Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாரு.. நம்ம கருப்பழகி பாரதி கண்ணம்மாவா இது?.. அடேங்கப்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொலைக்காட்சியை பொருத்தவரையில் அழகாக இருப்பவர்களுக்கு தான் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறது. இப்பல்லாம் வெள்ளித்திரையில் அதிகமான அளவில் நடிகைகள் அறிமுகமாகி கொண்டிருக்கிறார்கள்.

எல்லா நடிகைகளுமே அவ்வளவு அழகா லட்டு போல இருக்கிறார்கள். அப்படி இருந்தால் தான் அவங்களால ஜெயிக்க முடியும் என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தி வைத்து விட்டார்கள்.. ஆனால் அதெல்லாம் சும்மா மாயை என்று சிலர் அவ்வப்போது வந்து அதிரடி காட்டி அதை தவிடுபொடியாக்குவது தொடர் கதையாகியுள்ளது.

அப்படிப்பட்ட ஒரு அதிரடி நடிகைதான் நம்ம ரோஷினி ஹரிப்ரியன். தனது முழுத் திறமையையும் திரட்டி நடிப்பில் ஏற்றி அத்தனை பேரையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் ரோஷினி ஹரிப்ரியன். கருப்புதான் அழகு என்று அழுத்தம் திருத்தமாக முத்திரை பதித்தவர் ரோஷினி.


டெய்லி தொடர்பு

டெய்லி தொடர்பு

வெள்ளித்திரையில் இருப்பவர்களை விட இப்போது சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்கள்தான் மக்களின் மனதில் ஈசியாக ஒட்டி விடுகிறார்கள். ஏனென்றால் வெள்ளித்திரையில் உள்ளவர்களை நம்ம எப்பவாவது தான் பார்க்கிறோம். அவர்களிந் பாட்டுக்களை கேட்கும் போது தான் அவர்கள் ஞாபகத்துக்கு வருவார்கள். ஆனால் சின்னத்திரையில் உள்ளவர்களை டெய்லி அரை மணி நேரம் அவங்கள தான் நம்ம பார்க்கிறோம்.

 மனதில் பதிந்த ரோஷினி

மனதில் பதிந்த ரோஷினி


அப்படிப் பார்க்கும்போது அவங்க நம்ம வீட்டு பொண்ணு மாதிரி இருந்தா அவளுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு போயிரும். அப்படிதான் ரோசிணி யும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். ரோஷினி ஹரிப்ரியன் ஒரு மாடல் நடிகை. சென்னையை சேர்ந்த பொண்ணுதான். 2019 ஆம் ஆண்டில் நடிகர் அருண் பிரசாத்துடன் பிரவீன் பெண்ணெட் இயக்கிய பாரதி கண்ணம்மா என்ற தொலைக்காட்சி சீரியலில் நடித்து அறிமுகமானார்.

 சூப்பர் வேலை

சூப்பர் வேலை

இதுல நடிப்பதற்கு முன்பு இராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து மற்றும் பி. என் .பி பரிபாஸ் இல் பணியாற்றினார். ரோஷினி பாரதிகண்ணம்மா சீரியலில் குடும்பப் பெண்ணாகவும் மேக்கப் இல்லாமல் கருப்புநிற தோற்றத்துடன் நடித்து வருகிறார். மேக்கப் போட்டுக்கிட்டு கலராய் இருந்தால் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்கிற மனநிலையை டோட்டலா மாற்றிவிட்டார். இந்த சீரியலில் இவரின் நடிப்பு, மேக்கப் இல்லாத அழகு, பக்கத்து வீட்டு பெண் போல இருப்பதால் அனைவருக்கும் ரொம்ப பிடித்துப் போனது.

கருத்தைக் கவர்ந்த கண்ணம்மா

கருத்தைக் கவர்ந்த கண்ணம்மா

இந்த சீரியலில் இவர் கண்ணம்மாவாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். ரசிகர்கள் இவரை கண்ணம்மா என்று தான் அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு இவரை எல்லாருக்கும் பிடித்து இருக்கு. மக்களிடத்தில் இப்போது இந்த சீரியலுக்கு தனி மரியாதை உள்ளது. ரோஷினி ஹரிப்ரியன் நடிகை மட்டுமல்லாது ஒரு மாடலாகவும் பணியாற்றிவருகிறார். கைவினைப்பொருள்கள் கொண்ட நகைக் கடையான "ஐலா ப்யூட்டிஃபுல் பீட்ஸு"க்கு ஒரு மாடலாகவும் இருக்கிறார்.

அழகிய கண்ணம்மா

அழகிய கண்ணம்மா

இவர் குறும்படத்தையும் விட்டு வைக்கலையாம். அர்ச்சனா ஆர்த்தி இயக்கிய 'ஸ்காட்ச் ஆப் சொசைட்டி 'என் என்ற தமிழ் குறும் படத்திலும் நடித்திருக்கிறார் .சீரியல் தவிர மேத்தா ஜுவல்லரி, மனம் டெக்ஸ்டைல் ,மற்றும் ஆனந்தம் சில்க்ஸ் போன்ற சில பிரபலமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவரது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குடும்ப பெண்ணாகவும் கருப்பு நிறமாகவும் சீரியலில் காட்சி அளித்தவரா இது? என்ற கேள்வி எழுப்பும் வண்ணம் இவரது புகைப்படம் வெளியாகியுள்ளது. புகைப்படங்களில் சூப்பராக போஸ் கொடுத்திருக்கும் இவரை பார்த்து ரசிகர்கள் கண்ணம்மா ,என்னம்மா இது ? என்று கேட்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+