பாக்யராஜூக்கு மாடுலேஷுடன் பேசவே வராது.. அபார திறமை.. டிட்டோ அப்படியே எம்ஜிஆர்.. போட்டுடைத்த பிரபலம்
சென்னை: 'முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டது என்று நினைத்து, யாருமே அப்போ பொண்ணு தரல' என்று மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன், முந்தானை முடிச்சு படத்தின் வெற்றி குறித்தும் சிலாகித்து பேசியிருக்கிறார்.
King 24X7 யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் தந்திருந்த பேட்டியில், ""முந்தானை முடிச்சு" படத்தில் சில்க் ஸ்மிதாவை, ஒரு பாடலுக்கு ஆட வைக்கலாம் என்று ஏவிஎம் சரவணன் சொன்னார். ஆனால், என் ஹீரோயினே அதுபோல ஆடுவாங்க என்று சொல்லிய பாக்யராஜ், "கண்ணை தொறக்கணும் சாமி" பாடலில் தீபாவை ஆட வைத்தார்.. சில்க் இல்லாமலேயே அந்த பாட்டை சக்சஸ் செய்ய வைத்தார்.

அதேபோல, அவசர போலீஸ் படத்தில் சில்க் ஸ்மிதா தான் வேண்டும் என்று சொல்லி, தன்னுடைய மனைவியாக அதில் நடிக்க வைத்திருந்தார். நான் முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க காரணமே பிரவீனாதான்.. பாக்யராஜ் - பிரவீனா திருமணம் முடிந்துதான் முந்தானை முடிச்சு படம் எடுக்கப்பட்டது. அப்போது பேச்சிலராக நான் லாட்ஜில் தங்கியிருந்தேன்.
பிரவீனா: பிரவீனா எனக்கு போன் செய்து சொன்னபிறகுதான், ஏவிஎம்மில் போய் பார்த்தேன்.. அதன்பிறகுதான், முருங்கைக்காய் வைக்கிற சீன் எனக்கு தரப்பட்டது. இந்த முருங்கைக்காய் வைக்கும் சீனுக்கு பாக்யராஜின் நண்பர்கள், தேனாம்பேட்டை நாடகர்கள் எல்லாம் போட்டி போட்டார்கள்.. ஆனால் எனக்கு அந்த சீனை ஒதுக்கியதற்கு காரணமே பாக்யராஜ் மற்றும் பிரவீனாதான்.
அந்த நேரத்தில் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஒரு கதையை பாக்யராஜ் காப்பி செய்துவிட்டதாக கேஸ் நடந்தது. அப்போது அதுசம்பந்தமாக நான் எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகி, சக்ஸஸ் ஆனது. அந்த வழக்கும் வெற்றி பெற்றது.. அதனடிப்படையில் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிரவினா யாரையுமே எளிதில் பார்க்க மாட்டார். ஆனால், ஒரு குடும்ப நண்பர் போல என்னிடம் பழகினார். வீட்டில் மாடிக்கு அழைத்து சென்று, ஆந்திராவிலிருந்து வந்திருந்த மாம்பழங்களை தருவார்.
நம்பியார் சாமி: முதலில் நான் தூறல் நின்னு போச்சு படத்தில் நம்பியார் கேரக்டரில் நடிப்பதாக இருந்தது.. ஆனால், அந்த கேரக்டர் ரொம்ப ஹெவியானது.. நான் அதில் நடித்திருந்தால் செட் ஆகியிருக்க மாட்டேன்.. நம்பியார் சாமி செய்யவும்தான் அது சரியாக இருந்தது.
முந்தானை முடிச்சு படத்தில் எனக்கு வயதான வைத்தியர் வேடம்.. தலையில் விக் வைத்து, 65 வயது கிழவனாக மாற்றி விட்டார்கள்..
23 வயதான எனக்கு, 65 வயது கிழவன் கெட்டப்பில், நிஜமான கிராமத்து வைத்தியர் போலவே இருந்தேன். எனக்கு உண்மையிலேயே வயதாகிவிட்டது என்று நினைத்து, எனக்கு யாருமே அப்போ பொண்ணு தரல. முந்தானை முடிச்சு படம் 100 வது நாள், விழாவில் பாக்யராஜ் காலில் விழுந்தேன். காரணம், முரட்டு ஆத்மாவான எனக்குள்ளும், காமெடி இருந்ததை கண்டுபிடித்தவர் பாக்யராஜ்
கலைவாரிசு: அப்போது, தன்னுடைய கலைவாரிசு என்று பாக்யராஜை அறிவித்தார் எம்ஜிஆர்.. பாக்யராஜை எதுக்காக கலைவாரிசு என்று எம்ஜிஆர் அறிவிக்க வேண்டும்? என்று எனக்குள் யோசனை எழுந்தது. அதை நான் ஆராய்ந்து பார்த்தேன்.. எம்ஜிஆருக்கு நடிக்க தெரியாது.. காரணம், தன்னுடைய எல்லா படங்களிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடுவார்.. அழும் காட்சிகளில் நடிக்க மாட்டார்.
நல்லா சண்டை போடுவார். 7 நாள் ஷூட் பண்ணுவார்.. ஆனால் ஒரே நாள் டூப் போட்டு, அந்த சண்டை காட்சியை மேட்ச் செய்துவிடுவார் எம்ஜிஆர்.. இதே டெக்னிக்தான் பாக்யராஜிடம் இருக்கும்.. டூப் போடுவதில் அருமையாக மேட்ச் செய்வார். அதேபோல, எம்ஜிஆர் படங்களில் பாட்டு நல்லா இருக்கும்.. ஹீரோயின்கள் நல்லா நடிச்சிருப்பாங்க.. காமெடிகள் நல்லா இருக்கும். இதேதான் பாக்யராஜ் படங்களிலும் இருக்கும். அதனால்தான், பாக்யராஜை கலைவாரிசு என்று எம்ஜிஆர் சொல்லியிருக்கிறார்.
திரைக்கதை: ஆனால், இப்போதுகூட மாடுலேஷனுடன் பாக்யராஜூக்கு பேச தெரியாது. ஆனால், அதை யாருமே கண்டுக்கல.. எப்படி ரஜினிகாந்த் பேசற தமிழை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்களோ, அதுபோல அதுபோல மாடுலேஷன் இல்லாமல் பேசும் பாக்யராஜையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.. தமிழ் சினிமா வரலாற்றை எழுதும்போது, திரைக்கதை என்றாலே, அது எங்கள் பாக்யராஜ் சார்தான்" என்று நெகிழ்ந்து கூறினார் பயில்வான் ரங்கநாதன்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications