அம்மாவை பற்றி உருக்கமாக பேசிய பாலா... இழப்பின் உச்சத்தில் பேசிய வார்த்தை.. ஆதரவு கூறும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் தன்னுடைய அம்மாவை பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார்.
பிக்பாஸ் நான்காவது சீசனில் தன்னுடைய அம்மா, அப்பாவை பற்றி தவறாக பேசிய அதே பாலாஜியா இப்போ இப்படி பேசுவது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

ஏற்கனவே பரிச்சயம் தான்
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கியிருக்கும் பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே பிக்பாஸ் நான்காவது சீசனில் அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர் தான். இவர் தன்னுடைய கம்பீரமான அழகால் மட்டுமல்லாமல் கேரக்டரிலும் ரசிகர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்து இருக்கிறார். அதனால் தான் பிக்பாஸ் நான்காவது சீசனின் ரன்னர் ஆக இவர் வெற்றி பெற்றிருந்தார். தற்போது எப்படியும் வின்னராக ஆகிவிட வேண்டும் என்று பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பார்த்து பார்த்து விளையாடி வருகிறார்.

கலங்க வைத்த கதை சொல்லும் டாஸ்க்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதைசொல்லும் டாஸ்க் ஒவ்வொரு சீசனிலும் நடந்து வரும் முக்கியமான சம்பிரதாயமாக இருந்து வருகிறது. அதுபோலத்தான் நான்காவது சீசனிலும் நடந்தது. அப்போது பாலாஜி முருகதாஸ் தன்னுடைய குடும்பத்தை பற்றி ரசிகர்களுக்கு கூறியிருந்தார். அப்போது குழந்தையாக இருக்கும்போது பெற்றோர் குடித்து விட்டு இவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும், அதனாலே அதிகமாக யாரிடமும் இவர் பாசம் காட்டுவதில்லை என்றும் சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் கூறி இருந்தார். ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் பேசியதை பார்த்து ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

தாமரையிடம் கொட்டிய மனக்குமுறல்
பாலாஜி முருகதாஸ் யாரிடமும் அதிகமாக பாசத்தைக் காட்டுவது இல்லை. அவரிடம் யாராவது காட்டினால் கூட இது நடிப்பா?? என்று நேரடியாக கேட்டு விடுவார். அத்தகைய குணம் உள்ளவர் இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை இடம் மட்டும் அதிகமாக பழகி வருகிறார். தன்னுடைய பெர்சனல் விஷயங்களை கூட தாமரையிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அப்படித்தான் நேற்று எபிசோட்டில் தன்னுடைய தாய்க்கு எதுவும் செய்ய முடியாததை நினைத்து வருந்துவதாக கூறியிருந்தார். தான் சிறு வயதில் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டதால் அம்மாவிடம் அதிகமாக நெருக்கமாக இருந்தது இல்லை. அவருக்கு என்று நான் எதையும் செய்ததே இல்லை என்று கூறியிருந்தார்.

வெறுப்பின் உச்சத்தில் பாலாஜி
இவர் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய மனது மனதுக்கு பிடித்த மாதிரி தான் வாழ்ந்து வந்தாராம். அப்போது ஒரு நாள் ஜிம்மில் இருக்கும் போது தான் இவருக்கு போன் வந்திருக்கிறது. இவருடைய அம்மா இறந்து விட்டார் என்று, அந்த செய்தியை கேட்டு அவர் அப்படியே உறைந்து போய் விட்டாராம். உடனே கிளம்பி வர முடியாத சூழ்நிலையில் இவர் மாட்டிக் கொண்டாராம். தற்போது இவர் சம்பாதித்து கையில் பணம் இருந்தாலும் அவருடைய அம்மாவுககு எதுவும் வாங்கி கொடுக்க முடியவில்லை, தன்னுடைய தந்தையும் என்னுடன் இல்லை நான் யாருக்காக சம்பாதிக்கிறேன் என்றே தெரியவில்லை பல நேரங்களில் வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது என்று தன்னுடைய சோகத்தை தாமரையிடம் கூறியிருக்கிறார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications