முடிவுக்கு வந்த பாரதி கண்ணம்மாவில் கடைசி நேர ட்விஸ்ட்... குழப்பமும் நெகிழ்ச்சியுமான கடைசி முடிவு
பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் திருமணம் அனைவரின் முன்னிலையிலும் மீண்டும் நடைபெற்றிருக்கிறது.
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக சினேகன் மற்றும் கன்னிகா கலந்து இருக்கின்றனர்.
பாரதியின் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துவிட்டது என்று ஆர் ஜே பாலாஜி கடைசி நேரத்தில் சீரியலில் கலகலப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஷிவின் கணேசன் பாரதி கண்ணம்மா சீரியல் திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறார்.
பாரதியின் திருமணத்திற்கு வெண்பாவின் அம்மாவும் கணவரும் வந்திருக்கும் நிலையில் வெண்பா மட்டும் மிஸ் ஆகி இருக்கிறார்.

பிரபலங்களின் வருகை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் சீசன் இரண்டில் இருந்து மலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து கண்ணன் வந்து மேடையிலே குத்தாட்டம் போட்டிருக்கிறார். இவர்களை தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பாரதி கண்ணம்மா ரிசப்ஷனில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

மணமக்கள் என்ட்ரி
மறுநாள் காலையில் வயல்வெளிக்கு நடுவே பந்தல் போடப்பட்டு கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்திருக்கிறது. பாரதி ஹேமா மற்றும் லட்சுமி உடன் டிராக்டரில் வந்து இறங்குகிறார். அதற்குப் பிறகு மாப்பிள்ளை வந்தாச்சு பொண்ணு எங்க என எல்லோரும் கேட்க, அப்போது கண்ணம்மா வயல்வெளியின் நடுவில் பல்லக்கில் கொண்டு வரப்பட்டு அழகாக இறங்கி மணமேடைக்கு வருகிறார். கண்ணம்மாவை ஹேமாவும் லட்சுமியும் மணமேடையில் அமர வைத்ததும் பாரதி கண்ணம்மாவிடம் ஏற்பாடுகள் எப்படி இருக்கிறது என கேட்க, சூப்பராக இருக்கிறது என்றும் அதுமட்டுமல்ல புடவையும் ரொம்பவே பிடித்திருக்கிறது என்று கண்ணம்மா கூறுகிறார் .

கன்னிகா சினேகன் வருகை
அடுத்ததாக பொண்ணு மாப்பிள்ளை வந்தாச்சு ஐயர் எங்கே அக்னிகுண்டம் எங்கே என அனைவரும் கேட்க கணபதி இது தமிழ் முறைப்படி நடக்கப் போற கல்யாணம் அதனால் அதுவெல்லாம் எங்கே இருக்காது என்று சொல்ல, தாலியாவது கட்டுவீங்களா? இல்லையா? என கேட்க அதெல்லாம் கண்டிப்பாக கட்டுவாங்க இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க போறவர் தமிழை நேசிக்கும் தம்பதிகளான கவிஞர் சினேகன் மற்றும் அவருடைய மனைவி வருவதாக சொல்ல, அவர்கள் இருவரும் என்ட்ரி கொடுக்கின்றனர். அனைவரும் கன்னிகாவை பார்த்ததும் இவர் சீரியலில் நடித்திருக்கிறார் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். சினேகனும் கன்னிகாவும் மணமேடையில் இருக்கும் பாரதிகண்ணம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

திருமணத்தை நிறுத்திய நபர்
பின்பு சினேகன் மங்கள நாண் எடுத்து வாருங்கள் என்று சொல்ல அனைவருக்கும் குழப்பமாக இருக்கிறது. அப்போது அது மங்கள நாண் என்றால் தாலி தான் என்று விளக்கம் கொடுக்கின்றனர். பிறகு பாரதியிடம் சினேகன் தாலியை கொடுத்து கட்ட சொல்ல பாரதியும் அதை வாங்கி கட்டும் போது நிறுத்துங்க என்று ஒரு குரல் கேட்கிறது. இதனால் எல்லோரும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க அங்கே ஆர்.ஜே பாலாஜி அவசர அவசரமாக ஓடி வருகிறார். எல்லோரும் ஆர்.ஜே பாலாஜி எதற்காக இப்படி வருகிறார் என்று குழப்பத்தோடு கேள்வி எழுப்புகின்றனர்.

இனிதே முடிவடைந்த திருமணம்
உங்க ரிசல்ட் வந்துடுச்சு என சொல்லிக்கொண்டே வரும் பாலாஜி இடம் என்ன ரிசல்ட் என கேட்க, டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் டெல்லியில் இருந்து வந்திருக்கிறது என சொல்ல, அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். பிறகு டிஎன்ஏ ரிசல்ட் வந்து இரண்டு பேரும் சேர்ந்து ஒரு வாரம் ஆட்சி என சொல்கின்றனர். அப்போ கரெக்டா சுபம் போடுறதுக்காக தான் நான் வந்திருக்கேனா? என சொல்லி போய் சேரில் உட்காருகிறார். பின்பு பிக் பாஸ் ஷிவின் வருகிறார். ஷிவனை கணபதி வரவேற்க ஷிவின் அனைவரிடமும் வணக்கம் கூறிவிட்டு அமர்ந்திருக்கிறார். பிறகு சினேகன் பாரதியிடம் இருந்து தாலியை வாங்கி முதல் முறையாக குழந்தைகள் தாலி எடுத்துக் கொடுத்து அப்பா அம்மாவுக்கு திருமணம் நடக்கும் விஷயம் இங்க தான் நடக்கப்போகிறது என சொல்லி தாலியை கொடுக்க சொல்ல, பாரதி அதை வாங்கி கண்ணம்மா கழுத்தில் கட்டுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications