Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாக்கியலட்சுமி சீரியலில் பெரிய சொதப்பல்.. நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் தாங்கள் எதிர்பார்த்த டயலாக் எல்லாம் வராமல் சொதப்பி விட்டார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சில நாட்களாகவே பல முக்கியமான திருப்பங்கள் நடைபெற்றது.

அதில் ஒரு கெத்தான டயலாக் இல்லாமல் சொதப்பி விட்டதாக ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

டயலாக் விஷயத்தை தாங்கள் நினைத்தது ஒன்று ஆனால் பாக்கியலட்சுமி சீரியல் நடந்தது வேறொன்றாக மாறிவிட்டது என்று கூறியிருக்கின்றனர்.

கதை ஆசிரியர் ப்ரியா தம்பி

கதை ஆசிரியர் ப்ரியா தம்பி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி சீரியல் டிஆர்பி யில் முன்னனியில் இறந்து வருகிறது. இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இந்த நிலையில் இந்த சீரியல் இந்த வாரத்தில் எழில் அமிர்தாவின் திருமணம் பெருத்த எதிர்பார்ப்போடு நடைபெற்றது. ஆனாலும் இவ்வளவு பெரிய ட்விஸ்ட் திருமணத்தில் நடந்தாலும் எதிர்பார்த்த டயலாக்குகள் எதுவும் நடைபெறாமல் சொதப்பலாக முடிவடைந்து இருக்கிறது. அதனால் பலர் இந்த சீரியலுக்கு கதை எழுதி வரும் பிரியா தம்பியை கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே கதை ஆசிரியர் பிரியா தம்பி ஒரே நேரத்தில் நான்கு சீரியல் எழுதி வருகிறார்.

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் திருமணத்தின் போது ராமமூர்த்தி, ஏம்மா பாக்கியா இதெல்லாம் சரியா வருமா என்று கேட்கும் போது, பாக்கியலட்சுமி நீங்க செஞ்ச தப்புனால நான் அனுபவித்தது பத்தாதா என் பையனும் அனுபவிக்கனுமா? என்று கேட்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கு பாக்கியா சரியா வரும் மாமா, இதுதான் சரி என்ற ஒரே வார்த்தையோடு முடித்திருக்கிறார். அடுத்ததாக ஏன் பாக்கியா நீயும் உன் பையனும் நாடகம் ஆடுறீங்களா என்று ஈஸ்வரி கேட்கும்போது அதற்கு நீங்களும் உங்க மகனும் தான் நாடகம் ஆடுறீங்க, உன் மகன் உங்களுக்கு மேலே அவர்தான் பெரிய நாடகக்காரன். முதல்ல அவரை போய் கேளுங்க என்று சொல்வார் என்று எதிர்பார்த்தால், என்னத்தை இப்படி பேசுறீங்க எழிலுக்கு அமிர்தாவை தான் புடிச்சிருக்கு என்று கூறி இருக்கிறார்.

இப்படி கெஞ்ச வெச்சிட்டாங்களே

இப்படி கெஞ்ச வெச்சிட்டாங்களே

அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு பாக்யா, எழில் மற்றும் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வீட்டு வாசலில் வந்து நிற்கும்போது ஏ பாக்கியா நில்லு! எங்க வந்த நீங்க நாலு பேரும் போய் நடுரோட்டில் நில்லுங்க என்று பாட்டி திட்டும்போது, எதுக்கு அத்த நான் நடுரோட்டுக்கு போகணும் நீங்க வேணா போங்க என்று பாக்கியா சொல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அதற்கு அத்தை நமக்கு ஒரு பொண்ணு இருந்து இதே மாதிரி வந்து நின்னா நம்ம இப்படித்தான் சொல்லுவோமா என்று கேள்வி கேட்கிறார். அது மட்டும் அல்லாமல் இப்படித்தான் நீ கோபி விஷயத்திலும் புரட்சி பண்ணி இந்த நிலைமைக்கு வந்து நிற்கிறோம். நீ செஞ்சது தப்பு பாக்கியா என்று ஈஸ்வரி திட்டும்போது உங்க மகன் சின்ன வீடு வச்சுக்கிட்டு வீட்டை விட்டு போனதுக்கு நான் என்ன பண்ண முடியும். அது நான் பண்ண தப்பா? உங்க மகன் பண்ண தப்பா? என்று கேள்வி கேட்காமல், அத்தை ப்ளீஸ் அத்தை முதல்ல இவங்கள உள்ள கூட்டிட்டு வர்ற அனுமதி கொடுங்க என்று கெஞ்சி கொண்டிருக்கிறார்.

செழியனுக்காவது பதில் கொடுத்து இருக்கலாம்

செழியனுக்காவது பதில் கொடுத்து இருக்கலாம்

அதோடு நிற்காமல் செழியன் அம்மா இவன் இழுத்துவிட்ட சண்டையால தான், இந்த வீடு இப்ப நமக்கே இல்லை. இவன் இனிமே இங்க வந்தா என்ன? வரலனா என்ன? என்று கேட்கும்போது, வாடா தண்டச்சோறு வீட்டில் நல்ல தின்னுகிட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறாயா? வீட்டு செலவுக்கு என்னைக்காவது காசு கொடுத்து இருக்கியாடா? நல்ல தடிமாடு மாதிரி வளர்ந்து இருக்கியே ஆம்பள புள்ள தானே? நீ இந்த வீட்டுக்குன்னு ஏதாவது செஞ்சு இருக்கியா டா ?நீ மட்டும் உனக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்ட ,அதுவே இவன் பண்ண தப்பா. உனக்கு வந்தா ரத்தம், இவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? நீ எல்லாம் வாயவே தொறக்க கூடாது என்று வீரமாக பேசுவார் என்று நினைத்தால், இப்போதைக்கு இவங்க உள்ளே வரட்டும் கல்யாணமானவர்களை எப்படி நிற்க்க வச்சு பேசுறது தப்பு, மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் என்று சமாதானம் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி சொதப்பல்களை எல்லாம் சரி செய்து இருந்தால் இந்த வாரம் இந்த சீரியல் ஓஹோ வென புகழப்பட்டிருக்கும். முக்கியமான நேரத்திலும் இப்படி ஒரு சாதாரணமாக உணர்ச்சிகள் அற்ற வசனத்தை வைத்து விட்டார்களே? என்று இந்த சீரியலின் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+