Biggboss 7: கவினை அறை விட்ட பிரதீப் ஆண்டனிக்கு இப்படி ஒரு நோயா.. நேற்றைய டாஸ்கில் வெளிவந்த தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7-ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றுள்ள பிரதீப் ஆண்டனி தனக்கு மன நோய் இருப்பதாக அவரே தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7ஆவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. இது தொடங்கிய முதல் வாரமே கடுமையான சண்டை நிகழ்ந்தது.

BB 7 Pradeep Antony says that he is suffering OCD

அதிக அளவில் சர்ச்சையில் சிக்கியது பிரதீப் ஆண்டனிதான். இவர் இந்த சீசனின் அசீமா என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டு வந்தனர். இவர் நடிகர் கவினின் நண்பர். இவர் கவின் பிக்பாஸில் கலந்து கொண்ட போது freeze round இன் போது பிக்பாஸ் வீட்டுக்குள் பிரதீப் வந்திருந்தார்.

அப்போது வந்த வேகத்தில் கவினை ஒரு அறைவிட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. இவர் இந்த சீசனில் வந்ததால் யார் கன்னத்தில் அறை விடப் போகிறாரோ என்ற கேள்வி எழுந்தது. இந்த சீசனிலும் சண்டைக்கோழியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரதீப். முதல் வாரத்திலேயே விசித்ரா, விஜய் வர்மா, மாயா என பல போட்டியாளர்களிடம் சண்டை போட்டார்.

இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் நடந்த டாஸ்கின் போது தனக்கு மனநோய் இருப்பதாக தெரிவித்திருந்தார். பிக்பாஸ் வீட்டில் வாரவாரம் டாஸ்க்குகள் வழங்குவார்கள். அந்த வகையில் இந்த வாரம் யாருக்கு பாப்புலாரிட்டி அதிகமாக இருக்கிறது என்பதை போட்டியாளர்கள் இருவர் இருவராக வந்து விளக்க வேண்டும். அந்த விவாதத்தின் முடிவில் மற்ற போட்டியாளர்கள் அந்த இருவரில் யார் வெற்றியாளர் என்பதை வாக்களித்து அறிவிப்பார்கள்.

அந்த வகையில் நேற்று பிரதீப் ஆண்டனியும் விஜய் வர்மாவும் இந்த டாஸ்கில் போட்டியிட்டனர். அப்போது பிரதீப் கூறுகையில் தான் பிக்பாஸுக்கு வரும் முன்பு தனது சோசியல் மீடியா பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துவிட்டு வந்துவிட்டேன். எனக்கு ஓசிடி நோய் எனப்படும் மனநோய் இருக்கிறது. ஓசிடி நோய் என்பது ஒரு செயலை திரும்ப திரும்ப செய்வதுமட்டும்தான். அதுகுறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்து போவதுதான். டிஜிபி விஜயகுமாருக்கும் ஓசிடி எனும் மனநோய் இருந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+