பாக்கியா வீட்டுக்கு வந்ததும் கோபி சொன்ன வார்த்தை.. கணேசனால் வந்த பிரச்சனை.. கண்ணீரோடு ஈஸ்வரி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் அக்டோபர் 21 ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் கோபியை மீண்டும் ஈஸ்வரி பாக்யாவின் வீட்டிற்கு கூட்டிட்டு வர வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் கணேசன், நிலா அமிர்தாவோடுதான் ஊருக்கு வருவேன் என்று வீடு எடுத்து தங்கி பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் கணேஷ், நிலா புகைப்படத்தை வைத்து குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்கிறார். இன்னும் கொஞ்ச நாளில் நீ என்கூட வந்துருவ என்று பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலேயே வீட்டு கதவு தட்டப்படுகிறது.அப்போது வெளியே பார்க்கும்போது கணேசனின் அம்மாவும் அப்பாவும் நிற்கின்றனர். அவர்கள் இங்கே ஏன் நீ வீடு எடுத்து தங்கி இருக்க? நம்ம வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிடுகின்றனர்.
அதற்கு கணேசன் அமிர்தாவோடு நிலாவை கூட்டிட்டு தான் நான் வருவேன் என்று அடம் பிடிக்கிறார். அதற்கு அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. அதோடு நீங்க இந்த வீட்டை விட்டு வெளியே போங்க என்று கணேசன் கோபமாக திட்ட, அதற்கு நாங்க சொல்றத தான் நீ கேட்கல ஆனா நாங்களாவது உன் கூடவே இருக்கோம் என்று பெற்றவர்கள் கெஞ்ச அதற்கு கணேசன் வேறு வழி இல்லாமல் சம்மதம் சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டில் ஈஸ்வரி நான் கோபியை கூட்டிட்டு வர போறேன் என்று சொல்ல, நீங்க அப்படி செஞ்சா நான் கிளம்பிடுவேன் என்று பாக்யா சொல்ல, அதற்கு எழில் பாக்யாவை திட்டுகிறார். இது என்னுடைய வீடு நான் இங்குதான் இருப்பேன் என்று சொல்லுமா, எதுக்காக வீட்டை விட்டு போறேன்னு சொல்லுறா? என்று திட்ட, அப்போதும் பாக்யா நான் என்னுடைய முடிவுக்கு உறுதியாக இருக்கிறேன்.
நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நீ மட்டும் எழில் கல்யாணத்துக்கு சப்போர்ட் செய்த செழியனுக்கும் நீ தானே கல்யாணம் பண்ணி வச்ச. உன் பசங்களுக்கு ஒண்ணுன்னா நீ தானே துடிச்சுக்கிட்டு முன்னாடி நின்ன என்று கேள்வி கேட்க, அதற்கு ராமமூர்த்தி அவங்க ரெண்டு பேரும் மனசுக்கு பிடிச்ச பொண்ணை பிடிவாதமா இருந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதற்கு பாக்கியா சப்போர்ட் செஞ்சா.
உன் பையன மாதிரி பொண்டாட்டிக்கு துரோகம் செஞ்சாங்களா? என்று கேள்வி கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி என்ன வேணாலும் இருக்கட்டும். இப்ப நான் அம்மாவா அவன் கூட இருப்பேன் என்று கிளம்புகிறார். அங்கே ராதிகா வீட்டில் ராதிகா கோபி இடம் நான் உங்களை பார்த்துக்களனு சொல்லி உங்க அம்மா சொன்னப்போ நீங்க வாயை மூடிக்கிட்டு நின்னீங்களே, நான் நல்லா தான் பாத்துக்குறேன்னு சொல்ல உங்களுக்கு மனசு வரலையா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் ஈஸ்வரி வீட்டிற்கு போக உடம்பு சரியில்லாமல் இருக்கவன்கிட்ட இப்படியா சண்டை போடுவ என்று திட்டுகிறார். அதோடு ராதிகாவின் அம்மாவையும் நீ உன் பையன் வீட்டுக்கு போக வேண்டியது தானே இங்கு எதுக்கு வந்து இருக்கா என்று கேட்க, அதற்கு ராதிகாவின் அம்மா நான் என் பையன் வீட்டுக்கு போயிட்டா நீங்க இங்க வந்து இருக்கலாம் என்று பார்த்தீர்களா? என்று பதிலடி கொடுக்கிறார்.

இப்படியாக அவர்களுக்குள் வாக்குவாதம் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் பாக்யா வீட்டில் எல்லோரும் ஈஸ்வரி உண்மையிலே கோபியை கூட்டிட்டு வந்து விடுவாரோ என்று பயத்தில் இருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி வீட்டு வாசலில் வந்து நிற்கிறார் அதை பார்த்த ராமமூர்த்தி நக்கலாக என்ன உன் பையனோட வரேன்னு சொன்னியே இப்போ என்ன ஆச்சு என்று கேட்க, கோபி வாடா என்று கூப்பிட கோபி அங்கு வருகிறார். அதைபார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications