பவதாரிணி பாடலை இளையராஜா யூஸ் பண்ணினாரா?
சென்னை: இசை ஞானி இளையராஜா தனது மகள் இசை அமைப்பாளர், பாடகியான பதாரிணியின் பாடலை ஒரு படத்தின் பாடலுக்கு எடுத்து கொண்டாராம்.. கேட்கவே ஆச்சரியமா இருக்கு...!
நிறைய யூடியூப் ஆரம்பித்து 90 சதவிகிதம் அத்தனையும் பாப்புலராகி வருகிறது. ஆனால், பிரபலங்கள் நெருக்கம் அதிகமுள்ள,அல்லது சின்னத்திரை பெரிய திரையில் தடம் பதித்தவர்கள் யூடியூப் சானல்கள் ஆரம்பிக்கும்போது அதில் பிரபலங்களின் நேர்காணல் அதிகம் இருக்கும்.
அப்படி ஒரு யூடியூப் சானல்தான் முத்திரை டிவி. இதில் இசைப் புயலின் சகோதரியும், இசை ஞானியின் மகள் பவதாரிணியும் இந்த சானலுக்கு நேர்காணல் கொடுத்து இருந்தார்கள்.

ரஹமான் ரெஹானா
ரெஹானா ஆரம்பத்தில் சகோதரர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விளம்பர பாடல்கள் எழுதிக் கொடுத்துக்கொண்டு இருந்தாராம். அதோடு வேற்று மொழியில் வரும் விளம்பர வரிகளை அப்படியே மொழி பெயர்க்காமல் கிரியேட்டிவியாக மொழி பெயர்த்து வரும் பணிகளையும் செய்து வந்ததாக கூறினார்.

ஆசை பாடல்
சின்ன சின்ன ஆசை பாடல் டியூன் முதன் முதலில் ரெஹானாவுக்குத்தான் ரஹ்மான் கொடுத்தாராம். அத்துடன் புது வெள்ளை மழை பாடலும். ஆனால், முக்கி முக்கி இவர் எழுதிக் கொண்டு இருக்க, வைரமுத்து பாடலை எழுதிக் கொடுத்து விட்டாராம். இவரது மகன் ஜி.வி.பிரகாஷை நடிக்க சொல்லி அவர் நடிக்க ஆரம்பிப்பதற்கு பல வருடங்கள் முன்பே இவரிடம் கேட்டார்களாம். ஜி.வி கண்ணில் ஒரு ஒளி இருக்கிறது என்று அவர்கள் சொன்ன காரணத்தை சொன்னார் ரெஹானா.

ஆல்பம் செய்தேன்
ரெஹானா சொல்ற மாதிரி நானும் எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்ஸும் கை வச்சு ஆல்பம் போட்டு இருக்கேன். முதன் முதலில் மித்ரா மை ஃபிரண்ட் படத்துக்கு இசை அமைக்க ரேவதி மேம் கூப்பிட்டாங்க. அப்பா கூட சின்ன வயசில ரெக்கார்டிங் நடக்கும்போது போயிருக்கேன்.

நேரத்தில் ஜானகி அம்மா
அஞ்சலி படத்தில் இரவு நிலவு உலகை ரசிக்க பாடலை ஜானகி அம்மா வந்து அரை மணி நேரத்தில் பாடி குடுத்துட்டு கிளம்பிட்டாங்க. அது அவ்ளோ கஷ்டமான பாடல்.. எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்ததுன்னு பவதாரிணி சொன்னார். முதன் முதலில் நீங்கள் ஆல்பம் போட்டு அப்பாவிடம் காண்பித்த போது என்ன சொன்னார் என்று கேட்டபோது...

அதன் பாடல்
ஒரு ஆல்பம் பண்ணினேன்.. ஏசுதாஸ் அங்கிள்தான் பாடினாங்க. அதை அப்பாகிட்டே காண்பிச்சேன்.. பா.விஜய் சார் எழுதின லிரிக். ஷைய ஷைய நீயா பொய் சொன்னே ஷைய ஷையன்னு வரும். லிரிக் நல்ல இருக்கே.. எங்கே ஒரு முறை வாசிச்சு காட்டுன்னு அப்பா சொன்னாங்க. நான் வாசிச்சு காட்டினேன்.
கொஞ்ச நாள் கழிச்சு பார்த்தால்.. ஃபிரண்ட்ஸ் படத்தில் ஷைய ஷைய ஓ ஷையான்னு அப்பா போட்டு இருந்தாங்க.. எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு.. என்னோட இன்ஸபிரேசன் அப்பாவுக்கு இருந்து இருக்குன்னு என்று சொல்லி சிரித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications