பிக் பாஸ் 2 : திரும்பத் திரும்ப ‘அதே’ தப்பை செய்றீங்களே பாஸு!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் காட்டப்படும் காட்சிகள் நிகழ்ச்சியில் இருப்பதில்லை.
சென்னை: பார்வையாளர்கள் எவ்வளவோ சுட்டிக் காட்டியும் தொடர்ந்து ப்ரோமோவில் ஒன்றும், நிகழ்ச்சியில் வேறொன்றுமாகக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது பிக் பாஸ்.
பிக் பாஸ் நிகழ்ச்சித் தொடங்கி 25 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை விறுவிறுப்பு கூடவில்லை. பிக் பாஸும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்க்கிறார், ஆனாலும் போட்டியாளர்கள் முதல் சீசனைப் பார்த்திருப்பதால் மிகவும் உஷாராக நடந்து கொள்கின்றனர்.
இதனால் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இம்முறை இல்லை. பலரும் சேனலை மாற்றிச் சென்று விடுகின்றனர்.

சப்பென நிகழ்ச்சி:
இதனால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் மற்ற சீரியல்களின் இடையே பரபரப்பான பல ப்ரோமோக்கள் வெளியிடப்படுகின்றன. ப்ரோமோவைப் பார்த்து ஆர்வமாக பார்த்தால் நிகழ்ச்சி சப்பென்று இருக்கிறது.

பதவியை இழக்கும் ரம்யா:
நேற்றும் அப்படித்தான், ப்ரோமோவில் இவ்வார பிக் பாஸ் வீட்டு தலைவியான ரம்யா, டாஸ்கில் கலந்து கொள்ள முடியாது என கூறுவது போலவும், இதனால் அவர் தலைவி பதவியை இழப்பது போல் பிக் பாஸ் எச்சரிப்பது போன்றும் ப்ரோமோ ஒளிபரப்பானது. அதோடு அடுத்த வாரத்திற்கு அவர் நேரடியாக எலிமினேசனுக்கு நாமினேட் செய்யப்படுவார் என்றும் கூறப்பட்டது.

ஆவல்:
எனவே நேற்றைய நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனிலும் சரி, இதுவரையிலும் சரி, பிக் பாஸ் வீட்டில் தலைவராக பதவி ஏற்றவர்கள் பாதியில் வெளியேறியது இல்லை. ஆனால், இது புதிதாக இருக்கிறதே என்ற ஆவல் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டது.

நிகழ்ச்சியில் இல்லை:
ஆனால், இது தொடர்பாக காட்சிகள் நிகழ்ச்சியில் இல்லை. அவை இன்று ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியானால், இன்று ஒளிபரப்பப் போகும் காட்சிகளுக்கு நேற்றே ஏன் ப்ரோமோ போட்டார்கள் என பார்வையாளர்கள் கோபமடைந்துள்ளனர்.

தொடரும் ஏமாற்றம் :
ஏற்கனவே சமூகவலைதளப் பக்கங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் காட்டப்படும் காட்சிகள் நிகழ்ச்சியில் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இனி வரும் நாட்களிலாவது இந்த போக்கை பிக் பாஸ் மாற்றுவார் என எதிர்பார்த்தால், தொடர்ந்து பார்வையாளர்கள் எரிச்சலடையும் வகையில் அதே தப்பை தொடர்ந்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications