Barathi Kannamma: பாரதி கண்ணம்மா ரீல்தான் இப்படின்னா ரியாலிட்டி இதுக்கும் மேல!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் குடும்பத்துக்குள் இருக்கும் நபர் கூட ஒருத்தரை ஒருத்தர் கலந்து பேசிக்கறதில்லையாம். இதுல மிஸ் அண்டர்ஸ்டான்டிங் வருது. அதை கிளியர் பண்ணிக்கறதும் இல்லை.
படிக்கும் உங்களுக்கே இப்படி கடுப்பாகுதுல்ல... விஷயத்தை பாருங்க... பாரதிக்கு குழந்தை பிறக்காதுன்னு வெண்பா பொய்யான சர்டிஃபிகேட் குடுக்கறா. டாக்டர் பாரதி இதை ஏத்துக்கிட்டு... வேற டாக்டரை கூட பார்க்கலை.
கண்ணம்மாவை காதலிச்சு கல்யாணம் செய்துக்கறான் பாரதி. குழந்தை பிறந்து நம்மை விட்டு போயிருவானோன்னு பயப்படற வெண்பா அவளுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பு கம்மின்னு சொல்லிடறா.

கண்ணம்மாவுக்கு டெஸ்ட்
கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்கறது பற்றி ஒரு டெஸ்ட் எடுக்கணும்னு கூப்பிட கண்ணம்மா புருஷனுக்கு தெரியாம போகிறாளாம். அந்த டெஸ்டில் கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்காதுன்னு இன்னொரு பொய்யான சர்டிஃபிகேட் குடுத்து. குடும்பத்தையே குழப்பி விட்டுட்டா வெண்பா. கண்ணம்மாவுக்கு குழந்தை பிறக்க கூடாதுன்னு மாத்திரையும் குடுத்துடறா.

டாக்டர் புருஷன்
பாரதி, கண்ணம்மாவுக்கு டாக்டர் புருஷன்.. குழந்தை பிறக்க கூடாதுன்னு பொண்டாட்டி சாப்பிடும் மாத்திரையை என்ன என்று கூட பார்க்க மாட்டானா...? சரி.. பொண்ட்டாடி என்ன மாத்திரை சாப்பிடுகிறாள் என்று வெண்பா சொன்னபிறகு கூடவா மாத்திரையை டெஸ்ட் செய்ய மாட்டான்? உனக்கு குழ்ந்தை பிறக்காதுன்னு கண்ணம்மாவுக்கு தெரிஞ்சா வம்பாயிரும்ல பாரதி. அதுக்குத்தான் கண்ணம்மாவுக்கு குழந்தைபிறக்காதுன்னு சொன்னேன்னு வெண்பா சொன்ன பிறகும்.. சரி என்ன மாத்திரை சாப்பிடுகிறாள் கண்ணம்மா என்று பார்க்க மாட்டானா?

கதையில் ஓட்டை
வெண்பா ஆட்டம் மட்டுமே எடுபடும் படி கதையை கொண்டு சென்று இருக்கார் இயக்குநர். பாரதி வேறு டாக்டரிடம் டெஸ்ட் எடுக்காமல் இருப்பது.. கண்ணம்மா குழந்தை பிறக்காதுன்னு வெண்பா சொன்னபிறகு இன்னொரு டாக்டரை பார்க்காதது..வெண்பா மணிமேகலைக்கு குழந்தை பிறக்குமா என்று டெஸ்ட் செய்ய முற்பட்ட போது.. மணிமேகலை வீட்டுக்கு வந்து சவுந்தர்யா அம்மாவிடம் சத்தம் போடுவது.. அப்போதாவது எதுக்கு வெண்பா நான் சொல்லாததை நீ செய்தேன்னு கண்டிக்காதது... இது எல்லாமே சீரியல் பார்ப்பவர்களுக்கு பிபி எகிற வைக்குது.கதையின் ஓட்டை இதெல்லாம்...

200 வது எபிசோட்
பாரதி கண்ணம்மா சீரியல் 200 வது எபிசோட் தாண்டி விட்டது என்று அண்மையில் விஜய் டிவி கொண்டாட்டம் வைத்தார்கள். சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவர் தன்னை எதுக்கு இந்த கேரக்டருக்கு செலக்ட் செய்தீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டார். பார்க்கும்போதே இரிடேட்டிங்கா இருக்கணும்னு உங்களை தேர்வு செய்தேன்னு இயக்குனர் சொன்னார்.

டைரக்டரை ஹக்
எனக்கு நிறைய திட்டி திட்டி மெசேஜ் குவியுது.. நாசமா போயிருவே..நல்லாவே இருக்க மாட்டேன்னு.. இப்படித்தான் திட்டறாங்க. ஆனால், இதெல்லாம் பாஸிட்டிவா மாறி நான் நல்லா இருக்கேன். இந்த ரோல் குடுத்த இயக்குநருக்கு ஒரு ஹக் குடுக்க ஆசைப்படறேன்னு சொல்லி சொன்னார். ஃபரீனா இயக்குநர் அருகில் வர, இயக்குநரின் மனைவி அவரை ஹக் செய்ய விடவில்லை. ஒரு பிரதர் ஹக்னு எவ்வளவோ சொல்லியும் அவர் மனைவி விடுவதாக இல்லை. வேணும்னா என்னை ஹக் பண்ணிக்கோ என்று சொன்னார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications