கருத்த செல்லம் கண்ணம்மாவுக்கு 20 ஆயிரம் ரூபாய்ல புடவையா... யாருடி அவன்?
சென்னை: விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் முதல் தாரத்துக்கு பிறந்த கண்ணம்மா ரொம்ப கருப்பு. ரெண்டாம் தாரத்துக்கு பிறந்த அஞ்சலி ரொம்ப அழகு. ஒரு வீட்டுல இப்படி பொண்ணுங்க இருந்தால் சித்தி கொடுமை எப்படி இருக்கும் பாருங்க.
சில சமயம் இதுல அதிசயமும் நடக்கும்...பல பேருக்கு கருப்பு மட்டுமே தெரிஞ்ச நிலையில், உள்ள இருக்கும் வெள்ளை மனசால ஈர்க்கப்பட்டு அதிசயம் நடப்பது உண்டு. அதுக்கெல்லாம் பெரிய மனசு இருக்கணும்.

எல்லாருமே வாழ்க்கையின் யதார்த்தத்தை புரிஞ்சுக்கிட்டா வெற்றி, தோல்வி ஒண்ணும் செய்யாது. வாழ்க்கையில பெரிய எதிர்பார்ப்பும் இருக்காது. வீணான மனசு கஷ்டமும் வராது.
அஞ்சலி அழகா இருக்கான்னு, அகிலன் அவளை கல்யாணம் செய்துக்க ஆசைப்படறான். ஏழையானாலும், அழகா இருக்காளே... அகிலனுக்கும் பிடிச்சு இருக்கேன்னு கல்யாண ஏற்பாடுகளை செய்யறாங்க..அவங்க அந்தஸ்துக்கு ஏத்த மாதிரி இருக்கணும்னு அழகான வீடு அஞ்சலி குடும்பத்துக்கு பரிசா தர்றாங்க.

அஞ்சலிக்கு அகிலனை பிடிக்கலை, அவனின் அண்ணன் டாக்டர் பாரதியை பிடிச்சு போகுது. பல ,முறை பாரதியை லவ் பன்றேன்னு சொல்லியும், பாரதி, தம்பிக்கு பிடிச்ச பொண்ணாச்சே.. வீணா கல்யாணத்தை நிறுத்திட கூடாது. அஞ்சலி திருந்திருவான்னு கோபத்தை வெளிக்காட்டாமல் அஞ்சலியை சகிச்சுக்கறான்.
கண்ணம்மாவை பாரதிக்கு பிடிச்சு போகுது.. ஜவுளி எடுக்கப் போறாங்க கடைக்கு. அப்போ ஒரு புடவையை எடுத்து தன் மேல் போட்டு அழகு பார்க்கறா கண்ணம்மா. புடவை விலையை கேட்கையில் 20 ஆயிரம்னு சொன்னதும் புடவையை வச்சுட்டு வந்துடறா.

கண்ணாம்மாவின் அப்பாவும் விலையை கேட்டுட்டு வச்சுட்டு வந்துடறார்.இதை பாரதி கவனிச்சுக்கிட்டே இருக்கான். மறுநாள் கூரியரில் கண்ணம்மா ஆசைப்பட்ட புடவை அவள் பேருக்கே வருது.
அக்கா குண்டு பல்பு அனுப்பறதுக்கு கூட ஆளில்லாத இவளுக்கு 20 ஆயிரம் ரூபாயில் புடவை யாருக்கா எடுத்து குடுத்திருப்பான்னு கணபதி தூபம் போடுகிறான். கண்ணம்மா சத்தியமா எனக்கு தெரியாது சித்தி.. நான் புடவையை பார்த்துட்டு வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்லி அழறா.

அப்பாகிட்டயும், அப்பா என்னை தப்பா நினைக்காதீங்க அப்பா... எனக்கு இது பத்தி ஒண்ணும் தெரியாது.. நானும் யார்கிட்டயும் புடவை கேட்கலைன்னு அழறா.
அப்பா கண்ணாம்மாவை சமாதானப்படுத்தி அழைச்சுக்கிட்டு போனதும், அஞ்சலி, இவளுக்கும் ஒருத்தன் 20 ஆயிரம் ரூபாயில் புடவை எடுத்து குடுத்திருக்கானே.. அவன் எந்த அளவுக்கு மடையனா இருப்பான்னு சொல்லிட்டு சிரிக்கறா.
சந்தேகம் ஒரு வியாதி.. அது எப்பவும் எந்த நேரத்துலயும் வரவே கூடாதுன்னு தெரிஞ்சுக்க இது நல்ல காட்சி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications