கோபியிடம் வேண்டுகோள் வைத்த ஈஸ்வரி.. அவமானப்படுத்திய ராதிகா.. பாக்யாவிற்கு கடைசியில் கிடைத்த அதிர்ச்சி
கோபியிடம் ஈஸ்வரி வீட்டை நீ கேட்கக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தாலும் கடைசியில் கோபி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் ஈஸ்வரி கோபியின் வீட்டிற்கு வந்து கோபியிடம் வீட்டை நீ திரும்ப கேட்காதே என்று கூறுகிறார்.
ராமமூர்த்தியும் ஊரில் இருக்கும் தன்னுடைய சொத்து முழுவதையும் உனக்கு எழுதி தருகிறேன் என்று கூறுகிறார்.
கடைசி நேரத்தில் வீட்டிற்கு வந்த கோபி நான் கொடுத்த கெடு இன்றோடு முடிந்து விட்டது என்று அனைவரையும் மிரட்டுகிறார்.

ஜெனியின் ஆறுதல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசொட்டின் ஆரம்பத்தில் அமிர்தா ரூம்பில் குழந்தையோடு அமர்ந்திருக்க, ஜெனி அமிர்தாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, பிறகு பாப்பாவுக்கு ஊட்டி விட்டுக் கொண்டு அமிர்தாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அமிர்தா, நீங்களும் பாக்கியா அம்மா மாதிரி தான் ரொம்ப இனிமையாக இருக்கிறீங்க, பாசமாகவும் இருக்கிறீங்க என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது கீழே வர வேண்டியதுதானே என்று ஜெனி கேட்க, இல்லை எனக்கு எல்லாரையும் ஃபேஸ் பண்ணுவதற்கு பயமாக இருக்கிறது என்று சொல்ல, கவலைப்படாதீங்க பாட்டி பேசியதைப் பற்றி எல்லாம் நினைத்து கவலைப்படாதீங்க. அவங்க இப்படித்தான் பிடிக்காத விஷயம் எது நடந்தாலும் கோபப்படுவார்கள். நானும் ஆரம்பத்தில் ரொம்ப பயந்தேன் அதுக்கப்புறம் அப்படியே சரியாயிடுச்சு என்று கூறுகிறார்.

ஈஸ்வரியின் கோபம்
பிறகு எழிலும், பாக்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஈஸ்வரி அங்கே வந்து கோபி கொடுத்து டேட் முடிஞ்சு போச்சு என்ன பண்ண போறீங்க என்று திட்டுகிறார். அதே நேரத்தில் செல்வி, அமிர்தா மேலே இருப்பதால் அவரை கீழே கூட்டிக்கொண்டு அந்த இடத்திற்கு வர அங்கு ஈஸ்வரி அமிர்தாவை பார்த்து முறைக்கிறார். பின்பு வேக வேகமாக வீட்டை விட்டு வெளியே செல்கிறார். பாக்கியா மற்றும் செல்வி இருவரும் ஈஸ்வரியை அழைத்துக் கொண்டே பின்னாடி செல்ல ஈஸ்வரி கோபி வீட்டிற்கு செல்கிறார். இதை பார்த்த பாக்கியா அதிர்ச்சியாக நிற்கிறார்.

ராதிகா கொடுத்த பதில்
பிறகு வீட்டு வாசலில் ஈஸ்வரி நிற்பதை பார்த்து கோபி எனக்கு தெரியும்மா. என் மனசு சொல்லிக்கிட்டே இருந்தது நீங்க கண்டிப்பா இங்க வருவீங்க என்று, இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த வீட்டில் இருக்க உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும் என்று கூறிக்கொண்டு அவரை வீட்டிற்குள் அழைக்க, ராதிகாவிடமும் ரகசியமாக உள்ளே கூப்பிடு என்று கூறுகிறார். பின்பு ராதிகாவும் உள்ளே கூப்பிட நான் இந்த வீட்டில் தங்க வரவில்லை. நான் உன்கிட்ட வீடு விஷயமாக பேசிட்டு போக வந்தேன் என்று கூறுகிறார். அதற்கு ராதிகா தெரியும் என்று குத்தலாக பேச அதைக் கேட்டு ராமமூர்த்தி மற்றும் ஈஸ்வரி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்கியா துரோகம் செய்தாராம்
பிறகு கோபி, ராதிகா அமைதியாக இரு என்று சொல்ல நீ அந்த வீட்டை திரும்பி கேட்கக் கூடாது என்று ஈஸ்வரி சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பாக்கியா நமக்கு நிறைய துரோகம் பண்ணி இருக்கா. அதை எப்படி நான் மன்னிக்கிறது என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி அவ செஞ்சதை நாமும் திருப்பி அவளுக்கு செய்யக்கூடாது எனக்காக நீ அந்த வீட்டை கேட்க கூடாது என்று சொல்கிறார். இதை கேட்ட ராதிகா என்னதான் பாக்யா செஞ்சாலும் இவங்க எல்லோரும் பாக்கியவிற்கு தான் சப்போர்ட் பண்றாங்க என்று மனதிற்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்.

ராமமூர்த்தியின் டீல்
ஈஸ்வரியின் வேண்டுகோளை கோபி ஏற்காததால் ராமமூர்த்தி ஊர்ல இருக்கிற எல்லா சொத்தையும் உன் பேருக்கு மாத்தி தரேன். நீ அதுக்கு பதிலா அந்த வீட்டை விட்டு விட வேண்டும் என்று சொல்ல, யோசித்து இது நியாயமாக படுது யோசிக்கிறேன் என்று கோபி கூறுகிறார். பிறகு இரவு வீட்டில் எல்லோரும் இருக்கும்போது வீட்டிற்கு வரும் கோபி, எழில் மற்றும் பாக்கியாவை கூப்பிடுகிறார். உங்களுக்கு கொடுத்த ஒரு மாத டைம் முடிஞ்சு போச்சு. என்ன பண்ண போறீங்க? என்ன பண்ணலாம்? பணம் கொடுக்கிறதா சொன்னீங்களே என்ன ஆச்சு? என கேட்கிறார்.

கோபிக்கு சப்போர்ட் செய்யும் ஈஸ்வரி
அதோடு பாக்கியாவை கோபி திட்டிக் கொண்டிருப்பதால் எழில், என் மீது தான உங்களுக்கு கோபம். என்னை மட்டும் திட்டுங்க, அம்மாவை திட்டாதீங்க என்று சொல்ல, உங்க அம்மா மேலேயும் எனக்கு அதிகமா கோவம் இருக்கிறது என்று கோபி சொல்ல, ராமமூர்த்தி எதற்காக வந்த விஷயத்தை பேசாமல் ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க, அதான் நான் உனக்கு சொத்து எல்லாத்தையும் எழுதி தரேன் என்று சொல்லிட்டன்ல என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகிறார். பிறகு கோபி பாக்யாவிடம் என்ன உனக்கு அதிர்ச்சியா இருக்குதா? சொத்தை எல்லாம் நமக்கு எழுதி தரேன்னு சொல்லிட்டு இப்போ இப்படி மாத்தி பேசுறாருன்னு பாக்குறியா? என்று சொல்ல, நான் சொத்துக்காக ஆசைப்படுகிறவள் இல்லை என்று உங்களை தவிர இருக்கிற எல்லாருக்கும் தெரியும் என்று சொல்ல, அதற்கு ஈஸ்வரி நீ இப்படி வார்த்தைக்கு வார்த்தை திருப்பி பேசிக்கிட்டே சவால் விட்டுகிட்டே பிரச்சனையே பெருசா ஆக்கிக் கொண்டே இருங்க. நீயும் உன் மகனும் சவால் விட்டுட்டு சும்மா இருந்துட்டீங்க. ஆனா நான் இன்னைக்கு காலையில அவங்கிட்ட போயி இந்த வீட்டை கேட்காதே என்று பேசிட்டு வந்து இருக்கேன். அவன் நல்ல முடிவோட வந்திருந்தாலும் நீயே பேசி அவனை கெடுத்துருவ போல என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications