பணத்தால் பதிலடி கொடுத்த பாக்கியா..கோபி பேச்சால் கடுப்பான ராதிகா.. பதிலடி கொடுத்த தாத்தா
கோபிக்கு பாக்கியா 2 லட்சம் ரூபாயை கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.
சென்னை: பாக்கியா கோபியிடம் 20 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று கூறிய சவாலில் முதல் கட்டமாக 2 லட்சம் கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பாக்கியா உடன் ராதிகாவை கம்பேர் பண்ணி பேசியதால் ராதிகா கோபத்தில் கோபியை திட்டுகிறார்.
ராமமூர்த்தி கோபியை திட்டுவதால் அதற்கு சப்போட்டாக ராதிகா வர நான் உன்னிடம் பேசவில்லை என்று ராதிகாவை ராமமூர்த்தி அவமானப்படுத்துகிறார்.

செக்கை நீட்டும் பாக்கியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் கோபியை ஜெனி போன் பண்ணி கூப்பிட்டதால் வீட்டிற்கு வந்து என்னம்மா என்ன ஆச்சு என்று கேட்க? அதற்கு ஈஸ்வரி நீ கோபியை வர சொன்னியா எதற்கு என்று ஜெனி இடம் கேட்க? நான் தான் வர சொன்னேன் என்று கிச்சனில் இருந்தபடியே பாக்யா குரல் கொடுத்து வெளியே வருகிறார். பிறகு கோபி நீ வரச் சொன்னியா? என்ன விஷயம், போன்ல சொல்ல வேண்டியது தானே என்று கேட்க? ஒரு நிமிஷம் என்று பாக்யா கூறி எழிலை கீழே வரச் சொல்லி கிச்சனுக்கு சென்று செக் புக்கை எடுத்து வந்து உங்களுக்கு தர வேண்டிய 20 லட்சத்துல 2 லட்சத்துக்கான செக் என சொல்லி நீட்டுகிறார். அதை பார்த்து கோபி மட்டுமல்லாமல் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எட்டு நாள் சம்பாத்தியம்
என்ன வெறும் செக்கை கொடுத்து சீன் போடுறியா என்று கோபி கேட்க, எனக்கு பணம் வந்ததுக்கப்புறம் தான் நான் உங்களுக்கு போன் பண்ணி வரச் சொன்னேன் என்று பாக்யா கூறுகிறார். ஈஸ்வரி உனக்கு ஏது அவ்வளவு பணம் என்று கேட்க? உங்களுக்கு தெரியும் தானே நான் 8 நாள் தொடர்ந்து சமையல் ஆர்டர் எடுத்து சமைச்சுக்கிட்டு இருந்தேன். அதுல வந்த பணம்தான் இது என்று பாக்கியா கூறுகிறார்.

இவ்வளவு பொறாமையா கோபி
அதற்கு ஜெனியும் ஆமா எல்லோருக்கும் கொடுக்க வேண்டிய பணம் போக ஆண்டியிடம் இவ்வளவு பணம் இருக்கு என்று சொல்லுகிறார். வீட்டிற்கு வந்து கோபி ராதிகாவிடம் செக்கை கொடுத்து அந்த இடியட் கொடுத்தா என சொல்ல, அவங்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்று ராதிகா கேட்கிறார். அதற்கு ஏதோ கேட்டரிங் ஆர்டர் எடுத்து பண்ணுறாலாம். இப்போதான் எல்லா பங்க்ஷனையும் மண்டபத்தில் கொண்டாடுறாங்க. ஒரு சாதாரண பிறந்த நாளாக இருந்தாலும் கூட பெரிய அளவில் கிராண்டா ஹோட்டலில் இருந்து தானே சாப்பாடு வாங்கி செலிப்ரேட் பண்ணுவாங்க. அதனாலதான் இவளுக்கு நல்ல பிசினஸ் ஓடுது என்று பொறாமையில் பேசிக் கொண்டிருக்கிறார்.

