Bhagyalakshmi Serial: நெஞ்சைத் தொட்டு சொல்லு.. இல்லத்தரசிகளை இப்படியா ட்ரீட் பண்றாங்க?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ரொம்ப பெரிய விளம்பரங்கள் செய்யப்பட்டு, வரும் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. ஒரு இல்லத்தரசியின் கதை என்று சொல்லி விளம்பரம் செய்கிறார்கள்.

பாக்யலட்சுமிக்கு அன்றைய தினம் பிறந்த நாள். பாக்கியலட்சுமியோட அம்மா போன் செய்து விஷ் பண்றாங்க. பாக்கியலட்சுமி கோயிலுக்கு போயிட்டு வந்து விபூதி கொடுக்கும்போது கூட கணவர் கண்டுக்கலை...

பிள்ளைங்க ஒன்றுக்கும் இவங்க பிறந்தநாள் தெரியலை. கடைசியா செடிகிட்டே உனக்குத் தெரியுமா.. இன்னிக்கு என்னோட பிறந்த நாள்னு சொல்லி ஷேர் பண்ணிக்கறாங்க பாக்கியலட்சுமி. இல்லத்து அரசிகளை வீட்டில் இப்படியா ட்ரீட் பண்றாங்க என்கிற கேள்வி எழுகிறது.

 கேட்ல நின்னு லன்ச்

கேட்ல நின்னு லன்ச்

கடைக்குட்டி பெண் சாப்பிட்டுக்கொண்டே அப்பா.. இன்னிக்கு ஸ்கூலில் பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங் இருக்குன்னு சொல்றா. என்னால இன்னிக்கு வர முடியாதுன்னு அப்பா சொல்றார். அவர் வரலேன்னா என்னடி.. நான் வரேன்னு பாக்கியலட்சுமி சொல்றாங்க. இதைக் கேட்டு குடும்பமே சிரிக்குது. அம்மா இது டீச்சர்ஸ் பேரன்ட்ஸ் மீட்டிங்.. கேட்ல நின்னு லன்ச் குடுக்கற விஷயம் இல்லை.

 நீ வராதே

நீ வராதே

அம்மா நீ வராதே...அப்பா நீங்க வரதுன்னா வாங்க இல்லேன்னா யாரும் வர வேணாம்னு பொண்ணு சொல்லுது. அப்பா கம்முன்னு இருக்கார்.. பாட்டி தாத்தா எதுவும் பேசலை..அண்ணன்..அண்ணின்னு கூட யாரும் பேசலை. எப்படி இப்படி இருப்பாங்க? வீட்டில் பெரியவர்கள் என்று இருப்பது எதற்காக?

 கூட்டு குடும்பம்

கூட்டு குடும்பம்

கூட்டு குடும்பத்தில் இல்லத்து அரசியா இருக்கும் குடும்பத் தலைவியை... வீட்டுக்கு வந்த மருமகளை எப்படி எல்லாம் சியர் அப் பண்ணிக்கிட்டு இருக்காங்க... இதை விட்டுட்டு கூட்டு குடும்பத்தில் இது போல் தவறு நடக்கிறது என்பதை காண்பிக்கும்போது கொஞ்சமா இடிக்குது. சரி, இந்த பாட்டி தாத்தாவை விடுங்க..அம்மாவைப் பெத்த பாட்டி தாத்தா குழந்தைகளுக்கு நல்லதை சொல்லிக் கொடுக்க மாட்டாங்களா?

 குடிசை குழந்தைகள்

குடிசை குழந்தைகள்

இப்போது 2 கே கிட்ஸ் காலக் கட்டம்.. குடிசையில் வசிக்கும் ஏழை குழந்தைகள் கூட அப்பா அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்று அசத்துவார்கள். பிறந்த நாளா.. மதர்ஸ் டேவா... மகளிர் தினமா என்று காத்து இருக்கிறார்கள், அம்மாக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த. இந்த நேரத்தில் பாக்கியலட்சுமி இப்படி ட்ரீட் செய்யப்பட்டால் அது மகா பாவம்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+