கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு... இதோ கண்ணம்மா கழுத்துல பாரதி தாலி கட்டிட்டானே....!
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் உண்மையா ஒரு விழிப்புணரவை தூண்டுவதா இருக்கு.
கண்ணம்மா ரொம்ப கருப்பு நிறம்... பெத்த அம்மா வேற இல்லாத பொண்ணு.. சித்தி கொடுமை. அப்பா மட்டும்தான் ஆதரவு.
சித்திக்கு பிறந்த பெண் அஞ்சலி ரொம்ப அழகு.மிஸ் சென்னை வேற. மொத்தத்துல அஞ்சலி இளவரசி. கண்ணம்மா பணியாள்.

சவுந்தர்யா அம்மாவுக்கு
அஞ்சலியை சவுந்தர்யா அம்மாவுக்கு ரொம்ப புடிச்சு போகுது. சவுந்தர்யா அம்மாவின் ரெண்டாவது மகன் அகிலனுக்கு அஞ்சலி மேல லவ் வந்துருது. உடனே மகனின் ஆசையைத் தீர்த்து வைக்கும் விதமா தொழிலதிபர் சவுந்தர்யா அம்மா உடனே கல்யாணத்துக்கு சம்மதிச்சுடறாங்க.

கண்ணம்மா இருப்பது
சம்மந்தம் வச்சுக்கிட்ட பின்னர்தான்,அவங்க வீட்டுல கண்ணம்மான்னு ஒரு கருப்பு பொண்ணு இருக்கறது சவுந்தர்யா அம்மாவுக்கு தெரியுது. அந்த பணக்கார அம்மாவுக்கு கறுப்புன்னாலே ஆகாது. பெத்த பொண்ணோட பொண்ணு கருப்பா இருக்குதுன்னு அந்த பேத்தியை தொட்டது கூட இல்லை.

பாரதியை அஞ்சலிக்கு
அஞ்சலியை பிடிச்சு போன நிலையில், அஞ்சலி குடும்பம் வாழ பங்களா,கார்னு சம்மந்தியம்மா கொடுக்கறாங்க. ஆனா, இந்த அஞ்சலிக்கு தம்பி அகிலனை பிடிக்கலை... அண்ணன் டாகடர் பாரதியைத்தான் பிடிக்குது. பாரதிக்கு அஞ்சலியைப் பிடிக்கலை

பாரதி மேல லவ்
பாரதியை லவ் பண்றேன்னு வாய் கூசாம, பாரதிகிட்டே காதல் வசனம் பேசறா அஞ்சலி. தம்பிக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு இப்படி நடந்துக்கறது தெரிஞ்சா என் அம்மா கல்யாணத்தையே நிறுத்திருவாங்கன்னு பாரதி எமோஷனல் ஆகறான்.

பாரதிக்கு டார்ச்சர்
பாரதிக்கு அப்பப்போ லவ் டார்ச்சர் குடுத்துகிட்டே இருக்கா அஞ்சலி. ஆனா, பார்த்த உடனே கருப்பு கண்ணம்மாவை பாரதிக்கு பிடிச்சு போகுது. அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான் பாரதி. அம்மா சவுந்தர்யாவுக்கு கண்ணம்மாவை கண்டாலே ஆகாது.

குளிச்சுட்டு வா
கண்ணம்மாவுக்கு வைத்தியம் பார்த்ததுக்கே குளிச்சுட்டு உள்ளே வான்னு சொல்றாங்க சவுந்தர்யா அம்மா. இந்த குடும்பத்துல எப்படி என் பொண்ணு நிம்மதியா இருக்கும்னு கண்ணம்மா அப்பா சொல்றார். கவலைப் படாதீங்க மாமா நான் பார்த்துக்கறேன்னு சொல்றான் பாரதி.

பிறந்த நாள் பரிசு
அஞ்சலி பாரதிக்கு போன் செய்து...பாரதி மாமா எனக்கு பிறந்த நாள் வருது.ரொம்ப கிராண்டா கொண்டாட போறேன்... அப்போ அத்தைகிட்ட நான் உங்களைத்தான் லவ் பன்றேன்னு சொல்லுவேன்.உங்களுக்கும் என் மேலதான் லவ்வுன்னு நம்ப வைப்பேன்னு சொல்றா.

கடுப்பான பாரதி போனில்
ரொம்ப கடுப்பான பாரதி வெறுப்பில் அஞ்சலியின் நக்கல் போன் காலை அட்டென்ட் பன்றான்..மாமா தயாரா இருங்க...நாமதான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொல்ல...சரி அஞ்சலி... நான் வர்ற வரைக்கும் கேக் கட் பண்ணாத.. ஒரு பெரிய கிஃப்டோட வரேன்னு சொல்றான்.

கண்ணம்மாதான் கிஃப்ட்
பார்த்தால் அஞ்சலியின் பார்த் டே அன்னிக்கு கண்ணம்மாவை கோயிலில் கல்யாணம் செய்துக்க ஏற்பாடு நடக்குது.இதே நாளில் சித்தியும், அஞ்சலியும் பாட்டியோட சேர்ந்துக்கிட்டு, கண்ணம்மாவை மாயாண்டியை விட்டுக் கடத்த சொல்லி கல்யாணம் செய்துக்க சொல்லிட்டு வந்திருக்காங்க.
ஆனா, கருப்பு கண்ணம்மாவுக்கு அவ மேல ஆசைப்பட் ட பாரதி தாலிகட்ட போறான்... நல்லாருக்கு...
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications