Barathi Kannamma Serial: ஆஹா செம பாட்டி...பார்க்க போனா பார்ட்டியும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு ட்விஸ்ட்டான கதைதான்.அதோடு விழிப்புணர்வு கதையாவும் இருக்கிறது. அழகு என்பது பார்க்கும் பார்வையில்தான் என்பதை இந்த கதையில் நன்றாக புரிய வைக்கிறார்கள்.

பாரதி கருப்பு கண்ணம்மாவை ஆசை ஆசையாய் காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான். ஆனால், அவனின் அம்மாவுக்கு கருப்பு என்றாலே பிடிக்காது. தனது மகள் வயிற்று பேத்தி கருப்பு என்பதால் இதுவரை அவளை தொட்டு கூட பார்த்ததில்லை சவுந்தர்யா அம்மா.

இந்த நிலையில்தான் கருப்பு கண்ணம்மாவின் தங்கை அஞ்சலிக்கும், பாரதியின் தம்பி அகிலனுக்கும் கல்யாணம் நடக்க இருக்கிறது. அஞ்சலி பாரதியை இன்னும் காதலிச்சுக்கிட்டு இருக்கா.

அஞ்சலி காதல் பேச்சு

அஞ்சலி காதல் பேச்சு

அஞ்சலி கண்ணம்மாவின் புருஷன், வரும் கால கணவர் அகிலனின் அண்ணன் பாரதியின் போட்டோவை எடுத்து பார்த்து தனக்குத் தானே காதல் வசனம் பேசிகிட்டு இருந்ததை, அஞ்சலியின் பாட்டி கேட்டுடறாங்க. பாட்டியைப் பார்த்த அஞ்சலி ,இதென்னடி கர்மம்னு கேட்டு, அகிலனை கல்யாணம் செய்துக்க போறே.. இவனை நினைச்சு புலம்புறியான்னு கண்டிப்பா பேசறாங்க.

பாரதியைத்தான் பாட்டி

பாரதியைத்தான் பாட்டி

பாட்டி நான் முதலில் பாரதியைத்தான் காதலிச்சேன்னு அஞ்சலி சொல்ல, இதை அவன் கிட்டே சொன்னியான்னு கேட்கறாங்க பாட்டி. சொன்னேன்னு அஞ்சலி சொல்ல, அப்போ அந்த பெரிய மனுஷன் என்ன சொன்னார்னு கேட்கறாங்க பாட்டி. அவர் பிடிக்கலேன்னு சொன்னார்னு அஞ்சலி அழறா. .அப்போ அதோட நீ விட்டு இருக்கணும் இல்லே.. இந்த எண்ணத்தோடதான் ஊரில் அவர்கிட்டே விளையாடினியான்னு கேட்கறாங்க.

சொன்னியா அகிலனிடம்?

சொன்னியா அகிலனிடம்?

இதை அகிலன் கிட்டே சொன்னியா..உன் மேல எனக்கு காதல் வரலேன்னு.நீ நல்லவளா இருந்தால் அவன்கிட்டே உண்மையை சொல்லிட்டு விலகிப் போயிருக்கணும் இல்லையான்னு பாட்டி கேட்க, பாட்டி, எனக்கு பாரதியை அடைய வேற வழி தெரியலைன்னு அழறா. இப்படி அடைய நினைக்கறதுக்கு பேர் காதல் இல்லடி.. கள்ள காதல். எனக்கு அடி தடி வெட்டு குத்து இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.ஆனால் ,இந்த ஒரு காரியம் தப்புடி. என்னையே உலுக்குது உன் செயல் அஞ்சலின்னு பாட்டி கண்டிக்கறாங்க.

கல்யாணத்துக்கு பிறகு

கல்யாணத்துக்கு பிறகு

இப்போ காதல் வரலேன்னா என்ன.. உன்னையே நினைச்சு உயிரை விட துணிஞ்சவன் அகிலன். அவனை கல்யாணம் செய்துகிட்டு பிறகு காதல் வரலாம். இப்படி வாழறதா இருந்தா இந்த கல்யாணத்தை செய்துக்கோ .இல்லேன்னா உன் மாமா, அம்மாகிட்ட உன் மனசில் இருப்பதை சொல்லு. அவங்களும் நான் சொன்னதையே சொன்னா கல்யாணம் செய்துக்கோ .இல்லேன்னா உன் இஷடம்னு பாட்டி சொல்றாங்க.

பாட்டி இல்லை

பாட்டி இல்லை

இல்லை பாட்டி இப்போ நடந்த இந்த சம்பவம் எனக்குள்ளே புதைஞ்சு போகட்டும். நீங்க சொல்ற மாதிரி நான் பாரதி மாமாவை மறந்துட்டு, அகிலனை கலயாணம் செய்துக்கறேன். ஆனா,இந்த கண்ணம்மாவைன்னு அவள் பல்லை கடிக்க, நீ என்ன வேணும்னாலும் செய்து அவளை பழி வாங்கு, நானும் உனக்கு உறுதுணையா இருக்கேன்னு பாட்டி சொல்றாங்க.

இதுவரைக்கும் கண்டிப்பா இருந்த பாட்டி, இப்போ அஞ்சலிக்கு கை கொடுக்கும் பார்ட்டியா . மாறிட்டாங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+