பாக்கியலட்சுமி: கோபி பிளானுக்கு எமனான நண்பன்.. எழில் குடும்பத்திற்கு பாக்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் பாக்கியலட்சுமி ஆர்டரை கெடுப்பதற்காக கோபி செய்யும் செயலை பார்த்து அவருடைய நண்பர் கோபப்படுகிறார். அதே நேரத்தில் எழில் குடும்பத்திற்கு பாக்கியா இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கோபி பாக்யா ரெஸ்டாரண்டுக்கு வேலைக்கு அனுப்பிய ஆனந்தனோடு பேசிக் கொண்டிருக்கிறார். கோபியின் நண்பரும் கூட இருக்கிறார். அப்போது கோபி தான் ஏற்கனவே வைத்த வலையில் பாக்யா விழுந்த பிறகும் மீண்டும் அதே இடத்தில் வந்து இருக்கிறா. இப்போ அவளுக்கு பெரிய அடி விழணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

அதாவது பிரியாணி ஆர்டர் பெரிய அளவில் பாக்கியாவிற்கு பிரச்சனையை கொடுத்த பிறகும் திருந்தாமல் என்னுடைய ஆளையே நம்பி பாக்கியா இப்போ ஸ்வீட் ஆர்டர் எடுத்திருக்கிறா. இதில் கஸ்டமர் மட்டுமல்ல பாக்கியா கூட இருக்கிறவங்களே பாக்கியாவை வெறுக்கிற மாதிரி செஞ்சுரு என்று சொல்ல, அதற்கு ஆனந்தன் நான் சூப்பரா செஞ்சுருவேன் நல்லா ஒரு பொருளை உருவாக்குவது தான் கஷ்டம்.. கெடுக்கிறது ஈஸி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதை பார்த்து கோபமான கோபியின் நண்பன் கோபியை திட்டுகிறார். நீ என்ன இப்படி வில்லனா மாறிட்ட? இதெல்லாம் தப்பு இப்படி பண்ணாத என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் கோபி நான் பாக்கியாவை பழிவாங்கி அவளை தனியா நிறுத்துற வரைக்கும் விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மறுபக்கத்தில் செழியன் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க அமிர்தா சாப்பிடுறீங்களா? என்று கேட்க கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று சொல்கிறார். அதோட நாளைக்கு போட்டுக்கிறதுக்கு டிரஸ் வைத்திருக்கிறாயா? என்று கேட்க அமிர்தா எனக்கு அதெல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல என்று சொல்கிறார்.
அதற்கு வாங்க டிரஸ் எடுக்க போகலாம் என்று கூப்பிட, அமிர்தா மறுத்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பாக்யா உள்ளே வருகிறார் என்ன சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று பாக்கியா கேட்டதும் செழியன் எல்லாருக்கும் டிரஸ் எடுத்துட்டு வரலாம்னு கூப்பிடுறேன் வர மாட்டேன்னு சொல்லிட்டு இருக்காங்க என்று சொல்ல நான் உங்க மூணு பேருக்கும் டிரஸ் எடுத்துட்டு வந்துட்டேன். இதை தான் போட்டுட்டு வரணும் என்று பாக்கியா டிரஸ்சை கொடுக்கிறார்.

பிறகு ஆயுத பூஜை ஆஃபர் எப்படி போயிட்டு இருக்கு என்று எழில் கேட்க, நான் நினைச்சதை விட நல்லாவே போயிட்டு இருக்குது. நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு நிற்க கூட நேரம் இல்லை. முதுகு வலிக்குது என்று சொல்ல எழில் நான் பாதி தூரத்தை கடந்துவிட்டேன் என்னோட லட்சியத்தில் மீதியும் சீக்கிரமா கடந்துருவேன். உங்கள உட்கார வைத்து நான் பார்த்துக்குவேன் என்று சொல்ல பாக்கியா சரி என்று சொல்லி சிரிக்கிறார்.
பிறகு படத்திற்கான பூஜை வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது எல்லோரும் அதற்காக தயாராக பாக்கியா ஈஸ்வரியை கூப்பிடுகிறார். ஆனால் ஈஸ்வரி நான் வரல என்று பிடிவாதம் செய்கிறார். நான் ரெஸ்டாரண்டுக்கு போயிட்டு வரேன் நீங்க எல்லாரும் முன்னாடி போங்க என்று பாக்கியா எல்லோரையும் அனுப்பி வைத்து விடுகிறார்.

இதைத் தொடர்ந்து ப்ரொடியூசரை சந்தித்த கோபி எழிலுக்கு விஷயத்தை சொல்லியாச்சா அதாவது பாக்கியா வரக்கூடாது என்ற விஷயத்தை சொல்லிட்டீங்களா என்று கேட்க அதற்கு ப்ரொடியூசர் அதெல்லாம் நேரம் பார்த்து சொல்றேன் என்று சொல்கிறார். பிறகு எழிலின் ஃபங்ஷனுக்கு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் வர கோபி கையில் பொக்கே உடன் வருகிறார்.
ஆனாலும் அவரை பார்த்து எழில் கோபப்படுகிறார். அப்போது கோபி பொக்கேவை கொடுக்க, எழில் வாங்க மறுக்கிறார். ஆனால் அமிர்தா சொன்னதால் வேறு வழியில்லாமல் பொக்கேவை வாங்கிக் கொள்கிறார். அதைத் தொடர்ந்து ஒரு நபர் வந்து டைரக்டர் சார் உங்களை ப்ரொடியூசர் சார் கூப்பிடுறாங்க என்று சொன்னதும் இனியா டைரக்டர் சார் போயிட்டு வாங்க என்று கிண்டல் செய்கிறார்.
அதற்கு எழில் எல்லாரும் வெயிட் பண்ணுங்க இப்ப வரேன் என்று சொல்லிவிட்டு சந்தோஷமாக கிளம்பி போகிறார். அப்போது ப்ரொடியூசர் எழிலிடம் படம் எடுப்பது பற்றி நல்லவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் சந்தோஷமாக எழில் அவர் காட்டும் அக்ரீமெண்ட் பத்திரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications