கண்ணம்மாவின் "பேக்"குல என்ன இருக்கு... வெட்டவெளிச்சமாக்கிய வெண்பா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில சீரியல்கள் ஆரம்பத்தில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த நாட்கள் போகப்போக மொக்கை ஆகிவிடும். ஆனால் சில சீரியல்கள் ஆரம்பத்தில் சுமாரான இழுத்துக் கொண்டிருக்கும் சீரியல் கூட ரசிகர்கள் திடீர் என்று அதனை ரசிக்க தொடங்கிவிடுகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த சீரியலில் வரும் சீன்கள் திடீரென்று பாப்புலர் ஆகிவிடும். அந்த மாதிரிதான் பாரதிகண்ணம்மா சீரியலும் தற்போது ஹை லெவலில் போய்க்கொண்டிருக்கிறது. பலரும் இந்த சீரியலை கலாய்த்து மீம்ஸ்கள் போட்டு இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது .இவ்வளவு நாளாக இந்த சீரியலுக்கு இல்லாத டிஆர்பி ரேட்டிங் தற்போது சில வாரங்களில் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது .

கண்ணம்மா கம்னு இரு

கண்ணம்மா கம்னு இரு

இதற்கு காரணம் இந்த சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியன் அந்த கேரக்டராகவே மாறி புயலாக உருவெடுத்து சீரியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் வீட்டை விட்டு வெளியே கோபமாக புறப்பட்டு வந்துவிட்டார். அதற்கு தனது கணவர் தன் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை சந்தேகப்படுவது ஒரு பெரிய காரணமாக இருந்ததால் இவர் அந்த உறவே வேண்டாம் என்று உதறித் தள்ளிவிட்டு வீரமாக கையில் ஒரு பேக்கும் நிறைமாதமாக தெருவில் நடந்து கொண்டிருக்கிறார்

நடந்துக்கிட்டே இருக்காரே

நடந்துக்கிட்டே இருக்காரே

பல வாரங்களாக நடந்து கொண்டே இருக்கிறார். அதனை பல நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் விதவிதமாக யாரும் யோசிக்காத அளவிற்கு கூட மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள். கைலாசத்துக்கு வேகமாக நடந்து கொண்டிருப்பது போலவும் அமெரிக்காவிற்கு சென்று விட்டது போலவும் கிரிக்கெட் விளையாடும் கிரவுண்டுக்குள் நடந்து கொண்டிருப்பது போலவும் விதவிதமாக மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

திடீர் குஷியில் பாரதி கண்ணம்மா

திடீர் குஷியில் பாரதி கண்ணம்மா

இப்படி கண்ணம்மா திடீரென வைரலானதால், இந்த சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. திடீரென்று இந்த சீரியலின் டிஆர்பி கூடியதால் இந்த சீரியலின் நடிகர்களுக்கு கொண்டாட்டமாகி விட்டது. அதனால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்கள் .இப்படி இருக்கும்போது நீங்கள் மட்டும் கலாய்க்க வில்லை நாங்களும் கலாய்த்து கொண்டு இருக்கிறோம் என்று கண்ணம்மாவை அந்த சீரியலில் வென்பாவாக நடிக்கும் பரினாவும் கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்.

ஜாலி கலாய்

ஜாலி கலாய்

இவர்கள் அனைவருமே சீரியலில் எதிர்மறை கேரக்டரில் நடித்து இருந்தாலும் சூட்டிங் இல்லாத நேரங்களில் என்ஜாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதையும் மாற்றி மாற்றி கலாய்த்து ஜாலி பண்ணி கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது

அந்த வீடியோவில் கண்ணம்மா நீ இங்கேயும் வந்துவிட்டாயா என்று வெண்பா கிண்டலாக கேட்கிறார். அது மட்டுமல்லாமல் பல வாரங்களாக இந்த பேக்கை தூக்கி கொண்டு நீங்க நடந்துட்டு இருக்கிங்க அப்படி என்னதான் இருக்கிறது என்று உத்து பார்த்து ஷாக் ஆகி இருக்கிறார் .

பேக்கைத் திறந்து பார்த்தா

பேக்கைத் திறந்து பார்த்தா

இந்த பேக்குல அப்படி என்னதான் இருக்கு என்று ரசிகர்களும் ஆர்வமாக இந்த வீடியோவை பார்த்து இருக்கிறார்கள் .ஆனால் அதில் கண்ணாடி, வளையல் ,மேக்கப் செட் டிஸ்யூ பேப்பர்கள் போன்றவைதான் முழுக்க நிரம்பி இருக்கிறது . இதை பார்த்ததும் சூட்டிங்கில் இருந்தவர்கள்கூட ஷாக் ஆகி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இவ்வளவு நகைகளையும் தூக்கிக்கொண்டு எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று வெண்பா இவரிடம் கலாய்த்தபடி பேட்டி எடுக்கிறார்

மயங்கிச் சரிந்த பாரதி

மயங்கிச் சரிந்த பாரதி

அதற்கு கண்ணம்மாவும், எல்லா நகைகளையும் வைத்து ஒரு பெரிய ஜுவல்லரி ஷாப் ஓபன் பண்ணி பெரிய மில்லினர் ஆக மாறி பாரதியை வந்து பழிவாங்குவேன் என்று பயங்கரமாக சபதம் விடுகிறார் . இதைப்பார்த்த அருகில் இருக்கும் பாரதி அம்மாடி என்று கொஞ்சம் பயந்த மாதிரி நடித்துக் கொண்டிருக்கிறார். நீங்க என்னப்பா எப்படி எல்லாம் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறது . நாங்களே கலாய்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். எங்களுடைய சீரியலை என்று சீரியலில் நடிக்கும் நடிகர்களை மாற்றி மாற்றி கலாய்த்து கொண்டிருக்கும் வீடியோக்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி கலாய்த்தா எப்படி

இப்படி கலாய்த்தா எப்படி

ரெண்டு வாரமா பேக்யோடு கண்ணம்மா நடந்து கொண்டிருக்கிறார் .காடு மலை எல்லாம் கடந்து இவர் நடந்து கொண்டே இருக்கிறார் . என்னைக்கு தான் குழந்தை பிறக்கும் என்றும் நடக்கும்போது பார்த்து வயிற்றில் இருக்கும் தலகாணி கீழே விழுந்திடபோகுது என்றும் பலர் கலாய்த்து வருகிறார்கள் .நீங்கள் என்ன கலாய்த்தாலும்ம் எங்களுக்கு லாபம்தான் என்று சீரியலில் உள்ளவர்களும் கொண்டாடி வருகிறார்கள். வழக்கமாகவே விஜய் டிவி காரர்கள் அவர்களை அவர்களே கலாய்த்துத் தள்ளுவார்கள்.. இப்ப மட்டும் சும்மாவா இருப்பாங்க!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+