ராதிகாவிடம் மோத தயாரான பாக்கியா.. செழியனின் மனமாற்றம்.. திட்டிய ஈஸ்வரிக்கு பாக்கியா பதிலடி
ராதிகாவின் ஆபீஸில் சமைப்பதற்கு பாக்கியா அப்ளை செய்கிறார்.
சென்னை: ராதிகாவின் ஆபீஸில் இருந்து மீண்டும் சமையல் காண்ட்ராக்ட் டென்டரில் விடப்பட்டிருக்கிறது.
டென்டரில் பாக்யாவும் பதிவு செய்து இருக்கிறார்.
குழந்தையை திட்டிய ஈஸ்வரிக்கு பாக்கியா பதிலடி கொடுத்திருக்கிறார்.
எழில் அமிர்தாவிடம் பேசி கொண்டிருப்பதை பார்த்து செழியனும் ஜெனி இடம் கொஞ்சி பேசிக் கொண்டிருக்க அதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்படுகிறார்.

எழிலின் புது வேலை
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் எழில் தான் புதியதாக டிவி சேனலில் வேலை செய்ய போவதாக கூற, அது சரிப்பட்டு வருமா உனக்கு விருப்பப்பட்ட தான் வேலை செய்கிறாயா என்று பாக்யா கேட்க? அதற்கு எல்லா வேலையும் ஒன்றுதான். அதுவும் திரைப்படத்தில் வேலை பார்ப்பதும் ஒன்றுதான். டிவி சேனலில் ஒரு வேலை பார்ப்பதும் ஒன்றுதான் இது முழுக்க நான் சந்தோஷப்பட்டு தான் செய்கிறேன் என்று கூறி எனக்கு வாய்ப்பு வந்ததும் நான் திரைப்படத்தை இயக்க தொடங்கி விடுவேன் என்று கூறி அனைவரையும் சமாதானம் செய்கிறார்.

டெண்டர் செய்தி
பிறகு எழில் பேப்பர் படித்துக் கொண்டிருக்க அப்போது ராதிகா ஆபீஸில் கேண்டீன் ஆர்டர் டெண்டர் விடப்பட்டிருக்கும் செய்தியை பார்த்து அதை பற்றி பாக்கியாவிடம் கூறுகிறார். பிறகு அதற்கு நாமும் அப்ளை செய்யலாம் என்று ஜெனி கூற இது சரிப்பட்டு வருமா? அங்கே ராதிகா இருக்கிறார். அதனால் இதையும் கெடுத்து விடுவார் என்று ஈஸ்வரி சொல்ல, இது நாம் செய்வோம் என்னதான் நடக்கும் என்று பார்ப்போம். மீண்டும் இதே டிரெண்டர் வந்திருப்பதால் அது நமக்காக கூட வந்திருக்கலாம் என்று பாக்கியா கூறி அதற்கு அப்ளை பண்ண ஜெனி இடம் கூறுகிறார்.

அமிர்தாவை திட்டும் ஈஸ்வரி
பிறகு சமையலறையில் பாக்கியா, செல்வி, அமிர்தா மூவரும் பேசிக் கொண்டிருக்க அப்போது வரும் ஜெனி, தான் டெண்டர் விஷயத்தில் அப்ளை செய்து விட்டு வந்து விட்டேன் ஆனால் இது கண்டிப்பா நாம் செய்ய வேண்டுமா? என்று எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. ராதிகாவை பார்த்து தான் பயமாக இருக்கிறது என்று சொல்ல, எது நடக்குமோ அது நடக்கட்டும் என்று பாக்கியா கூறுகிறார். பிறகு நிலா பாப்பா மீண்டும் ஈஸ்வரி படுத்திருக்கும் அறைக்கு சென்று ஈஸ்வரியிடம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது இப்படி எல்லாம் செய்ய சொல்லி உன்னுடைய அம்மா அனுப்பி வைத்தாளா என்று கூறி நிலாவை திட்டி விட்டு பாக்யா என ஈஸ்வரி கூப்பிட அனைவரும் ஓடி செல்கின்றனர்.

ஈஸ்வரியின் மனமாற்றம்
பாக்கியாவிடம் குழந்தை இங்கே வரக்கூடாது என்று நான் சொல்லி இருக்கேன்லா? மறுபடியும் எதற்கு இங்கே அனுப்பி வைக்கிங்க என்று திட்டுகிறார். அதற்கு பாக்கியா இப்போ இப்படித்தான் பேசுவாங்க. போகப் போக பாட்டி உன்னை பற்றி புரிஞ்சிகிட்டு இதே பாட்டி உன்னை மடியில் தூக்கி வைத்து கொஞ்ச போறாங்க என்று பேசுகிறார். கடுப்பான ஈஸ்வரி பாக்கியாவை திட்டிக் கொண்டிருக்க, பாக்கியா கண்டு கொள்ளாமல் வெளியே சென்று விடுகிறார். அனைவரும் வெளியே சென்ற பிறகு ஈஸ்வரி குழந்தை தன்னிடம் செய்த விளையாட்டு வேலைகளை நினைத்து பார்த்து சந்தோஷப்பட்டு, மறு நிமிடமே கோபமாக மாறுகிறார்.

மாட்டிக்கொண்ட செழியன்
அடுத்ததாக எழில் மற்றும் அமிர்தா இருவரும் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் அங்கே வருகிறார். இவர்கள் இருவரும் பேசுவதை கேட்கிறார். அமிர்தா எழிலிடம் இந்த வேலையை நீங்க பிடித்து தான் செய்கிறீர்களா? என்று கேட்க? ஆமாம் என்று கூறியபடியே அமிர்தாவை புகழ்ந்து பாடுகிறார். அதை பார்த்து இப்படி எல்லாம் கூட பண்ணுவாங்களா? நிஜ வாழ்க்கையிலும், என்று செழியன் யோசித்தபடியே மாடியில் இருந்து கீழே வந்து ஜெனி இடம் ரொமான்ஸ் செய்கிறார். ஜெனியை வர்ணித்து பாட்டு பாடி கொண்டு இருக்க அப்போது ஈஸ்வரி அங்கே வந்து செழியன் செய்வதை பார்த்து கைதட்டுகிறார். பிறகு செழியன் பேசியதை எல்லாம் கூறி செழியனை ஈஸ்வரி கிண்டல் செய்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications