பிக் பாஸ் 2 : ஜனனிக்குப் பதில் யாஷிகா... 3 வாரங்களில் மனதை மாற்றிக் கொண்ட அனந்த்!

தான் பார்த்த பெண்களிலேயே யாஷிகா தான் அழகானவர் என அனந்த் வைத்தியநாதன் பாராட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு வந்த போது, வீட்டிலேயே ஜனனி தான் அழகானவர் எனக் கூறிய வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன், வீட்டில் இருந்து வெளியேறிய பின் யாஷிகா தான் அழகானவர் எனத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 2வில் இரண்டாவது போட்டியாளராக வாய்ஸ் எக்ஸ்பர்ட் அனந்த் வைத்தியநாதன் எலிமினேட் ஆகியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அவரை, மேடையில் சந்தித்தார் கமல்.

அப்போது அவருக்கு சக போட்டியாளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு, அதில் ஒவ்வொருவரைப் பற்றியும் ஒரு வார்த்தையில் தெரிவிக்க வேண்டும் என சிறிய ஜாலி டாஸ்க் அளிக்கப்பட்டது.

 அழகோ அழகு:

அழகோ அழகு:

அதன்படி, யாஷிகாவை மிகவும் அழகான பெண் என வர்ணித்தார் அனந்த். மொத்தப் போட்டியாளர்களில் யாஷிகாவிற்குத் தான் முதலில் அவர் அழகு எனப் பெயரிட்டார்.

யாஷிகா :

யாஷிகா :

அதிலும், தான் இதுவரைப் பார்த்தவர்களிலேயே யாஷிகா தான் மிக மிக அழகானவர் எனக் கூறிய அனந்த், பிக் பாஸ் வீட்டிற்கு வந்த முதல் நாள் அளிக்கப்பட்ட டாஸ்கில் ஜனனி தான் இந்த வீட்டிலேயே அழகானவர் எனத் தெரிவித்திருந்தார்.

ஆமோதித்த அனந்த்:

ஆமோதித்த அனந்த்:

பிக் பாஸ் வீட்டில் உங்களைவிட அழகானவர் யார் என்ற கேள்வி ஜனனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘நான் தான் எல்லோரையும் விட அழகானவள்' எனப் பதிலளித்தார். அதனை அனந்தும் ஆமோதித்தார்.

அழகான கண்கள்:

அழகான கண்கள்:

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருந்த மூன்று வாரங்களில் அனந்தின் இந்தக் கருத்து மாறியுள்ளது. தற்போது யாஷிகா தான் மிகவும் அழகானவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனனிக்கு மிகவும் அழகான கண்கள் என அவர் பாராட்டு தெரிவித்தார்.

 ஜனனியின் மாமனார்:

ஜனனியின் மாமனார்:

பாலாவின் இயக்கத்தில் விஷால், ஆர்யா இணைந்து நடித்த அவன் இவன் படத்தில் ஜனனி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். அதில், ஆர்யா, விஷாலின் அப்பாவாக, ஜனனிக்கு மாமனாராக அனந்த் நடித்திருந்தது நினைவுக் கூரத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+