Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரியில்லை வெற்றிமாறன்.. மோசமான திங்கிங்.. அதென்ன பேட் கேர்ள்? குட் கேர்ள் படம் எடுக்க தயாரா: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேட் கேர்ள் என்ற படத்தின் தலைப்பையே நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. கேரக்டரை மையப்படுத்தும் தலைப்புகளை சினிமா படங்களுக்கு வைக்க வேண்டுமா? என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

BBT Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "படம் முழுமையாக பார்த்துவிட்டுத்தான் கருத்து கூற முடியும்.. ஆனால், டீசர் காட்சிகளை பொறுத்தவரை, முன்கூட்டியே வெளியிடும்போது, அதில் உள்ள விஷயங்கள்தான், அந்த படங்களிலும் என்பதற்கான முன்னோட்டம்தான்..
பேட் கேர்ள் என்ற தலைப்பிலேயே எனக்கு உடன்பாடு இல்லை. எதுக்கு அந்த தலைப்பு? பேட் பாய்ஸ் என்று எடுத்தாலும் அதுவும் தவறுதான்.. கெட்டவன், பொல்லாதவன் என்று நெகட்டிவ்வாக எதுக்கு படங்களுக்கு பேர் வைக்கணும்? ஒரு பெயரை குறிப்பிட்டு பேர் வைக்கலாம், ஆனால், கேரக்டரை மையப்படுத்தி பெயர் வைக்கக்கூடாது. அப்படியே வைத்தாலும் பாசிட்டிவ்வாக வைக்கலாமே?

television bad girl brahmin sanga

ஆபாச தலைப்பு: முன்பெல்லாம் ஆபாசமாக மலையாள படங்களின் தலைப்பு இருக்கும்.. அந்தவரிசையில்தான், இந்த பேட் கேர்ள் பட தலைப்பும் சேர்க்க வேண்டியிருக்கு. படத்திற்குள் என்ன வேணும்னாலும் சொல்லிட்டு போங்க.. தலைப்பை ஏன் இப்படி பேட் கேர்ள் என்று வைக்கறீங்க? இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மண்டையில் நெகட்டிவ்தனம் நிறைய இருக்கிறது.. இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இது சற்று அதிகம்.. காரணம், போலீஸையே மோசமான போலீசாக, தன் படங்களில் நெகட்டிவ்வாக காட்டுபவர்.

இரட்டை வேடங்களில் நடிக்கும் எம்ஜிஆர் படங்களை பார்த்தால் ஒன்று புரியும்.. ஒரு எம்ஜிஆர் சிகரெட்டை பற்றவைத்து வாயில் வைப்பார்.. உடனே இன்னொரு எம்ஜிஆர், அந்த சிகரெட்டை பிடுங்கி கீழே போட்டு, கண்டிப்பார்.. அதாவது ஒரு கெட்டதை காட்டும்போது, நல்லதையும் காட்ட வேண்டும்தானே?

புனிதம்: உடலை காட்டாதீர்கள் என்று முகமது அலி சொன்னதைதான் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.. உடம்பு என்பது பொக்கிஷமானது.. அதை திறந்துவைக்ககூடாது என்கிறார். இப்படி சொல்லிவிடுவதாலேயே, பெண்களின் முன்னேற்றத்தில் ஏதாவது தடையாக இருந்திருக்கிறதா?

ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம் எங்களுக்கும் வேண்டும் என்று பெண்கள் கேட்கிறார்கள்.. இப்படி கேட்பதற்கு பதிலாக, நாங்கள் எப்படி புனிதமாக இருக்கிறோமோ, அதுபோல ஆண்களும் புனிதமாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சொல்ல வேண்டும். கணவர் குடித்துவிட்டு மனைவியை தாக்கினால், பதிலுக்கு தாக்க வேண்டும். மாறாக, கணவர் குடித்தால், நானும் குடிப்பேன் என்று மனைவி சொல்வது சரியா? சமூகத்தை எப்படி இது உயர்த்தும,

வெற்றிமாறன்: ஒரு படைப்பை வெளியிடும்போது, அந்த படைப்பு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்போது, பல கேள்விகள் எழலாம். கணவன் மனைவி பிடிக்காமல் போனால், விலகிவிடலாம். அதற்காக ஆண்மையை வெட்ட ஆரம்பித்தால், பாதி பேர் ஆண்மை இல்லாமல்தான் அலையவேண்டியிருக்கும்.

ஆரம்பத்தில் வெற்றிமாறன் நல்ல படங்களை தந்தார்.. ஆனால், இப்போது வெற்றிமாறன் சரியில்லை.. சரக்கும் இல்லை..

பேட் கேர்ள் பெண்ணை போல, உங்கள் வீட்டு குடும்ப பெண்களையும் செய்ய அனுமதிப்பீர்களா என்று டைரக்டர் மோகன்ஜி கேட்டதில் தவறே கிடையாது.

குட்கேர்ள்: குட்கேர்ள் என்று படம் எடுங்களேன்.. ஒவ்வொரு தளத்திலும் பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்று சொல்லுங்களேன்.. இது மேலும் பெண்களை முன்னேற்ற உதவும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+