கோபிக்கு வாயில தான் கண்டம்
மேலும் அது எப்படி ராதிகா இவ்வளவு நாட்களாக பிசினஸ் பண்ற நம்மளால இவ்வளவு ஷார்ட் பேரியர்ல 2 லட்சம் லாபம் பார்க்க முடியாது. ஏன் ஐடி வேலை பாக்குற நீயே இந்த எட்டு நாளைக்குள்ள ரெண்டு லட்சம் புரட்ட முடியுமா? ஆனா வெறும் 8 நாளில் இவ்வளவு லாபம் பார்த்திருக்கிறாள். எனக்கே இவ்வளவு பணம் தந்திருக்கிறாள் என்றால் அவள் எவ்வளவு லாபம் எடுத்து இருப்பாள் என்று பேசிக் கொண்டிருக்க ராதிகாவுக்கு கோபம் வருகிறது.

அப்படி கேளுங்க ராமமூர்த்தி
அந்த சமையல் வேலை செய்றவங்களோட எதுக்கு என்ன கம்பேர் பண்றீங்க என்று ராதிகா கோபத்தில் திட்ட, அப்போது கோபி கம்பர் பண்ணல மனசுல தோன்றாத பிராங்கா பேசினேன் அவ்வளவுதான் என்று சொல்லி சமாளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வரும் ராமமூர்த்தி என்ன வயிற்று எரிச்சலா இருக்கா? நம்மகிட்ட சவால் விட்டவ வெறும் 8 நாளில் ரெண்டு லட்ச ரூபா பணத்தை சம்பாதித்துக் கொடுத்துட்டாளே? என்று ஆச்சரியமாக இருக்கா என்று கேட்க கோபி அதெல்லாம் இல்லை என்று சமாளிக்கிறார்.

ராதிகாவுக்கு பதிலடி
நீ சவால் விட்டது உனக்கு பணம் வேண்டும் என்று சவால் விட்டியா? இல்லை அவளால் பணம் தரக்கூடாது என்று சவால் விட்டியா? உனக்கு தேவை பணம் தானே? அப்புறம் அதை வாங்கிட்டு சந்தோசமாக இருக்க வேண்டியதுதானே? ஆனால் அந்த சந்தோசம் முகத்துல தெரியலையே! நம்மகிட்ட சவால்ல ஜெயிச்சிடுவாள் என்ற பயம் தான் தெரிகிறது என்று ராமமூர்த்தி சொல்ல, அதற்கு ராதிகா அப்படியெல்லாம் இல்லை இங்கு யாரும் வயிற்று எரிச்சல் படவில்லை என்று சொல்ல, நான் உன்னிடம் எதுவும் பேசல அவன்கிட்ட பேசிகிட்டு இருக்கேன் என்று ராமமூர்த்தி ராதிகாவுக்கு பதிலடி கொடுக்க, கோபி ராதிகாவை கூட்டிக்கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார்.

ஈஸ்வரியிடம் மல்லுக்கட்டும் நிலா பாப்பா
அடுத்ததாக நிலா பாப்பா விளையாடிக்கொண்டே ஈஸ்வரி ரூமுக்கு சென்று பாட்டி பாட்டி என்று தூங்கிக் கொண்டிருக்கும் ஈஸ்வரியை எழுப்பி முத்தம் கொடுப்பது என சேட்டை செய்கிறது. நீ உன்னோட அம்மா கிட்ட போ என்று ஈஸ்வரி எவ்வளவோ சொன்னாலும் நிலா பாப்பா அங்கேயே விளையாடி கொண்டிருக்க அங்கு வரும் செல்வியிடம் ஈஸ்வரி பாப்பாவை தூக்கிக்கொண்டு போக சொல்லி கூறுகிறார். பிறகு குழந்தையுடன் வெளியே வந்த செல்வி அமிர்தாவிடம் இந்த குடும்பத்தை சேர்த்து வைக்க நிலா பாப்பாவோட சிரிப்பு ஒன்று போதும் என்று சொல்கிறார். அடுத்ததாக கிச்சனில் பாக்கியா, செல்வி பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கே வரும் எழில் தான் டிவி சேனல்ல வேலைக்கு சேர்ந்து இருப்பதாக சொல்கிறார். அதற்கு பாக்கியா கனவை அப்படியே விட்டு விடமாட்டாலா? என கேட்கிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு?












Click it and Unblock the Notifications