கண்ணம்மா என்னம்மா இது.. இப்படி பக்காவா பரவசத்தை ஏத்துறீங்களே!
சென்னை: விஜய் டிவியில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷ்னி ஹரிப்ரியன் தீபாவளிக்கு இப்பவே ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார்.
இவரது போட்டோக்களை பார்த்ததும் பல ரசிகர்களும் இமைக்காமல் ரசித்து கவிதைகளை கொட்டி வருகிறார்கள். இந்த போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு சில தினங்களே இருப்பதால் அதற்கு முன்னதாக இப்பவே பாவாடை தாவணியில் கலக்கலாக போட்டோ ஷூட் நடத்தி அதே இன்ஸ்டாகிராமில் தட்டிவிட்டு ரசிகர்களின் மனதை லபக்கென்று கவர்ந்து வருகின்றார் ரோஷ்னி ஹரிப்ரியன்.

கும்முன்னு இருக்கீங்களே
இவரது பெயரை பலரும் மறந்து விட்டனர். கண்ணம்மா என்று சொல்லி அழைத்தால் தான் அனைவருக்கும் மனதில் டக்கென்று ஞாபகத்திற்கு வந்து விடுகின்றார். ஒரே ஒரு எபிசோடில் மண்ணிலிருந்து விண்ணுலகம் வரைக்கும் சுற்றித்திரிந்து பல ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்ட கண்ணம்மா தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது சுயமான சொந்த அடையாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சூப்பர் அழகு
இதுவரைக்கும் இவரை சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் ரசித்த ரசிகர்கள் நிஜத்தில் இவருடைய போட்டோக்களை பார்த்து அவர் என்ன அழகு என்று ஏங்கி வருகிறார்கள். அதிலும் இப்போது இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போஸ்ட் பண்ணி வருகிறார். இவருடைய போட்டோஸ்களில் இவருடைய உண்மையான அழகை பார்த்து ரசிகர்கள் உருகி வருகிறார்கள்.

கருப்பழகி
மாடல் உடையாக இருந்தாலும் சரி ஹோம்லியாக இருந்தாலும் சரி உங்கள அடிச்சுக்க யாரும் இல்லை என்று விசிறி வீசுகிறார்கள். அதிலும் பலருக்கு இவர் கருப்பழகி கண்ணழகி சிரிப்பழகி என்று பட்டங்களாக கொடுத்து வருகிறார்கள். தற்போது இவர் பாவாடை தாவணியில் எடுத்திருக்கும் புது போட்டோக்களை பார்த்து அவருடைய ரசிகர்கள் தாவணி போட்ட தீபாவளி என்னும் பாடலை பாடி ரசிக்கிறார்கள்.

கவிதை வழியுதே
அதிலேயும் சிலர் இவருடைய போஸ்டரை பார்த்ததும் கவிதை மழைகளையும் கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். அதில் ஒருவர் இறைவன் வெள்ளை நிறத்தில் உள்ளவர்களை கண்ணையும் கருவிழி யையும் அழகாக படைத்தான் ஆனால் உன்னையே இறைவன் உன் கருவிழி ஆகவே உன்னை செதுக்கினான்.

பேராசை தீர்ந்தது
உன்னை செதுக்கியதால் ஆசை தீரவில்லை பேராசை தீர்ந்தது என்று தனது மனதில் உள்ள இவர் மீது ரசனையை கொட்டித் தீர்த்திருக்கிறார். என்னங்க மாடல் உடை எந்த உடை உடுத்தினாலும் இந்த பாவாடை தாவணி ஈடாகுமா அதுவும் கலக்கலாக வெட்கப்பட்டு சிரித்து இருக்கும் போட்டோவை பார்க்கும் போது கொள்ளை அழகாக ஜொலிக்கிறார்.

குலாவுறீங்களே
இவருடைய இந்த சிரிப்புக்கு ஆகவே பலரும் இந்த சீரியலை தற்போது பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். சீரியலில் அழுது கொண்டிருக்கும் இவரது முகத்தை பார்த்து பலரும் ஐயோ பாவம் என்று கூறினாலும் நிஜத்தில் இவருடைய சிரித்த முகத்தை பார்த்து கொஞ்சிக் குலாவி வருகிறார்கள். அதுதான் கண்ணம்மா.. கம்னு கெடக்காதே.. கலக்கி எடு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications