Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியாவுக்கு ஆதரவாக குடும்பத்துடன் சண்டையிட்ட ராதிகா.. ஜெனி எடுத்த முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நவம்பர் 8ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.

அதில் ஜெனி வீட்டை விட்டு கிளம்பி போனதற்காக மொத்த குடும்பமும் பாக்யாவை திட்டுகின்றனர். அதற்கு பாக்கியாவிற்கு ஆதரவாக ராதிகா சண்டைக்கு நிற்கிறார்.

Baakiyalakshmi Serial November 8th 2023 promo and episode full episode

அதே நேரத்தில் செழியன் தன்னை ஏமாற்றியது குறித்து அதிர்ச்சியில் ஜெனி தன்னுடைய அம்மா வீட்டில் அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் ஜெனி இனிமேல் நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என் குழந்தைக்கும் இந்த வீட்ல இருக்குறவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வீட்டை விட்டு அழுது கொண்டு கிளம்பி போக எல்லோரும் தடுத்து பார்த்தும் கேட்கவில்லை. அப்போது செழியன் அழுது கொண்டு அம்மா அவளை போக வேணாம் என்று சொல்லுங்க என்று பாக்யாவிடம் சொல்ல, அதனால் கோபத்தில் பாக்கியா எல்லாம் உன்னால தான் என்று செழியனை போட்டு அடிக்கிறார்.

அதே வேளையில் ஜெனி பின்னால் செல்வி ஓடி சென்று ஜெனியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் அதற்கு ஜெனி என்னால் வர முடியாது என் மேல உங்களுக்கு பாசம் இருந்தா நீங்க போயிருங்க என்று சொல்ல, செல்வி என்ன சொல்வதென்று தெரியாமல் கிளம்பி விடுகிறார்.

Baakiyalakshmi Serial November 8th 2023 promo and episode full episode

அந்த நேரத்தில் அங்கு வரும் ராதிகா ஜெனி குழந்தையோடு அழுது கொண்டு போவதை பார்த்து, என்ன ஆச்சு செழியன் உன்கூட வரலையா? என்று கேட்க, அதற்கு ஜெனி அவனை பத்தி கேட்காதீங்க என்று ரோட்டில் வைத்து அழுகிறார். அதனால் ராதிகா நிலைமையை புரிந்து கொண்டு சரி கார்ல இரு நான் உன் வீட்டில் கொண்டு விடுறேன் என்று சொல்லி காரில் கூட்டிக்கொண்டு போகிறார்.

காரில் போகும்போது ஜெனியிடம் மீண்டும் அதிகம் விசாரிக்க செழியன் என்னை ஏமாத்திட்டான் என நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதைத் தொடர்ந்து ஜெனியின் வீட்டிற்கு ராதிகாவும் சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

அதற்குப் பிறகு ஜெனியின் அம்மா என்ன ஆச்சு என்று ஜெனியிடம் கேட்க ஜெனி நடந்ததை எல்லாம் சொல்லி அழுகிறார். இன்னொரு பக்கத்தில் ஜெனி வீட்டுக்கு போயிட்டாளா? இல்லையா? என தெரியலையே என்று வீட்டில் எல்லோரும் பதட்டத்தில் இருக்க கோபியும் ஈஸ்வரியும் பாக்யாவை திட்டுகின்றனர்.

Baakiyalakshmi Serial November 8th 2023 promo and episode full episode

அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் ராதிகா கையைத் தட்டிக் கொண்டே உள்ளே வருகிறார். கோபி இங்கே என்ன நடக்குதுன்னு தெரியாம நீ வேற இப்படி பண்ணாத என்று சொல்ல, எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தான் சொல்றேன். நீங்க தப்பு செய்த செழியனை திட்டாமல் பாக்யாவை திட்டுறீங்க? தப்பு எல்லா ஆம்பளைங்களும் பண்ணிக்கிட்டு பழியை பொம்பளைங்க மேல போடுறீங்களா? என்று விளாசி தள்ளுகிறார்.

அப்போது ஈஸ்வரி உன் வாயை மூடு. நீயும் அந்த மாலினியும் ஒன்று தாண்டி என்று சொல்ல, அதற்கு நோ என்று கத்தும் ராதிகா.. நானும் மாலினியும் ஒன்னு இல்ல. கோபியும் செழியனும் தான் ஒன்று என்று சொல்கிறார். அதோடு ஈஸ்வரி இவளை நீ அடக்கி வைக்க மாட்டியா? இப்படி பேசிக்கிட்டு இருக்கா கூட்டிட்டு போ என்று கத்த உடனே கோபி ராதிகாவை உள்ளே இழுத்து போகிறார்.

அதற்கு பிறகும் ஈஸ்வரி பாக்யாவை திட்டிக் கொண்டிருக்க அந்த இடத்தில் பாக்கியா அவருக்கு ஆதரவாக எழில், இனியா, அமிர்தா என எல்லோரும் நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+