நடிக்கத்தானே சொன்னாங்க.. பழத்தை பிழிஞ்சு விட்டா எப்படிப்பா பாலாஜி!
சென்னை: சவ்வு போல இழுத்துக் கொண்டு போயிட்டு இருந்த பிக் பாஸ் 4 இப்பதான் முதல் கேம் ஷோ நடத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தால் அதிலேயும் ஒரே சண்டை தான்.
நேத்து வரைக்கும் இளவரசர்கள் ஆக இருந்தவர்கள் இன்று அரக்கர்களாக மாறி நடிக்கச் சொன்னால் உண்மையிலே மாறி விட்டார்கள் போல பாலாஜிக்கும் ஆரிக்கும் செம சண்டை. இவர்களின் சண்டையை பார்த்து விதவிதமாக கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் தான் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் சில நேரங்களில் அரிதான சில பாச காட்சிகளும் இடம் பெறுகின்றது .

தூக்கலான சண்டைகள்
இருந்தாலும் சண்டைகள் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கின்றது. ரசிக்கும் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ப நாளுக்குநாள் சண்டைகளை மட்டுமே காட்டியும் வருகின்றார்கள். அதிலும் தற்போது அரக்கர்களுக்கும் அரச குடும்பத்திற்கும் ஒரு வித்தியாசமான போட்டியை வைத்திருக்கிறார்கள். சும்மாவே இந்த நிகழ்ச்சியை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்று உல்டா
அதிலும் இந்த மாதிரி இவர்கள் பண்ணியிருப்பது அவர்களுக்கு கொண்டாட்டமாக தான் இருக்கிறது. நேற்றைய எபிசோடில் அரசர்களாக இருந்தவர்கள் இன்றைய எபிசோடில் அரக்கர்களாக மாறி இருக்கிறார்கள். நேற்று அரக்கர்களின் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துகிற மாதிரி சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் அமைந்திருந்தது.

பக்காவாக கலக்கும் ஆரி , ரியோ
ஆனால் இன்று அந்த பத்து பொருத்தமும் ரியோவுக்கும், ஆரிக்கும் நன்றாகவே செட் ஆகி விட்டது என்றுதான் கூற வேண்டும். நேற்று பண்ணுனதற்கு பழி வாங்கும் படலம் நடந்து கொண்டிருக்கிறது. பாலாஜியும் ரியோ வும் போட்டி போட்டுக் கொண்டு அரசர்களை கலாய்த்து மட்டுமல்லாமல் கதிகலங்க வைத்திருக்கிறார்கள். அதற்காக இந்த அளவிற்கு இறங்கி வந்து பிக் பாஸ் அரசர்களை தொடாமல் தான் சிரிக்க வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது,

அரக்கர்கள் போலவே மாறியாச்சு
அதை நன்றாகவே புரிந்து கொண்டு இந்த அரக்கர்கள் தங்களுக்கே உரிய குணத்தை காட்டி இருக்கிறார்கள். ஆரியின் கண்ணுக்குள் ஆரஞ்சு பழத்தை பிழிந்து விட்டிருக்கிறார்கள். அதனால் கண் அசைந்த ஆரியை தோற்று விட்டார் என்று கூறி கொண்டாடுகின்றனர். இதனால் கடுப்பான ஆரி, பாலாஜியை வசமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்படி பழத்தைப் பிழியலாமா
ஏன்டா விளையாட்டுன்னாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா.. பழத்தைப் போய் யாராச்சும் கண்ணில் பிழிஞ்சு விடுவாங்களா.. விளையாட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா அரக்கர்களாக நடிக்கச் சொன்னால் அரக்கர்கள் ஆகவே மாறிவிட்டார்களா என்று ரசிகர்களும் இந்த ப்ரெமோவை பார்த்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இன்னும் என்னென்ன அக்கப்போரெல்லாம் இன்று ராத்திரி நடக்கப் போகிறதா.. பார்ப்போம்.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications