சவாலில் ஜெயிக்க கிடைத்த வாய்ப்பு.. பாக்கியா எடுத்த முடிவு.. கண்கலங்கி அழும் அமிர்தா..செழியனின் பதில்
பாக்யாவுக்கு திருமண ஆர்டர்கள் தொடர்ந்து வந்துள்ளதால் சவாலில் ஜெயித்து விடலாம் என சந்தோஷமாக இருக்கிறார்.
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா டீ கொடுத்ததால் கோபத்தில் ஈஸ்வரி டீயை தட்டி விட்டு அமிர்தாவை திட்டி விடுகிறார்.
ஈஸ்வரி செய்த தப்பிற்கு எழில் அமிர்தா விடம் மன்னிப்பு கேட்கிறார்.
பாக்யாவிற்கு மண்டபத்தில் சமையல் ஆர்டர் இருப்பதாக ராஜசேகர் கூறுகிறார்.

கோபத்தில் திட்டிய ஈஸ்வரி
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் அமிர்தா காபி கொடுக்க ஈஸ்வரி கோபப்பட்டு காபி கப்பை கீழே தட்டி விட்டு உடைக்கிறார். பாக்யா எங்கே? எனக் கேட்க அமிர்தா பயந்தபடியே அவர் ஆபீசுக்கு போய் இருக்காங்க என்று சொல்கிறார். இந்த வீட்டில் என்னென்னமோ நடக்குது எனக்கு காபி ஒன்னும் முக்கியம் கிடையாது என்றும், எனக்கு உன்னை பிடிக்கவில்லை. நீ என் முன்னாடி அடிக்கடி வந்து நாடகம் போடாதே இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று கோபமாக திட்ட எழில், ஜெனி இருவரும் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். எழில் ஈஸ்வரியிடம் பாட்டி என ஆரம்பிக்க நீயும் என்னிடம் பேசாதே என்று கோபமாக திட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார்.

அமிர்தாவின் பெருந்தன்மை
பிறகு அமிர்தா பாவமாக டீ கப் உடைத்ததை துடைத்துக் கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார். அங்கே எழில் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். பிறகு கொஞ்ச நேரத்தில் ஜெனியும் உள்ளே வந்து அமிர்தாவிடம் சாரி கேட்க, நான் உங்களை காதலிக்கும் போதே இதெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியும். அப்போதே என் மனசை இதற்கு நாம் பக்குவப்படுத்திவிட்டேன். இதையெல்லாம் நான் பெருசா எடுத்துக்கல. பாட்டி அவங்க நினைச்ச மாதிரி கல்யாணம் செய்யணும்னு நினைச்சாங்க ஆனா அது நடக்கலங்கிற ஏமாற்றத்தில் இப்படி நடந்துக்கிறாங்க என்று அமிர்தா சொல்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு
அடுத்ததாக பாக்கியா ராஜசேகரை சந்திக்க செல்கிறார். அங்கே அவர் மண்டபத்தில் தொடர்ந்து எட்டு நாள் மேரேஜ் பங்க்ஷன் இருக்கு உங்களால் கேப் இல்லாமல் சமைக்க முடியுமா? இல்லன்னா நீங்க மூணு நாலு பங்க்ஷன் மட்டும் பார்த்தீங்களா? மீதிக்கு நான் வேற ஆள் பார்த்துக்கொள்ளவா? என்று கேட்க பாக்யாவிற்கு கோபிக்கு பணம் தர வேண்டியதை நினைத்து பார்த்து இந்த வாய்ப்பை விட்டு விட வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எல்லா ஆர்டரையும் செய்கிறோம் என்று சொல்கிறார்.

திட்டும் செழியன்
பாக்கியா ஒத்துக்கொண்டாலும் ராஜசேகர் இது ரொம்பவே கஷ்டம் எதுவாக இருந்தாலும் நீங்க வீட்டுக்கு போயி நல்லா யோசிச்சு அதற்குப் பிறகு ஒரு பதிலை சொல்லுங்க என்று கூறுகிறார். அடுத்ததாக ஜெனி நிலா பாப்பாவை தூக்கிக் கொண்டு தன்னுடைய ரூமுக்கு சென்று இவர்தான் உன் பெரியப்பா என்று அறிமுகம் செய்து வைக்கிறார். செழியன் நான் யாருடைய குழந்தைக்கு பெரியப்பாவாக எல்லாம் இருக்க முடியாது என்று சொல்கிறார். பிறகு செழியனின் லேப்டாப்பில் வா நிலா பாப்பா நாம ரைம்ஸ் பாக்கலாம் என்று சொல்ல, செழியன் கடுப்பாகிறார். இதோ ஆபீஸ் லேப்டாப் நீங்க ரைம்ஸ் பார்ப்பதற்கு எல்லாம் இதை தர முடியாது என்று திட்டுகிறார். பிறகு உன்னால எப்படி இப்படி இருக்க முடிகிறது என்று ஜெனி இடம் கேட்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications