பார்த்து பேசுங்க நான் மதுரைக்கார பொண்ணு... மதுர மல்லி மாதிரி வெள்ளை மனசு...!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் சுகாசினி மதுரை பெண். தைரியம்.. எதையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற துணிச்சல் அதிகம் உண்டாம் இவரிடம்.
பிறந்தது படிச்சது எல்லாம் மதுரையில்தான். வேலைக்காக சென்னைக்கு வந்தவர் யதேச்சையாகத்தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றதாக கூறுகிறார்.
ஜீ தமிழ் டிவியில் செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமான இவரின் நிஜ பெயர் சுமையா.. இப்போது எங்கே போனாலும் இவரை சுஹாசினின்னுதான் கூப்பிடறாங்களாம்.

கண்மணிக்கு வில்லியா நாயகியில்
சன் டிவியின் நாயகி சீரியலில் கண்மணியின் கணவன் செழியனை கல்யாணம் செய்துக்க பல வில்லத்தனமான காரியங்களை தொடர்ந்து செய்து வரும் ரோல் இவருக்கு. சொந்த குரலில் பேசி அருமையாக நடித்து வருகிறார். பார்க்கறவங்க எல்லாம் கண்மணியை வாழ விட மாட்டியான்னு கேட்கறாங்க... இதுதான் என் சக்ஸஸுனு சொல்கிறார்.

கெத்து மதுரைக்கார பொண்ணு
எனக்கு உள்ளுக்குள்ள மதுரைக்கார பொண்ணுன்னு எப்பவும் ஒரு கெத்து இருக்கும். இருட்டில் தனியா போனால் கூட நாம ஏன் பயப்படணும்... மதுரைக்கார பொண்ணுக்கு பயம் இருக்கலாமான்னு நடையிலே தைரியத்தை கொண்டு வந்து கெத்தா நடப்பேன்னு சொல்றார்.

ஜிகர்தண்டா மதுரைக்கே
மதுரையின் ஜிகர்தண்டான்னு உங்களுக்கு பேர் வைக்கலாம்னு தோணுது.இந்த ஜிகர்தண்டாவுக்கு பிடிச்சது என்னனு கேட்டால்,வேற என்ன ஜிகர்தண்டாதான்.. அப்புறம் மதுரை கறிக்குழம்பு ரொம்ப நல்லாருக்கும். மதுரை இட்லியும் மதுர மல்லி மாதிரி சாஃப்டா இருக்கும். மதுரைக்கு வந்தா மறக்காம சாப்பிடுங்க.

வில்லி நடிகை
நாயகி சீரியலில் செழியனும், கண்மணியும் லவ் பண்ணுவாங்க.அதுக்குள்ள சுகாசினியை செழியனுக்கு பொண்ணு பார்த்துருவாங்க. ஆனா,சுஹாசினி செழியன் ஒரு இளிச்ச வாயன்...அவனை கல்யாணம் செய்துகிட்டா நாம சந்தோஷமா ஜாலியா ஊர் சுத்தலாம்னு பாய் ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசிகிட்டு இருந்ததை கேட்டுட்டு கண்மணி செழியனிடம் சுகாசினி பத்தி சொல்லியும் அவன் நம்பமாட்டான்.

தன்னை செழியன் கெடுத்துட்டதா
கல்யாணத்தை நிறுத்த முடியாத கண்மணி செழியன் தன்னை கெடுத்துட்டதா பொய் சொல்லி அவனை கல்யாணம் செய்துக்கறா. அன்றிலிருந்து கண்மணிக்கும், சுகாசினிக்குமான போர் இப்போது வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு நாயகி சீரியலில்.

பாய்ஃபிரண்ட் நிஜத்தில்?
நிஜத்தில் யாரு உங்களுக்கு பாய்ஃபிரண்ட் என்று கேட்டால்..நீங்க வேற மதுரை பொண்ணுன்னு சொன்னாலே தெறிச்சு ஓடறாங்க... எனக்கும் அது சந்தோஷமாத்தான் இருக்குன்னு சொல்லிட்டு ஜிகர்தண்டா மாதிரி சில்லுன்னு சிரிக்கிறார்.

தோழியாக ரோஜாவில்
சன் டிவியின் ரோஜா சீரியலிலும் ரோஜாவின் தோழியாக நடிக்கிறாரா.நடிக்க வந்த குறுகிய நாட்களில் இத்தனை சீரியலில் எப்படி என்று கேட்டால் நடிக்கறதுக்கு ஆட்கள் பற்றாக்குறை... அவ்ளோதான் வேற என்ன சொல்றதுன்னு கேட்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications