்கு 250 ஆர்டர் கிடைத்ததும் பாக்யா சந்தோஷமாக செல்வியுடன் பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது பழனிச்சாமி போன் செய்து எனக்கும் ஸ்வீட் வேண்டும் என்னுடைய வேலை ஆட்களுக்கும் நான் கொடுக்க வேண்டும் என்று ஆர்டர் கொடுக்கிறார். இதைக் கேட்டு பாக்கியா ரொம்பவும் சந்தோஷப்பட்டு என்னுடைய வாழ்க்கையில் இனி நல்லது தான் நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications