Barathi Kannamma Serial: புழு கூட சாகடிக்க போனா போராடுது... கண்ணம்மா ஏன் இப்படி?
சென்னை: பெண்கள் என்றால் மட்டும் பொறுமை தேவை என்பது இல்லை.பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாக பொறுமை தேவை. குடும்ப பொறுப்பு, குழந்தை வளர்ப்பு இது போல சில விஷயங்களுக்கு பொறுமை தேவைப்படுகிறது.
மற்றபடி பொறுமை என்கிற வார்த்தை இரு பாலாருக்கும் .பொருந்தும். விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் பெண்களை ரொம்பவே பின்னோக்கி கொண்டு செல்வதாக இருக்கிறது.
விஜய் டிவியின் அத்தனை சீரியல்களும் இந்த ரகத்தில்தான் இருக்கிறது. இதை நிர்வாகம் பார்த்து கொஞ்சம் சீர் செய்தால் தேவலை.

கண்ணம்மா கருப்பு
கருப்பு என்பதால் மட்டுமே கண்ணம்மா எத்தனை கொடுமைகளை அனுபவிக்கிறாள்.அத்தனைக்கும் பொறுமையாக போகும் அளவுக்கு, அவளுக்கு ஏற்ற மாதிரியான சூழ்நிலைகளை அமைத்து கொடுத்து இருக்கிறார்கள். சின்ன வயசில் பயம் இருக்கும், அப்போது எதுவும் செய்ய முடியாது. இப்போது வளர்ந்து, அவளையும் டாக்டர் பாரதி காதலித்து கல்யாணமும் செய்துகிட்டு, அவளுக்கு பக்க பலமாக இருக்கிறான்.

மாயன் பொண்டாட்டி
கண்ணம்மாவை புகுந்த வீட்டில் வாழ விடாமல் துரத்தி அடிக்க, மாற்றான் தாயும் , அவரது அம்மாவும் சேர்ந்து, மாயன் என்கிற ரவுடியின் மனைவியை, மாற்றான் தாய் தனது மகளின் பாதுகாப்புக்கு புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கறாங்க அவளை.

மாயன் பொண்டாட்டி
ஒரு வேலைக்காரியாக வந்திருக்கும் ரவுடி மாயனின் பொண்டாட்டி, நான் அஞ்சலியின் பாதுகாப்புக்கு மட்டும் இங்கே வந்தேன்னு நினைச்சியா? உன்னை இந்த வீட்டை விட்டு துரத்தி அடிக்கத்தாண்டி வந்திருக்கேன்னு சொல்றா. ஒரு வேலைக்காரி இவ்ளோ திமிரா பேசுறியான்னு கண்ணம்மா கேட்கிறாளே தவிர. மேலும் எதுவும் பேச முடியாமல் நிற்கிறாள்.

பழி உன் மேல்
உங்க அத்தை குடிக்கற காபியில் ஒரு மாத்திரையை கலந்து, நீதான் கலந்து குடுத்தேன்னு சொன்னால், உன் அத்தை அப்படியே என்னை நம்பிருவாங்க .அப்படிப்பட்ட இடத்தில்தான் நீ இந்த வீட்டில் இருக்கேன்னு வேலைக்காரி மிரட்டறா. இதுக்கும் எதிர்த்து பேசாமல், அவளை எதாவது சொல்ல போயி,அது அப்பாவுக்கு பிரச்சனை வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்கறா.
இப்படிப்பட்ட கதைகள் கொண்ட சீரியலைப் பார்த்தால்...நிச்சயமா நெஞ்சு பொறுக்குதில்லை!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications