barathi kannamma serial: அடடே... நம்ம மணிமேகலையும் சீரியலுக்கு நடிக்க வந்தாச்சா?
Recommended Video
சென்னை: நிகழ்ச்சித் தொகுப்பாளர் மணிமேகலை விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வந்துள்ளார். மணிமேகலை மணிமேகலை பெயரிலேயே அந்த சீரியலில் நடிச்சு இருக்கார். பாரதிக்கு சவுந்தர்யா பார்க்கும் பெண்ணாக இவர் நடிச்சு இருக்கார்.
சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்கிற அந்தஸ்தில் வலம் வந்துக்கொண்டு, பெரிய பெரிய ஸ்டார்ஸ் நேர்காணல் எல்லாம் கண்டுக்கொண்டு இருந்த மணிமேகலை திடீரெனெ சன் டிவியை விட்டு விலகிவிட்டார்.
இவர் ஆரம்பம் என்னவோ சன் மியூசிக் சானல்தான் என்றாலும், பின்னர் சன் டிவியில் பெரிய நிகழ்சசிகளைத் தொகுத்து வழங்குவது, புதிய படங்கள் ரிலீசானால், அதுத தொடர்பான ஷோவை வழங்குவது... நடிகர் நடிகைகள் நேர்காணல் செய்வது என்று அசத்தி வந்தார்.

கணவர் ஹுசைன்
ஹுசைனின் நடனம் மணிமேகலைக்குப் பிடித்துப் போக, இவரே அவரின் போன் நம்பர் வாங்கி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது தூக்கத்தில் இருந்த ஹுசைன், மணிமேகலையா.. ஓகே ஓகே இப்போ எனக்குத் தூக்கம் வருதுன்னு அசால்டாக சொல்லிவிட்டு கட் செய்திருக்கிறார். மணிமேகலை. என்னடா மணிமேகலைன்னு சொல்றோம்.. இவ்ளோ அசால்ட்டா கேட்டுட்டு போனை வச்சுட்டாரேன்னு எண்ணம் வந்து இருக்கு.

காதலில் விழுந்தேன்
இருந்தாலும் ஹுசைனின் மேல் காதலில் விழுந்துட்டாராச்சே மணிமேகலை. அதனால், மறுநாள் மறுநாள் என்று போன் செய்து நட்பை வளர்த்தவர், தன்னோட காதலையும் சொல்லி இருக்கார். இருவருக்குமான காதல் மலர்ந்து பெற்றோர் எதிர்க்க, இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். பின்னர் விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பையும் பெற்றார்.

கொண்டாடியது விஜய் டிவி
மணிமேகலையையும் ஹுசைனையும் விஜய் டிவி கொண்டாடி மகிழ்ந்தது, அவர்களையும் மகிழ்வித்தது. ரசிகர்கள் மனதில் நல்ல இடத்தில் இருந்த மணிமேகலை, குக்கு வித் கோமாளியின் கோமாளியாக பங்கேற்று, நிஜமான கோமாளி முகத்தையும் காண்பித்துக்கொண்டு இருக்கார். இந்த நேரத்தில்தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தும் இருக்கார்.

நடிப்புத் தொடருமா?
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருக்கும் மணிமேகலையின் நடிப்புப் பயணம் தொடருமா என்று தெரியாவில்லை. இப்போதைக்கு கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்று பாரதிக்கு ரெண்டாம் தரமாக கல்யாணம் பண்ணி வைக்க சவுளந்தர்யா அம்மா தேடும் பெண்ணாக நடிச்சு இருக்கார் மணிமேகலை. விஜய் டிவி சீரியல்களில் ஒருவர் நடித்துவிட்டால், அவரை எளிதில் விட்டுவிடாது விஜய் டிவி. அந்த வரிசையில் இப்போது மணிமேகலையும் சேர்ந்து உள்ளதால், இனி மணிமேகலை ஏதாவது ஒரு சீரியலில் நடிப்பார் என்றே தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications