TRP-க்காக இப்படி பண்ணலாமா? கோபத்தில் “பாக்கியலட்சுமி” சுசித்ரா.. இனி இதுதான் கதையா..?
சென்னை: விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பாக்கியா கேரக்டரில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார்.
இவர் ஒரு சில திரைப்படங்களிலும், பல ஷார்ட் பிலிம்களிலும் ஏற்கனவே நடித்திருந்தாலும் சின்னத்திரையில் பெரிய அளவில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பேட்டியில் தான் இதுவரைக்கும் எந்த பேட்டியும் கொடுத்ததே இல்லை. அதற்கு காரணம் இதுதான் என்று சில ரகசியத்தை உடைத்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பலதரப்பட்ட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. காரணம் இந்த சீரியலில் கணவர் தன்னை விட்டு பிரிந்து போனாலும் ஒரு பெண் தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக பல போராட்டங்களையும் அவமானங்களையும் தாண்டி அடுத்தடுத்து சாதித்துக் கொண்டே இருக்கிறார்.
பெண் என்றால் வீட்டிற்குள்ளே சமைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை தனக்கு இருக்கும் திறமையால் பலபேரை வாழவைக்கலாம் என்று எடுத்துக்காட்டாக பாக்கியலட்சுமி வாழ்ந்து வருவதாலே பல ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதிலும் பலர் பாக்யா போல இருக்க வேண்டும் என்றெல்லாம் பாக்கியாவை ஃபாலோ பண்ணுவதாக பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் அதிகமான ரசிகர்களை பாக்கியாவாக கவர்ந்த நடிகை சுசித்ரா தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் இதுபோல பல பிரச்சனைகளையும் தாண்டிக் கொண்டுதான் இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறாராம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சினிமா துறையில் தான் இருந்தாலும் அதிகமாக பேட்டி கொடுப்பதில்லை என்றும் அதற்கு காரணம் நாம் ஏதாவது பேசினால் அதை தவறாக ஒரு அர்த்தத்தில் ஒரு செய்தியாக மாற்றி விடுகிறார்கள்.
சில youtube சேனல்கள் தங்களுடைய டிஆர்பிஐ கூட்டி கொள்வதற்காக கண்டமேனிக்கு பக்கத்தில் இருந்து பார்த்தது போல அவர்களாக ஏதாவது நடிகைகளை பற்றி எழுதி விடுகிறார்கள். அதனால் நடிகர்களின் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை வரும் என்பதை யோசிக்கவே மாட்டார்கள். அவர்கள் மீது எனக்கு ஏகப்பட்ட கோபம் வரும். நான் நடிப்பதற்காக இங்கே தனியாகத்தான் வந்திருக்கிறேன். என்னுடைய குடும்பம் எல்லாம் வேறொரு இடத்தில் இருக்கிறது. ஆனால் இந்த மாதிரி தவறாக ஒருவரைப் பற்றி எழுதுவதால் அவர்கள் நம்பதானே செய்வார்கள்.

உண்மையாக ஏதாவது தெரிந்தால் மட்டும் பிறரை பற்றி நீங்கள் செய்தி கொடுங்கள். இல்லை என்றால் விட்டு விடுங்கள். உங்கள் லாபத்திற்காக அடுத்தவர்களை இரையாக மாற்றாதீர்கள். நாங்கள் இதை ஒரு வேலையாக தான் செய்கிறோம். நடிப்பு எங்களுக்கு வேலை அவ்வளவு தான். ஆனால் அதை எங்களுடைய நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் சுசித்ரா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து இனி பாக்கியலட்சுமி சீரியலில் இனியா அதிகமாக மார்க் எடுத்து மாநில அளவில் வெற்றி பெற்று அதற்கு காரணம் என்னுடைய அம்மா தான் என்று மீடியா முன்பு சொல்வராக இருக்கும். அதை கேட்டு கோபி மேலும் பாக்கியா மீது கோபப்படுவார். அதே நேரத்தில் இனியாவை வைத்து பாக்யாவின் குடும்பத்தை பிரிப்பதற்கு பிளான் போடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications