Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டை விட்டு போக சொன்ன கோபிக்கு பாக்கியா கொடுத்த பதில்...திட்டி தீர்க்கும் ஈஸ்வரி.. இனியாவின் செயல்

கோபி எனக்கு இன்னும் 20 லட்சம் வேண்டும் என்று சொல்ல அதற்கு பாக்யா நான் ஆறு மாதங்களுக்குள் தருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் நான் கொடுத்த கெடு முடிந்துவிட்டது வீட்டை விட்டு வெளியே செல்லலாம் என்று கோபி பாக்யா மற்றும் எழிலிடம் கூறுகிறார்.

ஈஸ்வரி கோபியிடம் ஏற்கனவே இந்த வீட்டை நீ கேட்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அப்பாவின் சொத்து போக எனக்கு இன்னும் 20 லட்சம் தர வேண்டும் என்று கோபி கூறுகிறார்.

கோபி கேட்ட பணத்தை ஆறு மாதங்களுக்குள் தந்து விடுகிறேன் என பாக்யா வாக்கு கொடுத்திருக்கிறார்.

கோபி கேட்ட கேள்வி

கோபி கேட்ட கேள்வி

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் வீட்டிற்கு வந்த கோபி, எழில் மற்றும் பாக்யாவிடம் உங்களுக்கு கொடுத்த டைம் நேத்தோடு முடிஞ்சு போச்சி, பணத்தை கொடுக்கிறதா நீங்க சொன்னிங்களே என்ன ஆச்சி? எங்கே பணம்? யார் கொடுக்கப் போறீங்க என்று கேட்க எழிலும் பாக்கியாவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனர். பிறகு ஈஸ்வரி டேய், நான் உன்கிட்ட என்ன சொன்னேன் நீ இங்க வந்து என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார்.

பாக்கியாவின் சவால்

பாக்கியாவின் சவால்

அதற்கு எங்க அப்பா ஊர்ல இருக்கிற எல்லா சொத்துகளையும் என் பேருக்கு மாத்தி எழுதி தரதா சொன்னாரு. அது எப்படியும் எனக்குத் தான் வரும். ஆனாலும் ஊர்ல இருக்கிற சொத்து அவர் சம்பாத்தியம் என எல்லாத்தையும் சேர்த்து பார்த்தாலும் இந்த வீட்டோட மதிப்புக்கு ஈடாகாது. அதுக்கு மேல 20 லட்சம் ரூபாய் எனக்கு தேவைப்படுகிறது. அதை கொடுத்துட்டா இந்த வீட்டை எங்க அப்பா பேருல அல்லது எங்க அம்மா பேருக்கு எழுதி கொடுத்து விடுவேன். அந்த பணத்தை யார் கொடுக்கப் போறீங்க என்று கேட்கிறார் .அதற்கு பாக்யாவும் எழிலும் அமைதியாக இருக்கின்றனர். பிறகு கோபி மேலும் நக்கலாக பேசிக்கொண்டே இருக்க பாக்யா நான் கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

பாக்கியா கொடுத்த பதில்

பாக்கியா கொடுத்த பதில்

அந்த பணத்துக்கு அதிகபட்சம் ஆறு மாசம் எனக்கு அவகாசம் வேண்டும் என்று பாக்கியா கேட்க, கோபி அது 20 ஆயிரம் இல்ல 20 லட்சம் ரூபாய் கணக்கு உனக்கு தெரியுமா என்று பாக்கியலட்சுமி இடம் கேட்க, அதெல்லாம் நல்லாவே தெரியும் உங்களுக்கு நான் பணம் கொடுக்கிறேன் என்று சவால் விடுகிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்ய என்று கோபி கேட்க நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று பாக்யா பதிலடி கொடுக்கிறார். பிறகு கோபி பார்க்கலாம் என்று கூறிவிட்டு கிளம்பி செல்கிறார்.

திட்டும் ஈஸ்வரி

திட்டும் ஈஸ்வரி

கோபி போன பிறகு ஈஸ்வரி, பாக்கியாவை திட்டுகிறார். அவன்தான் பணம் வேண்டும் என்று சொன்னால் நீ தருகிறேன் என்று திமிரா பேசுகிறாய், அவனுக்கு வார்த்தைக்கு வார்த்தை பதில் பேசிக்கிட்டே இருந்தா இப்படித்தான் ஆகும் என்று திட்ட, அவர்தான் கணக்கில் கரெக்டா இருந்து பணத்தை கேட்கிறாரே கொடுத்து தான ஆக வேண்டும் அத்தை என்று பாக்கியா கூறுகிறார். நான் மட்டும் போய் கோபி கிட்ட பேசலனா எல்லோரையும் இன்னைக்கு வீட்டை விட்டு வெளியே போக சொல்லியிருப்பான். இந்த வீட்டு பிரச்சனையை முடித்து வைத்தது நானும் என் வீட்டுக்காரரும் தான் என கோபமாக ஈஸ்வரி பேசிவிட்டு உள்ளே செல்கிறார்.

பயப்படும் அமிர்தா

பயப்படும் அமிர்தா

பிறகு பாக்கியா, ஜெனி மற்றும் செல்வி மூவரும் இரவு கிச்சனில் சமையல் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வி உன்னுடைய மாமியார் பெரிய ஆளு தான் அக்கா ஒரு வழியா பிரச்சனையே முடிச்சு வச்சுட்டாங்க என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அமிர்தா எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறார். அனைவரும் என்ன ஆச்சு வா என்று கூற பாட்டி இருக்காங்களா? என பயந்தபடியே கேட்க, அவர் இல்லை வா என்று கூப்பிட்டு அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு ஜெனி முதல்முறையாக சப்பாத்தி செய்த கதையை சொல்லி அனைவரும் சிரிக்கின்றனர்.

இனியா அத்தை ஆகியாச்சி

இனியா அத்தை ஆகியாச்சி

அதே நேரத்தில் எழில் நிலா பாப்பாவை தூக்கி வைத்துக் கொண்டு தெருவில் நின்று கொண்டிருக்க டியூஷன் சென்றிருந்த இனியா அப்போது வீட்டிற்கு வர எழிலை பார்த்து எழிலிடம் பேசிவிட்டு பாப்பாவை வாங்கி கொஞ்சுகிறார். பாப்பாவிடம் அக்கா என்று எழில் சொல்ல, அக்காவா வரும் என்று இனியா கேட்க, முறைப்படி பார்த்தால் நீ பாப்பாவுக்கு அத்தை என்று சொல்ல, அப்படியா அப்போ அக்கா என்று நீ கூப்பிடு என்று கூறிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+