வீடு விஷயத்தில் கோபி எடுத்த முடிவு... அமிர்தாவின் எதிர்பாராத பதில்.. பாக்யாவுக்கு கிடைத்த அதிர்ச்சி!?
வீடு விஷயத்தில் இன்றோடு நான் கொடுத்த கேடு முடிந்து விட்டது நாளை பணம் எங்கே என நான் கேட்பேன் என்று கோபி கூறுகிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மற்றும் அமிர்தா இருவரிடமும் இனி தான் உங்களுக்கு பிரச்சனை இருக்கிறது. பலரும் உங்களை பார்ப்பார்கள் அதனால் நல்லபடியாக வாழ வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
வீடு விஷயத்தில் இனி கோபி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ராமமூர்த்தி பயத்தில் இருக்கிறார்.
இனியா ராமமூர்த்தி இடம் நாம நம்ம வீட்டுக்கே போயிடலாமா என கேள்வி கேட்கிறார்.
தான் நாளை கண்டிப்பாக பணம் என்ன ஆச்சு என வீட்டிற்கு வந்து கேட்பேன் இல்லை என்றால் அனைவரையும் வெளியேற்றுவேன் என்று கோபி மிரட்டுகிறார்.

நல்லபடியா வாழனும்
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் அமிர்தா மற்றும் எழில் பாக்யாவுக்கு நன்றி கூறுகின்றனர். எங்களால உங்களுக்கு வீட்டில் எவ்வளவு பிரச்சனை என்று சொல்ல, அதற்கு பாக்கியா அதுவெல்லாம் எப்போதும் நடப்பது தான் என்று இருவருக்கும் ஆறுதல் சொல்லி நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும். உங்களுடைய வாழ்க்கை உங்களை மாதிரி கல்யாணம் பண்ணவங்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கணும். இதுக்கு அப்புறம் தான் பிரச்சனை ஆரம்பிக்க போகிறது. அது மட்டுமல்லாமல் எல்லோரும் உங்களை கவனிக்க தொடங்குவார்கள் என்று அறிவுரை கூறுகிறார்.

அமிர்தா கூறிய வார்த்தை
பிறகு ஜெனி போல அன்பாக இருந்து அன்பால் ஜெயிக்க வேண்டும் என்று சொல்ல, அமிர்தா நான் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை எனக்கு கிடைக்காதா? என்று நினைத்தேன். கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன் ஆனால் நீங்கள் எனக்கு கிடைக்க வைத்து விட்டீர்கள் எவ்வளவு பிரச்சனையோ வந்த பிறகும் என்னை விட்டு விடாமல் எனக்காக போராடி இருக்கீங்க. கண்டிப்பா நான் அப்படியே நடந்து கொள்வேன் என்று அழுதபடி பாக்யாவை கட்டி பிடிக்க, எழிலும் நன்றி கூறி பாக்யாவின் தோளில் சாய்ந்து கொள்கிறார். பிறகு இருவரையும் ரூம்பிற்க்கு அழைத்து சென்று, நீங்க இங்கே தங்கிக்கோங்க ரெஸ்ட் எடுங்க என சொல்லி பாப்பாவை தூக்கிக்கொண்டு பாக்யா கீழே வருகிறார்.

அமிர்தாவின் நம்பிக்கை
பிறகு எழில் உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருக்கா? ஏற்கனவே நான் உங்களை விட்டுட்டு பணத்துக்காக இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் என்று சொல்லிவிட்டேனே இப்போது நீங்க என்ன நம்புறீங்களா? என்று கேட்க அமிர்தா உங்க மேல முழு நம்பிக்கை இருக்கு என்று கூறுகிறார். அதற்கு பிறகு எழில் கீழே இறங்கி வர, அங்கே ஈஸ்வரி, தாத்தா, செழியன் மூவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது எழிலை பார்த்ததும் ஈஸ்வரி எழுந்து செல்ல எழில் ஈஸ்வரியை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். என்கிட்ட பேசுங்க பாட்டி உங்களை என்னால சமாதானம் படுத்த முடியாது என்று கூறுகிறார்.

தாத்தாவின் வருத்தம்
அதுக்கு ஏன் முடியாது என் சம்மதம் இல்லாமல் உன்னால் கல்யாணம் பண்ண முடிஞ்சது. உன்கிட்ட என்னால பேசாம இருக்க முடியாதா? அத்தனை பேர் முன்னாடி என்னை நீ அவமானப்படுத்தின என்று திட்டுகிறார். பிறகு ராமமூர்த்தி இந்த வீட்டில தினம் ஒரு பிரச்சனை நடக்கணும்னு வேண்டுதலா? இந்த குடும்பம் எவ்வளவு சந்தோஷமாக நிம்மதியா இருந்து எவ்வளவு நாளாச்சு? என ஃபீல் பண்ணுகிறார். பிறகு உங்களுக்கெல்லாம் நான் பாவியாயிட்டனா என்று ஈஸ்வரி திட்டிக்கொண்டு நாளைக்கு கோபி வந்து நிற்பான். அவன் கொடுத்த கேடு இன்னையோடு முடிகிறது என்று சொல்லி கோபத்தோடு உள்ளே சென்று விடுகிறார். ராமமூர்த்தி பிள்ளையார் சுழி போட்டது என் பிள்ளை இனி என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன் என வருத்தப்படுகிறார்.

கோபியின் திமிரான பதில்
அடுத்ததாக ராமமூர்த்தி கோபியின் வீட்டில் இருக்க, அங்கே இனியாவும் இருந்து கொண்டு இனியா தாத்தாவிடம் நம்ம வீட்டுக்கு போயிடலாமே என கேட்க, அதற்கு கோபி டாடிய விட்டுட்டு எங்கவும் போக கூடாது என்று சொல்கிறார். பிறகு ராமமூர்த்தி வீடு பற்றி பேச நாம எல்லாரும் இனி அந்த வீட்டுக்கு தான் போக போறோம். அதற்கான நேரம் வந்துவிட்டது என்று இனியாவிடம் கோபி கூறுகிறார். அம்மாவும் என்னோடு வந்து விடுவாங்க செழியன் ஜெனிக்கு என்ன செய்யணுமோ அதையும் நான் செஞ்சு விடுவேன். ஆனால் என்கிட்ட சவால் விட்ட எழில் மற்றும் பாக்கியா வீட்டை விட்டு போகட்டும் என்று திமிராக பேசுகிறார். நான் கொடுத்த கேடு இன்றோடு முடிந்து விட்டது. நாளைக்கு போய் நிற்பேன், பணத்தை கேட்பேன். வீட்டை காலி பண்ண சொல்லுவேன் என்று சொல்ல, இனியா மற்றும் ராமமூர்த்தி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications