'கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலை' மகத்துவம் பற்றி சொல்லி அசத்திய தேனீர் இடைவேளை யூடியூப் சேனல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகமே கைக்குள் அடக்கம் என்பது போல செல்போன் எல்லா விஷயத்திலும் பேருதவியாக இருக்கிறது. இதில் கேமிரா நெட் பேக் இருந்தால் போதும்.

இதிலேயே உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கும் விஷயத்தை அறிந்துக் கொள்ளலாம்.யாருடனும் பேசலாம். அதோடு யூடியூப் சானல் மூலம் பனமும் சம்பாதிக்கலாம்.

இப்படித்தான் அவரவர் பல முக்கியமான விஷயங்களை செல்போன் கேமிராவில் படமாக்கி யூடியூப் மூலம் பதிவிட்டு உலகத்தின் பலரையும் தன்வசம் ஈர்த்து பணமும் சம்பாதித்து வருகின்றனர்.

தேநீர் இடைவேளை

தேநீர் இடைவேளை

பிரகதீஷ் என்கிற இளைஞர் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் போல தானே இரு கெட்டப்பில் பேசி, கேள்வியும் நானே பதிலும் நானே என்பது போல தேநீர் இடைவேளை என்கிற யூடியூப் சானல் நடத்தி வருகிறார். இதில் ஆவின் பால் இந்த நிற கவரில் இருந்தால் அதுக்கு என்ன அர்த்தம் என்பது போல மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை எளிமையாக சொல்கிறார்.

வெற்றிலை வெறும் இலையா?

வெற்றிலை வெறும் இலையா?

வெற்றிலை என்பது வெறும் இலை அல்ல என்கிற நல்ல விஷயங்களை இந்த வீடியோ மூலம் இரு கெட்டப்பில் வந்து தகவல்கள் சொல்கிறார். இப்போது வெற்றிலை விற்பவரும் இவரே.. வாங்குபவரும் இவரே. வாங்குபவருக்கு வரும் சந்தேகத்துக்கு பதிலளிக்கிறார்.

வெள்ளை வெற்றிலையா?

வெள்ளை வெற்றிலையா?

என்ன தம்பி நீங்க பாட்டுக்கு வந்தீங்க .. பார்த்துட்டு சும்மா போறீங்கன்னு கடை வைத்திருப்பவர் கேட்க, வெள்ளை வெத்தலை இருக்கான்னு பார்த்தேன். இல்லை அதுதான் போறேன்னு சொல்றார் மற்றொரு கெட்டப்பில் இருப்பவர். வெள்ளை வெத்தலைன்னா வெள்ளையா இருக்காது தம்பி.நிறம் கொஞ்சம் வெளுப்பா இருந்தா வெள்ளை.. அதுவே அடர்ந்த பச்சை நிறத்தில் இருந்தா கருப்பு வெத்திலைன்னு சொல்றார்.

வெற்றிலை கெடுதியா?

வெற்றிலை கெடுதியா?

சரி என்னவோ அதிருக்கட்டும்.. வெத்திலை கெடுதிதானேன்னு வாங்க வந்தவர் சொல்ல... வெத்தலை கெடுதியா? தம்பி அதை மட்டும் சொல்லாதீங்க.. வெத்திலைல பாக்கு சுண்ணாம்பு கலந்து போட்டா கெடுதி இல்லை. சேர்க்க கூடாததை சேர்த்து போட்டாத்தான் கெடுதி. வெத்திலைல வைட்டமின், நார்ச்சத்து, நினைவாற்றலை தரும் சத்துன்னு அத்தனையும் இருக்கு.

சுத்தம் செய்யும்

சுத்தம் செய்யும்

இரவில் வெத்தலை அதிகமா சேர்த்து, பாக்கு சுண்ணாம்பை குறைச்சு இரவில் போட்டால், வாயையும் சுத்தம் செய்யும் வயிற்றையும் சுத்தம் செய்யும்னு சொல்றார். இதை நான் சொல்றதுனால எல்லாரையும் வெத்தலை போடுங்கன்னு நான் சொல்லலை.. வெத்தலை கெடுதின்னு நீங்களும் நினைக்காதீங்க.. மத்தவங்களுக்கும் எடுத்து சொல்லுங்கன்னு சொல்றார்.

இப்படி எளிமையான மருத்துவ குறிப்புக்களை இந்த யூடியூப் சானலில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+