Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனியாவை கொடுமைப்படுத்தும் ராதிகா.. தாத்தாவின் முடிவு.. கோபியின் பதில்.. மனம் மாறிய செழியன்

இனியாவை படிக்க வேண்டும் என்று ராதிகா பாடாய்படுத்த அதற்கு ராமமூர்த்தி ஆதரவு கொடுக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பதினொன்றாம் வகுப்பு படிக்கும் இனியாவிற்கு இனி நான் போன் தர மாட்டேன் என்று ராதிகா ஃபோனை பிடுங்கி வைத்துக் கொள்கிறார்.

காலையிலும் படிக்க சொல்லி ராதிகா தொந்தரவு செய்வதால் இனியா கடும் கோபத்தில் இருக்கிறார்.

ராதிகா செய்வது தான் சரி என்று ராமமூர்த்தி சொல்ல இனியா மற்றும் கோபி இருவரும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

சாப்பாடு ஊட்டிவிடல்

சாப்பாடு ஊட்டிவிடல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் பாக்கியா சமைக்கும் மண்டபத்திற்கு எழில் வந்து அவர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறார். அப்போது எனக்கு பசிக்கிறது அம்மா என்று சொல்ல, பாக்யா அவருக்கு சாப்பாடு போட்டு குடுக்க எழில் சாப்பிட்டு விட்டு நன்றாக இருக்கிறது என்று பாராட்டியபடியே பாக்கியாவிற்கு ஊட்டி விடுகிறார். பின்பு அமிர்தாவுக்கு ஊட்டி விடுகிறார். அப்போது செல்வி எழிலை கிண்டல் செய்ய செல்விக்கும் ஊட்டி விட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

செழியனின் மனமாற்றம்

செழியனின் மனமாற்றம்

அதே நேரத்தில் வீட்டில் ஜெனி, நிலா பாப்பாவை வைத்து ரூமில் விளையாடிக் கொண்டிருக்கிறார். செழியனை பார்த்து பெரியப்பா என்று சொல்லு என நிலாவுக்கு ஜெனி சொல்லிக் கொடுக்க கடுப்பாகி செழியன் எனக்கு தூக்கம் வருகிறது முதல்ல வெளியே கூட்டிட்டு போ என்று ஜெனியை திட்டுகிறார். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஜெனி நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென்று ஜெனியின் அம்மா போன் செய்ய ஜெனி போனை எடுத்துக் கொண்டு வெளியே சென்று விடுகிறார். நிலா பாப்பா செழியனை பார்த்து பெரியப்பா பெரியப்பா என்று கூப்பிட்டுக்கொண்டு கையில் ஹார்டின் சிம்பள் காட்டி செழியன் அருகே சென்று அவருக்கு கன்னத்தில் முத்தம் கொடுக்கிறது. செழியன் மனம் அப்படியே மாறுகிறது.

ராதிகாவின் கண்டிஷன்

ராதிகாவின் கண்டிஷன்

செழியன் நிலாவை தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கும் போது ஜெனி உள்ளே வருகிறார். செழியன் உடனே தள்ளி போய்விட ஜெனி செழியனை கலாய்க்கிறார். மறுபக்கம் இனியா படிக்காமல் போனை நோண்டிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகா இனியாவை திட்டி போனை பிடுங்கி வைத்துக்கொண்டு நாளைக்கு வரைக்கும் நீ போனை எடுக்கவே கூடாது என்று கண்டிஷன் போடுகிறார். நீ பதினொன்றாம் வகுப்பு இப்போ படிச்சுக்கிட்டு இருக்க இப்போ மார்க் குறைஞ்சதுனா எல்லாரும் என்கிட்ட தான் கேட்பாங்க. இந்த நேரத்தில் படிப்பு மட்டும்தான் முக்கியம் அதில் கவனத்தை வை என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.

போட்டுக் கொடுக்கும் இனியா

போட்டுக் கொடுக்கும் இனியா

நீ இப்போ படிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். இதைத்தான் உங்க அம்மாவாக இருந்தாலும் பண்ணுவாங்க. நாளைக்கு உங்க அம்மா கூட என்கிட்ட வந்து எதுக்கு இனியா மார்க் கம்மி ஆனா என்று என்கிட்ட கேட்பாங்க என்று சொல்ல இனியா, நீங்க எனக்கு அம்மா கிடையாது என்று சொல்ல, இங்க இருக்கிற வரைக்கும் நான் அம்மா ரோல் தான் எடுப்பேன் என்று கோபி முன்னாடியே இனியாவை திட்டி படிக்க சொல்கிறார். பிறகு இனியா கோபியிடம் டாடி இவங்க எனக்கு கண்டிஷன் எல்லாம் போட்டுட்டு இருக்காங்க என்று போட்டுக் கொடுக்க, அதற்கு நான் சமாளிக்கிறேன். கொஞ்சம் அமைதியா இரு என்று கோபி இனியாவிடம் சமாதானம் பேசுகிறார்.

திட்டும் ராமமூர்த்தி

திட்டும் ராமமூர்த்தி

கோபியின் செயலை பார்த்து ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார். ராதிகா கேட்டதுதான் சரி. நீ பண்ண வேண்டிய வேலையை அவ பண்ணிக்கிட்டு இருக்க என ராதிகாவுக்கு சப்போர்ட் செய்ய இனியா, கோபி இருவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். பிறகு உனக்கு இங்க இருக்க கஷ்டமாக இருக்கு என்றால் சொல்லு நாம நம்ம வீட்டுக்கு போய்விடலாம் என்று கூறிவிட்டு ராமமூர்த்தி மயூ, வா நாம மொட்டை மாடிக்கு போவோம் என்று மயூவுடன் கிளம்பி வெளியே செல்கிறார் .தாத்தாவும் இப்ப ரொம்பவே மாறிட்டாங்க என்று இனியா கோபியிடம் கம்ப்ளைன்ட் செய்கிறார்.

காலையிலும் தொடரும் பிரச்சனை

காலையிலும் தொடரும் பிரச்சனை

அடுத்த நாள் காலையில் ஹாலில் ராமமூர்த்தியோடு இனியா தூங்கிக் கொண்டிருக்க 5. 30 க்கு அலாரம் வைத்து படிப்பதாக இரவு இனியா சொன்னதால் காலையில் அலாரம் அடித்து கொண்டிருப்பது தெரியாமல் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ராதிகா இனியாவை எழுப்பி படிக்க கூறுகிறார். இதனால் மேலும் இனியா கடுப்பாகிறார். எல்லோரும் என்னை திட்டுறீங்க என்று புலம்பி கொண்டிருக்க, ராமமூர்த்தி ராதிகா சொல்வதுதான் சரி. நீ இப்போ எந்திரிச்சு படிக்கணும் நீ ராத்திரி உங்க அப்பாகிட்ட காலையில் படிக்கோன் என்று சொன்னாலா? இப்போ உட்கார்ந்து படி என்று கூறுகிறார். அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்த பாக்கியா, அமிர்தா,ஜெனி, செல்வி என எல்லோரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+