போறானே... போறானே... காத்தோட தூத்தல் போல... போகாமத்தான் போறானே...!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் புதுமை எதுவும் இல்லை என்றாலும் பழசு எதுவும் இல்லாமல் மக்கள் பிடிச்சு பார்க்கற மாதிரிதான் இருக்கு.
இந்த சீரியலின் ஸ்பெஷல்னு சொல்லனும்னா ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் குடுத்து இருக்காங்க.வேலைக்காரி பொன்னம்மா, கடையில் வேலை பார்க்கும் பெண்களில் சிலருக்கு என்று இப்படி உதாரணம் சொல்லலாம்.
பங்களா டைப் வீடு எப்படி இருக்குமோ அப்படியே வீட்டை தேர்வு செய்து ஷூட்டிங் எடுத்துக்கிட்டு வர்றாங்க.

லட்சுமி ஸ்டோர்ஸ்
லட்சுமி ஸ்டோர்ஸ் கடை, கடைத்தெரு ,கடைத் தெருவில் ஒரு அழகான கோயில் என்று அருமையாக செட் போட்டு எடுத்து இருக்கிறார்கள்.இப்படி செலவை பற்றிக் கவலைப்படாமல் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து ஷூட்டிங் செய்து இருக்கறது பார்க்க நல்லாருக்கு.

தெலுங்கு டப்பிங் சீரியல்கள்
தெலுங்கு டப்பிங் சீரியல்களை பார்க்கும்போது அவர்கள் இப்படி நிறைய செலவு செய்து பிரமாண்டமாய் சீரியல்கள் தயாரிப்பதில் நம்மை மிஞ்சி விட்டார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ரவி ரஞ்சித் டிராஃபி
ரவி ரஞ்சித் டிராஃபி யில்விளையாட தேர்வு செய்யப்பட்டு இருக்கான். அதுக்காக பெங்களூரு கிளம்பி போக இருக்கான். பாக்கியலட்சுமி டாக்டர் உமா தன் மேல திருட்டு குற்றம் சுமத்தினத்தை நினைச்சு கவலையில் இருக்கா.

ரவியின் தங்கை
ரவியின் தங்கை கமலா, புரோ...பாக்கியலட்சுமி அழுதுகிட்டே இருக்காங்க...பார்க்கவே கஷ்டமா இருக்கு புரோ.எதாவது செய்னு சொல்றா. பாக்கிய லட்சுமியை நம்ம வீட்டுல ஒருத்தியாக்கிட்டா உமா அண்ணியால இனிமே ஒண்ணும் சொல்ல முடியாதுன்னு ரவி சொல்றான்

என்ன சொல்றே புரோ
என்ன சொல்றே புரோ..இப்பவும் நம்ம வீட்டுல ஒருத்தியாத்தானே பாக்கிய லட்சுமி இருக்காங்க.. எனக்கு புரியலைன்னு சொல்றா. நான் பாக்கிய லட்சுமியை காதலிக்கிறேன் கமலா.அதை அவகிட்ட இன்னிக்கு சொல்லிடலாம்னு இருக்கேன்.

நான் கல்யாணம் செய்துகிட்டா
பாக்கியலட்சுமியை நான் கல்யாணம் செய்துகிட்டா அவ நம்ம வீட்டுல ஒருத்தியாகிடுவா அப்புறம் உமா அண்ணியால அவளை எதுவும் .செய்ய முடியாதுல்லன்னு சொல்ல..எஸ் புரோ சொல்லிடு.இப்பவே சொல்லிடு அவங்களுக்கு மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு கமலா சொல்றா.

பாக்கிய லட்சுமி ரவி
பாக்கிய லட்சுமியின் ரூமுக்கு போயி,பஞ்சு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பஞ்சுன்னு சொல்றான். இல்லை ரவி எனக்கு மனசு சரியில்லை..கொஞ்சம் தனியா இருக்கணும்னு சொல்றா இவ. கவலைப்படறியா பஞ்சுன்னு இவன் கேட்க..எனக்கு கவலைப்பட கூட உரிமை இல்லையா ரவின்னு கண்ணீர் விடறா பஞ்சு

பஞ்சு ஐ லவ் யூ
பஞ்சு உங்கிட்ட நிறைய பேசணும்னு இருக்கு. அவ்வளயும் பேசினாலும்..என் மனசில உள்ளது எல்லாத்தையும் சொல்லிட்டேனான்னும் தெரியாது. முதன் முதலில் ஒரு பொண்ணு மேல சேத்தை அடிச்சுட்டேன். அப்போ எனக்கு தெரியாது அவதான என் வாழ்க்கையில் வசந்தமா இருக்கப் போறவன்னு.. இன்னுமா உனக்கு புரியலைன்னு கேட்கறான்.அவ திரும்பி பார்க்கறா.பஞ்சு ஐ லவ் யூன்னு சொல்றான் ரவி

நீங்க ரஞ்சி டிராபி
பதில் சொல்லு பஞ்சு....நான் பெங்களூரு போயிட்டு வந்து உன்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன். ஆனா,உன் மனசுக்கு ஆறுதலா இருக்கும்னுதான் இப்பவே சொன்னேன்னு சொல்றான்.என்னால இப்போ பதில் சொல்ல முடியாது ரவி.நீங்க ஜெயிச்சுட்டு வாங்க..நான் பதில் சொல்லறேன்னு சொல்றா.

என் நினைவாக மவுத் ஆர்கன்
இந்தா பஞ்சு... என் நினைவா இந்த மவுத் ஆர்கனை வச்சுக்க பஞ்சுன்னு சொல்லிட்டு ,ஆனா வாசிச்சுடாதன்னு விளையாட்டா சொல்றான். எல்லாரிடமும் விடைப்பெற்று பெங்களூரு போறான் பாக்கிய லட்சுமி மனசையும் எடுத்துக்கிட்டு.
பாக்கியலட்சுமி ரவி கொடுத்த மவுத் ஆர்கனை வச்சுக்கிட்டு நெஞ்சோடு அனைத்து கண்ணீர் விடறா...
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications