Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூட்டிய வீட்டு முன்பு தாறுமாறு போஸ்.. ஷாக் ஆக்கிய கண்ணம்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவர் நைட்டில் பாப்புலரான பாரதிகண்ணம்மா கண்ணம்மா மீண்டும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறார்.

இவர் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசந்துபோய் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள். இது கண்ணம்மா தானா என்று நம்பாமலும் சிலர் புலம்பி வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மீன்ஸ் போட்டு பாப்புலரான சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.

ரசிகர் பட்டாளம்

ரசிகர் பட்டாளம்

இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இல்லாத நிலையிலும் இந்த சீரியலுக்காக நெட்டிசன்கள் போட்ட மீன்ஸ்களால் பெரும் பாப்புலராகி விட்டது. அதன் பிறகு தற்போது இந்த சீரியலுக்கு சிலர் அடிமையாக மாறி விட்டார்கள் .அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் வந்தாலும் இந்த சீரியலில் கண்ணம்மா விற்கு எப்போதுமே தனி மவுசு தான் .

இவர்தானா அவர்

இவர்தானா அவர்

அதனால் தான் மீண்டும் அவள் இன்ஸ்டாகிராமில் ரெக்க கட்டி பறந்து வருகிறார். இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் ஒரு மாடலாக இருந்தாலும் இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த வேலை பிடிக்கவில்லை என்று உடனே உதறித்தள்ளிவிட்டு தனக்கு தெரிந்த மாடலிங்கில் குதித்தவர்.

முதலில் மாடலிங்

முதலில் மாடலிங்

போட்டோ எடுத்து அதை அப்படியே அவரை எடிட் பண்ணி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் இந்த சீரியலின் டைரக்டர் பிரவீன் பெண்ணெட் இவரை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் பார்த்து இவரை பிடித்துப்போய் இந்த சீரியலுக்காக இவரிடம் பேசி இருக்கிறார் .முதலில் நம்பாத ரோஷ்னி பிறகு உண்மையை தெரிந்துகொண்டு ஓகே சொல்லியிருக்கிறார்.

கருப்பா இருந்தாலும் களையா இருக்காரே

கருப்பா இருந்தாலும் களையா இருக்காரே

இருந்தாலும் இந்த சீரியலில் முதலில் இவர் நடிக்கும் போது இவரது கலரை வைத்து பலர் இவரெல்லாம் ஒரு நடிகையா என்று ஏளனமாக பார்த்து இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சீரியலில் இவரை தவிர வேறு யாராலும் இந்த அளவிற்கு பாப்புலராக ஆகியிருக்க முடியாது என்பதை அனைவருமே அறிந்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இவரது திறமையாலும் மற்றும் இவருக்கு கிடைத்த அதிர்ஷ்ட தாலும் இவர் ஓவர் நைட்டில் ஒபாமாவை சந்தித்துவிட்டு வந்துவிட்டார்.

செம சிரிப்பு

செம சிரிப்பு

இணைய தளங்களில் இவருடைய போட்டோஸ்கள் பெரும் வைரலாக பரவி வந்த நிலையிலும் இவர் அதே பழைய சிரிப்போடு தான் இருந்து வந்தார். அதுமட்டுமல்லாமல் இவரை வைத்து பல நெட்டிசன்கள் பலவிதமாக கலாய்த்து வந்த இவர் அதை கண்டுகொள்ளாமல் சீரியல் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் இந்த மாதிரி மீம்ஸ் போட்டிருக்கிறார்கள் என்று தான் ரசித்து வந்திருக்கிறார்.

டிஆர்பியில் நல்ல ரேங்க்

டிஆர்பியில் நல்ல ரேங்க்

பலர் கலாய்ச்சி இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு கொடுத்ததால் தற்போதும் அதே டிஆர்பியில் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சீரியலை இதற்கு முன்பு பார்க்காதவர்கள் கூட இது வைரலாக மாறியதால் என்னதான் நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலேயும் பலர் இந்த சீரியலின் கண்ணம்மாவுக்கு ஆகவே சீரியலை பார்க்கின்றனர்.

சேலையில்

சேலையில்

அவர் இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக சேலை கட்டிக் கொண்டு எண்ணெய் தேய்த்து தலை பின்னி போட்டு கிராமத்து பெண்ணாக தைரியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். இதனாலேயே பலருக்கு இவரை பிடித்திருக்கிறது. ஆனால் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து பலர் அவரா இவர் என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர் பூட்டிய வீட்டு முன்பு கலக்கலான ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருக்கிறார்.

செமம்மா கண்ணம்மா

செமம்மா கண்ணம்மா

கண்ணியமான உடை அணிந்திருந்தாலும் மாடல் உடையில் இவர் இருப்பதால் இவரைப் பார்த்து ஷாக்காகி புடவை கட்டி இருந்த கண்ணம்மா எங்க போனாங்க என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இவரை இப்படி மாடல் உடையில் பார்த்ததும் பலர் பாட்டு பாடி கலாய்த்து வருகிறார்கள். என்னதான் இருந்தாலும் அவருடைய அழகான சிரிப்புக்கு பலர் கிறங்கிப் போய் இருக்கிறார்களாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+