பாக்கியலட்சுமி: காலேஜில் இனியாவுக்கு கிடைத்த அதிர்ச்சி.. சந்தேகப்படும் பழனிச்சாமி.. பாக்யா வார்னிங்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் செப்டம்பர் 27ஆம் தேதிக்கான எபிசோடில் இனியா காலேஜ் டான்ஸ் போட்டியில் தேர்வாகி இருக்கிறார். ஆனால் ஈஸ்வரி மற்றும் பாக்யா அவருக்கு அதிர்ச்சி கொடுக்கின்றனர். மறுபக்கத்தில் பழனிச்சாமி பாக்யாவின் ஹோட்டலில் புதியதாக சேர்ந்த செஃப் மீது சந்தேகப்படுகிறார்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாக்யாவிடம் செழியன் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க நீ எதற்காக குடிச்சிட்டு வந்த என்ற காரணத்தை பாக்யா கேட்டதும், நம்ம எல்லாரையும் வழி நடத்திட்டு இருந்தது தாத்தா தான் இப்போ அவர் இல்லை. எழிலும் போயிட்டான். எங்கள் குடும்பத்திற்காக இருக்கிற ஒரே ஆம்பள நான் தான். எனக்கு எப்படி இந்த குடும்பத்தை பார்க்க போறேன் என்ற டென்ஷனாக இருந்தது என்று சொல்ல,

அப்படின்னா அப்படி ஒரு டென்ஷன் உனக்கு வேணாம். உன் மேல எந்த பாரத்தையும் நாங்க வைக்க மாட்டோம். நீ ஜெனியையும் குழந்தைகளையும் மட்டும் நல்லா பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு இந்த குடும்பத்தை பார்த்துக்க நானும் பாட்டியும் இருக்கோம் என்று சொல்லி விடுகிறார். அதோடு இன்னொரு தடவை இந்த மாதிரி காரணத்தை சொல்லிட்டு நிற்காத தோளுக்கு மேல வளர்ந்த பையன்னு பார்க்க மாட்டேன் என்று பாக்கியா வார்னிங் கொடுக்கிறார்.
மறுபக்கத்தில் இனியா ரிசல்ட் காக வெளியே காத்துக் கொண்டு இருக்க அவருடைய தோழிகள் உள்ளே போகலாம் என்று வலுக்கட்டாயமாக கூட்டி செல்கின்றனர். எனக்கு நான் செலக்ட் ஆகணும்னு ஆசையா இருக்கு ஆனா நம்பிக்கை இல்லை என்று சொல்ல, நீ நல்லா தான் ஆடி இருக்க வா என்று பிரெண்ட்ஸ் கூட்டிக்கொண்டு செல்கின்றனர். நான்கு பேரை செலக்ட் செய்ததும் நம்முடைய பேரு இருக்காது என்று இனியா வருத்தப்பட்டு வெளியே நடந்த செல்கிறார்.

அந்த நேரம் பார்த்து இதுவரைக்கும் கூப்பிட்டதெல்லாம் மத்த காலேஜ் ஆனா ஐந்தாவது கூப்பிடுற பெயர் இந்த காலேஜ் நபர் என்று சொல்கின்றனர். அதோடு இனியா என்று பெயரை சொன்னதும் அங்கிருக்கும் மாணவர்கள் எல்லோரும் இனியா என்று கத்த, ஒன்று புரியாமல் இனியா கண்கலங்கி நிற்கிறார். அடுத்த கட்டத்தில் பாக்கியா ரெஸ்டாரண்டில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போது செல்வி வந்து ஊர் கதைகளை பேசிக் கொண்டிருக்க பாக்கியா, உனக்கு வேலை இல்லையா எதுக்காக இப்படி பேசிட்டு இருக்குற என்று கேட்க உள்ளே செஃப் எந்த வேலையும் பண்ண விடமாட்டேன் என்கிறார். அவர் செய்கிறதை வேடிக்கை பார்த்துட்டு தான் நின்னுட்டு இருக்கிறோம். உதவி கேட்டால் நானே பண்ணிக்கிறேன் என்று சொல்லிக்கிறாரு. நீயே வந்து பாருக்கா என்று செல்வி கூப்பிட, அங்கு புது ரசகுல்லா செய்திருக்கிறார்.
அது எப்படி இருக்கிறது பாருங்க என்று டேஸ்ட் பண்ண கொடுக்க, செல்வி அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு சூப்பரா இருக்கு என்று சொல்ல, நீங்க எதுவும் சொல்லலையே மேடம் என்று கேட்க, பாக்யா நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு நான் செய்யுறதை விட இதில் ஏதோ ஒரு பிளேவர் எக்ஸ்ட்ரா இருக்கு என்று கேட்க, அதை மட்டும் கேட்காதீங்க அது என்னோட சீக்ரெட் என்று செஃப் சொல்லிவிடுகிறார். அந்த நேரத்தில் பழனிச்சாமி அங்கு வர இவர்தான் புதுசா அப்பாயிண்ட்மெண்ட் பண்ணி இருக்கிற செஃப் என்று பாக்கியா அறிமுகம் செய்து வைக்கிறார்.

பழனிசாமியும் அந்த ரசகுல்லாவை சாப்பிட்டு பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டுகிறார். அதோடு இதற்கு முன்பு எங்க வேலைக்கு சேர்ந்தீங்க என்று விசாரிக்க அவர் முன்னுக்கு பின்னாக பேசுகிறார். அப்போது பாக்கியாவிடம் புதுசா வேலைக்கு சேர்ந்ததினால் எல்லாரும் இப்படித்தான் இருப்பாங்க ஆனால் இவங்க மேல ஒரு கண்ணு வச்சுக்கோங்க என்று அட்வைஸ் கொடுக்கிறார்.
அடுத்ததாக வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது இனியா வீட்டில் எப்படி டான்சில் செலக்ட் ஆனோம் என்று சொல்றது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு டான்ஸ் காம்பெட்டிஷனில் தான் செலக்ட் ஆகி விட்டேன் என்று சொல்கிறார். இனி அடுத்ததாக நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோவில் பார்ட்டிசிபேஷன் பண்ண வேண்டும் என்று சொல்ல ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் டிவில வந்தா நல்லா இருக்காது என்று மறுப்பு தெரிவித்து விடுகிறார். இதனால் இனியா அதிர்ச்சி அடைகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications