நடிக்க 10,000.. அட்ஜஸ்ட் பண்ணா 40,000.. நடிகை ஜீவிதா செய்த சம்பவம்.. பயில்வான் சொன்ன வார்த்தை
சென்னை: நடிகை ஜீவிதா தனக்கு நடந்த அட்ஜஸ்மென்ட் பிரச்சனை பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அது குறித்து பயில்வான் ரங்கநாதன் தற்போது பேசி இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை ஜீவிதாவிற்கு திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பும் பிறகு அட்ஜஸ்மென்ட் பிரச்சனையை ஏற்பட்டதும் அதற்கு ஜீவிதா என்ன செய்தார் என்பது பற்றி அதில் பயில்வான் பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக சமீபத்தில் நடிப்பு துறையில் மட்டுமல்லாமல் பெண்களுக்கு பல துறைகளிலும் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சில இடங்களில் ஆண்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பலர் அதைப் பற்றி வெளியே சொல்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த நிலையில் ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தங்களுக்கு நடந்த அவலங்கள் குறித்து தைரியமாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஜீவிதாவும். இவர் ஏற்கனவே சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்திருக்கிறார். அதிலும் வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டிருப்பார். இந்த நிலையில் தான் இவருக்கு ஒரு சில சினிமாவிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் இவர் நடித்திருப்பார்.

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்காக்களில் ஒருவராக ஜீவிதாவும் நடித்திருப்பார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது ஜீவிதா தன்னிடம் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆரம்பத்தில் சொன்னார்கள். நானும் சரி என்று சொன்னேன். அப்போது என்னிடம் ₹40,000 சம்பளம் என்று பேசினார்கள். ஆனால் அதற்கு நீ அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என சொன்னார்கள்.
இதற்கு நான் கண்டிப்பா என்னால் அதெல்லாம் செய்ய முடியாது என்று சொன்னதால் எனக்கு பத்தாயிரம் ரூபாய் தான் சம்பளம் என்று சொன்னார்கள். ஜஸ்ட்மெண்ட் செய்தால் மட்டும் தான் நாற்பதாயிரம் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதற்கு நான் எனக்கு பத்தாயிரம் ரூபாயே போதும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து 40000 எனக்கு தேவை இல்லை என்று கூறிவிட்டேன் என்று ஜீவிதா சொல்லி இருக்கிறார்.

அது குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டியில் இதை பற்றி பேசியிருக்கிறார். ஒரு சில நடிகைகள் எங்களுக்கு அட்ஜஸ்மென்ட் செய்து தான் வாழ வேண்டும் என்று இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள். அதில் போல தங்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்தும் தைரியமாக பேசுகிறார்கள் என்று அந்த பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறி இருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காரணம் பல நடிகைகள் பற்றி அந்தரங்க விஷயங்களையும் பரபரப்பாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் இப்படி எல்லாம் கூட ஒரு பெண்ணுக்கு ஆதரவாக பேசுவாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications