Barathi kannamma serial: ஒத்தையிலே கண்ணம்மா... விட்டுட்டியே பாரதி?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் கருப்பு கண்ணம்மாவின் அழகு தங்கை அஞ்சலிக்கும், பாரதியின் தம்பி அகிலனுக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது.
பாரதிதான் கருப்பு கண்ணம்மாவை தனது அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டவன். அதுவும் கருப்பு என்றாலே ஆகாத அம்மாவை எதிர்த்து கல்யாணம் செய்துகிட்டான்.கருப்பு நிறம் என்றால், பணக்கார தொழிலதிபர் சவுந்தர்யா அம்மாவுக்கு பிடிக்காது.
மொத்தத்தில் அழகு மட்டும்தான் பிடிக்கும், கருப்பு என்றால் இருள் சூழ்ந்து போச்சுன்னு அவங்களுக்கு அர்த்தம். தனது மகள் வயிற்று பேத்தியை கூட அவள் கருப்பு என்று இதுவரை தொட்டதில்லை.

கண்ணம்மா அஞ்சலி
அண்ணன் பாரதி கருப்பு கண்ணம்மாவையும், கண்ணம்மாவின் தங்கையான அஞ்சலியை பாரதியின் தம்பி அகிலனும் கல்யாணம் செய்துக்க போறாங்க. இதில் பாரதி கண்ணம்மா கல்யாணம் முடிஞ்சு போச்சு.இப்போ அகிலன் அஞ்சலி கல்யாணம் நடக்க போகுது. அஞ்சலி கண்ணம்மாவின் அப்பாவுக்கு இரண்டாம் தாரத்துக்கு பிறந்த பெண்.மிஸ் சென்னை வேற.

அம்மா சவுந்தர்யா
சவுந்தர்யா அம்மா இப்போது நடக்க இருக்கும் அகிலன், அஞ்சலி கல்யாணத்தை ஊரும், உறவும் மெச்ச நடத்தணும்னு கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க.இந்த கல்யாணத்தில் கருப்பு கண்ணம்மா இருக்கவே கூடாது எப்படி இதை செய்யலாம் என்று யோசிச்சுகிட்டு இருக்காங்க. கண்ணம்மாவுக்கு வேலைக்காரிக்கு எடுப்பது போல ஒரு புடவை எடுத்து கொடுக்கறாங்க.

நாத்தனார் சுருதி
கண்ணம்மாவின் நாத்தனார் சுருதி தான ஒரு பட்டுப்புடவையை கண்ணம்மாவுக்கு கட்டிக்க கொடுத்து, அவளுக்கு நிறைய நகைகள்போட்டு அலங்கரித்து காரில் ஏற சொல்கிறாள். அதோடு, கல்யாண மண்டபத்துக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் பொறுப்பாக கண்ணம்மா எடுத்து வைத்து விட்டு,காரில் ஏறப்போக இதுல வேணாம்னு சொல்லிடறாங்க சவுந்தர்யா அமமா.

யாரு வீட்டை
கடைசி காரில் ஏறப்போக, எல்லாரும் கிளம்பிட்டா யாரு வீட்டைப் பார்த்துக்குவான்னு சவுந்தர்யா அம்மா கேட்க, நாங்க இருந்து பார்த்துக்கறோம்னு வேலைக்காரி சொல்ல, நீ வந்தால்தான் அங்கே வேலை நடக்கும்னு சொல்லிட்டு நிக்கறாங்க. அப்போ நான் வீட்டை பார்த்துக்கறேன்னு கண்ணம்மா சொன்னதும் ,அந்த அம்மாவுக்கு அப்பாடான்னு நிம்மதியா இருக்குது. அதாவது இந்த கருப்பு பெண்ணை மருமகள் என்று சொல்லிக்க சவுந்தர்யா அம்மாவுக்கு விருப்பம் இல்லையாம்.
இப்படி தன்னை நம்பி வந்த கண்ணம்மாவை கல்யாணத்துக்கு கூட அழைச்சுக்கிட்டு போகாமல் ஒத்தையில விட்டுட்டு போயிட்டானே பாரதி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications