Bakkiyalakshmi: இனியா திருமணம் முடிந்ததும் ராதிகா சொன்ன விஷயம்! கண்கலங்கிய பாக்யா! கோபி கேட்ட கேள்வி
சென்னை, ஆகஸ்ட் 7, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாக்கியலட்சுமி' சீரியலின் இன்றைய எபிசோடில், இனியா மற்றும் ஆகாஷின் திருமணம், மகிழ்ச்சியையும், சில நெகிழ்ச்சியான தருணங்களையும் தாங்கி நிறைவடைந்தது. இந்தத் திருமணம், குடும்பத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

மகிழ்ச்சியில் இணைந்த குடும்பத்தினர்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், சங்கீத் மற்றும் ரிசெப்ஷன் முடிந்த பிறகு, குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். "இன்னும் கொஞ்சம் பேரை கூப்பிட்டு இருக்கலாம்," என்று சிலர் சொல்ல, "அவர்கள் சிம்பிளாக நடந்தால் போதும் என்று சொன்னதால், இப்படி நடந்தது," என பாக்கியா சொல்கிறார். கோபி, "நம்ம வீட்டில் ஒரு ஃபங்ஷன் என்றால் டான்ஸ் ஆடுவோம், இப்போது எதுவும் காணோம்," என்று சொல்ல, எழில், செழியன், ஜெனி, அமிர்தா, இனியா, ஆகாஷ் மற்றும் பாக்கியா என அனைவரும் சேர்ந்து நடனம் ஆடினர். இதைப் பார்த்த ஈஸ்வரியும், கோபியும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ராதிகா - கோபியின் உரையாடல்
மறுநாள் காலையில், திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ராதிகா தனது மகள் மயூவுடன் வருகிறார். பாக்யா அவர்களை வரவேற்று விசாரிக்க, ராதிகாவும் கோபியும் பேசிக்கொள்கின்றனர். கோபி, "உன் லைப் எப்படி போய்கிட்டு இருக்கு? வேறு யாராவது வாழ்க்கையில் வந்திருக்காங்களா," என்று கேட்க, ராதிகா, " ஏன் கேட்கிறீங்க, நான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத் தான் வாழ்கிறேன்," என்று சொல்லிவிட்டுச் செல்கிறார்.
பின்னர், ராதிகா, இனியாவைச் சந்தித்து நலம் விசாரித்தபின், அமிர்தாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். அப்போது, அங்கு வந்த செல்வியைப் பார்த்து, "வாங்க கலெக்டர் அம்மா," என்று ராதிகா அழைக்கிறார். "நீங்களும் ஒரு முக்கிய காரணம்தான்," என்று ராதிகா சொல்ல, "எல்லா பசங்களுக்கும் உங்களைப் போன்ற ஒரு அம்மா கிடைக்க வேண்டும்," என்று ராதிகா செல்வியைப் பாராட்ட, அவர் நெகிழ்ந்து போகிறார்.
ராமமூர்த்தியின் ஆசிர்வாதம்
ஐயர் திருமண ஏற்பாடுகளைச் செய்ய, இனியா - ஆகாஷ் திருமணம் நல்லபடியாக நடந்து முடிகிறது. ஆகாஷ், இனியாவின் கழுத்தில் தாலி கட்டி, திருமணம் முடிந்ததும், ஈஸ்வரிக்கு ஆறுதலாக, மறைந்த ராமமூர்த்தி தோன்றி, "இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பார்கள்," என்று ஆசிர்வாதம் செய்கிறார். அதைக் கண்ட ஈஸ்வரி, சந்தோஷத்துடன் புன்னகைக்கிறார்.
பிறகு, புதுமணத் தம்பதிகள், பெரியோரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, புகைப்படங்களை எடுத்துக்கொள்கின்றனர். இந்தத் திருமணம், பாக்கியலட்சுமி குடும்பத்தில் ஒரு புதிய தொடக்கத்தைக் கொடுத்துள்ளது. இனியா - ஆகாஷ் திருமணம் இனிதே நிறைவடைந்தது.
கலங்கிய பாக்யா
பிறகு எல்லாரையும் பாக்யா மண்டபத்தில் இருந்து வீட்டிற்கு கூட்டிட்டு போகிறார். அங்கு செல்வியின் புருஷன் நல்ல நேரம் போயிட்டு இருக்கு இனியாவை எங்களுடைய வீட்டுக்கு கூட்டிட்டு போறோம் என்று சொல்கிறார். அதை கேட்ட உடனே பாக்கியா கவலைப்படுகிறார். பிறகு செல்வி இத்தனை நாள் இனியா உங்களுடைய பிள்ளை இனிமேல் இனியா என்னுடைய பிள்ளை என்று பாக்கியாவிடம் சொல்கிறார். இதனால் எல்லோரும் இனியாவை சந்தோஷமாக செல்வி வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications