கோபியின் சூழ்ச்சி,வீட்டுக்கே சென்று கதறும் பாக்யா.. அதிர்ச்சியில் ராதிகா..எதிர்பார்க்காத திருப்பங்கள்
சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் பிக்னிக் சென்ற வேன் ஆக்சிடென்ட் ஆனதும் பதறி அடித்தபடி இனியாவை பார்ப்பதற்காக பாக்யா பள்ளிக்கு செல்கிறார். ஆனால் இனியாவை பார்க்க விடாமல் கோபி இனியாவை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து விடுகிறார்.
கோபியின் சூழ்ச்சிகளை தெரிந்து கொண்ட பாக்கியலட்சுமி முதல் முறையாக கோபியின் வீட்டிற்க்கே சென்று நேருக்கு நேராக கோபியோடு கதறி அழுதபடி சண்டை போடுகிறார் இதை பார்த்த ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

பள்ளிக்கு வந்த பாக்கியா
பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், நிகிதா அம்மா பாக்யாவுக்கு போன் செய்ததும் என்ன ஆனது இனியாவுக்கு என்று வீட்டிலேயே அழ தொடங்கி விடுகிறார். ஆனால் பிள்ளைகளுக்கு எதுவும் ஆகவில்லை எல்லோரும் பள்ளிக்கு வந்து விட்டார்கள் நீங்களும் வாங்க என நிகிதாவின் அம்மா போனை கட் செய்ததும் குடும்பத்தினர் அனைவரிடமும் நடந்ததை கூறிவிட்டு எழிலோடு பள்ளிக்கு செல்கிறார். அங்கே மாணவர்கள் அனைவரையும் வகுப்பறையில் அமர வைத்து மருத்துவர்கள் பரிசோதித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் யாரையும் உள்ளே விடாமல் வைத்திருக்கின்றனர். கோபி ஏற்கனவே வந்து டீச்சரிடம் இனியா எப்படி இருக்கிறார் நான் அவளை பார்க்க வேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கதறி அழுத பாக்யா
பாக்யா அங்கே வந்து நிற்பதை பார்த்ததும் கோபமான கோபி இனி பாக்யாவின் கண்ணில் படாமல் இனியாவை கூட்டிக்கொண்டு சென்று விட வேண்டும். இங்கே வந்து அழுது சீண் போட்டு இனியாவின் மனதை மாற்றி விடுவாள் என பயந்தபடியே வகுப்பிற்குள் உள்ளே சென்று நான் இனியாவே கூட்டிக் கொண்டு சென்று விடுகிறேன் என டீச்சரிடம் பேசிவிட்டு இனியாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார். இனியா செல்வதை பார்த்த பாக்யா தவிப்போடு அங்கேயே அழ தொடங்கி விடுகிறார். நான் இனியாவை ஒரு தடவை பார்க்க வேண்டும் அவளுக்கு எப்படி இருக்கிறது என்பதை நான் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று எழிலிடம் கதறி அழுதபடியே கூறுகிறார்.

கோபியின் வீட்டிற்கு வந்த பாக்கியா
எழில் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்காமல் பாக்கியா அழுது கொண்டிருக்கிறார். கடைசியில் இனியாவுக்கு ஏதாவது அடிபட்டி இருந்தால் தாத்தா நமக்கு போன் செய்திருப்பார். நீங்கள் பயப்பட வேண்டாம் வீட்டிற்கு போனதும் நான் இனியாவை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறேன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து வருகிறார் .வீட்டு வாசலில் வந்ததும் கோபியின் கார் நிற்பதை பார்த்த பாக்யா நான் நேராக வீட்டிலே சென்று பேசி விடுகிறேன் என கிளம்புகிறார். எழில் எவ்வளவோ தடுத்து பார்த்தாலும் கேட்காமல் கோபியின் வீட்டிற்கு வந்து விடுகிறார். கோபியின் வீட்டிற்குள் கால் வைக்கலாமா? வேண்டாமா? என ஒரு நிமிடம் யோசித்து கொண்டு இருக்கிறார் .பின்பு வாசலில் நின்றபடியே பார்க்கும்போது உள்ளே ராமமூர்த்தி சோபாவில் அமர்ந்து இருக்கிறார்.

பாக்கியாவால் ராதிகா அதிர்ச்சி
மாமா என பாக்கியா கூப்பிட்டதும், ராம மூர்த்தி பாக்கியா இங்கே எதற்கு வந்தா? என கேட்டப்படியே வா உள்ளே வா என ராமமூர்த்தி அழைக்க நான் இனியாவை பார்க்க வேண்டும் என்று சொன்னதும், ராமமூர்த்தி இனியா என கூப்பிடுகிறார் .அதே நேரத்தில் இனியா பயந்தபடியே கட்டிலில் அமர்ந்து இருக்க, கோபி இனியாவிடம் ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். ஒன்றும் இல்லை நீ பயப்படாதே நான் உனக்கு இருக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்..அப்போது பாக்கியாவின் குரலை கேட்டு இனியா அம்மா வந்திருக்காங்க நான் போய் பாத்துட்டு வரேன் என்று சொன்னதும், நீ வெளியே வர வேண்டாம் என கதவை பூட்டிக் கொண்டு வெளியே வருகிறார். கோபி வந்து நீ எதற்காக இங்கே வந்திருக்கிறாய் என்று கேட்க, நான் இனியாவை பார்க்க வேண்டும் என்று பாக்கியா சொல்கிறார். இனியா வரமாட்டா நீ வெளியே போகலாம் என கோபி கத்தி கொண்டு இருக்க, ராதிகா வெளியே வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

கோபியால் அழும் இனியா
நாளைய எபிசோட்டில் பாக்கியா நான் இனியாவை பார்க்காமல் போக மாட்டேன். ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என கூறிய அழுது கொண்டிருக்கிறார். நான் இனியாவை பார்ப்பதற்காக பள்ளிக்கு வந்ததற்கு நீங்கள் தானே என்னிடம் காட்டக்கூடாது என்று ஏமாற்று வேலை செய்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று சொன்னதும், ஆமா நான் உன்னிடம் காட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன். என்னுடைய பிள்ளையை நீ இப்போதும் பார்க்க முடியாது. அவள் வரமாட்டாள். அவள் என்னுடைய மகள் என் பேச்சை தான் கேட்பாள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அறைக்குள் இருந்து இனியா அழுதபடியே இருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications