ராதிகாவுக்கு ஆபீஸில் வந்த பிரச்சனை.. புது பிசினஸை தொடங்கும் பாக்கியா.. கடன்காரர் ஆகும் கோபி
ராதிகாவிற்கு ஆபீஸில் பாக்கியாவிற்கு கேண்டீன் ஆர்டர் கொடுக்காத விஷயத்தில் புதியதாக பிரச்சனை வந்திருக்கிறது.
சென்னை: பாக்கியலட்சுமிக்கு கேண்டீன் ஆர்டர் கொடுக்காத விஷயத்தை பற்றி ராதிகாவிடம் அவருடைய ஹெட் கேள்வி கேட்கிறார்.
பாக்கியா தொடர்ந்து சமைத்து வந்ததால் கிடைத்த லாபத்தை வைத்து புது ப்ளான் செய்து இருக்கிறார்.
கோபி தன்னுடைய குடும்ப செலவிற்காக தன்னுடைய நண்பரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்கிறார்.

பழைய நினைவுகள் பகிர்வு
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பாக்கியா, ஜெனி, அமிர்தா, செல்வி என எல்லோரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே தாத்தா ராமமூர்த்தியும் வருகிறார். பாக்கியாவை வீட்டிற்கு வரும்போது ஒரு சில நாட்கள் பார்க்க முடியவில்லை,அது நல்லாவே இல்லை. பல நாட்களுக்குப் பிறகு இன்று தான் பார்த்திருக்கிறேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். பிறகு இதற்கு முன்பு சமையல் வேலை செய்யும்போது எல்லோரும் ஜாலியாக வேலை செய்தது பற்றி செல்வி பேசிக் கொண்டிருக்க, இப்போதெல்லாம் அப்படி இல்லவே இல்லை என்று வருத்தத்தோடு பகிர்ந்து வருகிறார்கள். அப்போது அமிர்தா ராமமூர்த்திக்கு காபி போட்டு கொடுக்கிறார்.

ஈஸ்வரியால் பிரச்சனை
அதே நேரத்தில் ஈஸ்வரி அங்கே வந்து, வீட்டிற்கு வந்தால் என்னை கூப்பிட மாட்டீர்களா? இங்கு உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு இருக்கீங்களா? என்று கேட்கிறார். பிறகு அமிர்தா ஈஸ்வரி இடம் பாட்டி நீங்க டீ குடிக்கிறீங்களா? என்று கேட்க, உன்னை என் முகத்திலேயே முழிக்க கூடாது என்று சொல்லி இருக்கேன் இல்ல! உன் கையால நான் டீ குடிக்கிற நிலைமை வந்தால் நான் இந்த வீட்டிலேயே இருக்க மாட்டேன் என்று திட்டிவிட்டு உள்ளே செல்கிறார். அவர் சென்றதும் செல்வி இவ்வளவு நேரமாக எல்லாரும் சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தோம். ஈஸ்வரி அம்மா வந்து எல்லாத்தையும் நிறுத்திவிட்டு போய்ட்டாங்க என்று சொல்கிறார்.

ராதிகா ஆபீஸில் பிரச்சனை
அடுத்ததாக ராதிகா ஆபீஸில் அவரது ஹெட், கேண்டின் ஆர்டரை எடுத்தவர்கள் சரியாக சமைக்காமல் பிரச்சனை உள்ளது உங்களுக்கு தெரியுமா? என்று கேட்க, சாப்பாடு சரியில்லை என்று பலர் என்னிடம் கம்ப்ளைன்ட் செய்தார்கள் என்று ராதிகா கூற, அது மட்டுமல்ல 10 பேருக்கு புட் பாய்சன் ஆகி இருக்கு, அந்த பாக்கியலட்சுமி கேட்டரிங் சர்வீஸ் ஆர்டர் கொடுத்து இருக்கலாம் என்று கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் லேடிஸ் எல்லாம் சமைக்கிறதால நல்லா சமைப்பாங்க ஆனா உங்களால தான் அவங்களுக்கு ஆர்டர் கொடுக்க முடியாமல் போயிட்டு என்று சொல்கிறார். அதற்கு ராதிகா இப்பவும் அவசரப்பட வேண்டாம் சார். டெண்டர் விடலாம் நல்லவங்களா பார்த்து ஆர்டர் கொடுக்கலாம் என்று சொல்ல, ராதிகாவிடம் உங்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது பிரச்சனையா? ஏன் அவங்க வேண்டாம் என்று சொல்றீங்க என ஹெட் கேட்கிறார். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளித்துக் கொண்டு ராதிகா சென்ற பிறகு ஹெட் எதற்காக இவர் இப்படி பாக்கியலட்சுமி வேண்டவே வேண்டாம் என்று கூறுகிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

பாக்யாவின் புது பிசினஸ்
அடுத்ததாக பாக்கியா சமையல் ஆர்டர் எடுத்து சமைத்ததில் மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று ஜெனியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது நாம் சமையல் செய்யும் போது மண்டபம் அலங்காரம் மற்றும் தாம்பூலம் ஏற்பாடு செய்ய உங்களால் முடியுமா? என்று கேட்கிறார்கள். அந்த வேலையும் நாம் செய்யலாமா? என்று கேட்க, அதற்கு அமிர்தா அது செய்யலாம். அப்படி செய்தால் நமக்கு லாபம் கிடைக்கும் என்று கூறுகிறார். அடுத்ததாக அதையும் செய்யலாம் என்று பாக்கியா முடிவெடுக்க, ஜெனி கணக்கு பார்த்து மீதி எவ்வளவு பணம் இருக்கிறது என்று சொன்னதும், பாக்கியா செக் புக் எங்க இருக்கு என கேட்டு விசாரித்துவிட்டு, பிறகு உங்க மாமாவுக்கு போன் பண்ணி இங்கே வர சொல்லு என்று சொல்கிறார்.

கடனாளியாகும் கோபி
மறுபக்கத்தில் கோபி தன்னுடைய நண்பர் செந்திலை சந்தித்து ஹோட்டலில் சாப்பிட்டபடியே பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது ராதிகாவுடன் நான் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் ஆனால் குடும்ப செலவு மட்டும் எக்கச்சாமாக ஆகிறது. கையில் பணம் இல்லை ஒரு லட்ச ரூபாய் வேண்டும் என்று கேட்க, செந்தில் பணம் நான் தருகிறேன். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பாரு இதுவரைக்கும் நீ வீட்டு செலவுக்காக கடன் வாங்கியதே கிடையாது. இதற்கு முன்னாடி நீ இருந்தது பெரிய குடும்பம் ஆனால் செலவு கம்மியா தான் இருந்தது. இப்போ சின்ன குடும்பம் ஆனால் செலவு அதிகமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் ஜெனி போன் செய்து வீட்டுக்கு வரும்போது இங்க வந்துட்டு போகிறீர்களா? என சொல்ல கோபியும் வருவதாக சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications