பிக்பாஸ் 2 : ரியல் பேய், பிசாசுகளுக்கு ‘செக்’.. அப்போ ரீலுக்கு?
பிக்பாஸ் 2 வீடு வாஸ்து முறைப்படி உருவாக்கப் பட்டிருக்கிறதாம்.
சென்னை: பிக்பாஸ் 2 வீடு வாஸ்து சாஸ்திரம் பார்த்து உருவாக்கப்பட்டுள்ளதாம். அதில் தீயசக்திகள் ஏதும் அண்டாமல் இருக்க தகடுகளும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் சீசன் 2விற்காக சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட வீடு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதே இடத்தில் தான் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை பிக்பாஸ் வீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர்.
அவை வாஸ்து சாஸ்திரத்திற்காக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நூறு நாட்கள் இந்த வீட்டில் 15 போட்டியாளர்கள் வசிக்கப் போவதால், நிஜ வீட்டைப் போலவே இந்த வீட்டையும் வாஸ்து பார்த்து உருவாக்கி இருக்கிறார்களாம்.

தகடு, தகடு...
அதோடு, இந்த வீட்டை பேய், பிசாசு போன்ற தீயசக்திகள் நெருங்கி விடாமல் இருக்க, மந்திரங்கள் செய்த தகடு, தாயத்துகளும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

60 கேமராக்கள்:
பிக்பாஸ் வீட்டை எப்போதும் 60 கேமராக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும் என்பது நாமறிந்ததே. அப்படியிருக்க தயாரிப்புக் குழுவிற்கு ஏன் இந்த பயம் ஏற்பட்டது எனத் தெரியவில்லை.

அந்த பயமா?
ஒருவேளை கடந்தமுறை பிக்பாஸ் நடந்தபோது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பிளம்பர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பிக்பாஸ் வீட்டில் தான் உயிரிழந்தார், இல்லையில்லை அவர் அருகில் இருந்த மற்றொரு செட்டில் உயிரிழந்தார் என இருவேறு தகவல்கள் வெளியானது. எது உண்மையோ, ஒருவேளை அந்தப் பயத்தில் இம்முறை இந்த தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை.

பேய் டாஸ்க்:
கடந்தமுறை போட்டியாளர்களுக்கு பேய் வேடமிட்டு அலையும் டாஸ்க் வைத்தார்கள். இம்முறையும் அதே போன்று டாஸ்க் இருந்தால் என்ன செய்வார்கள். அப்போது இந்த தகடு வேலை செய்யுமா?

வாஸ்து எதற்காக:
வாஸ்து விசயத்தில் மக்களைப் போலவே நமக்கும் ஒரு டவுட். ஒரு வீடு நன்றாக சண்டை சச்சரவு இல்லாமல், அமைதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே இந்த வாஸ்து, தகடு சமாச்சாரம் எல்லாம் மக்கள் செய்வார்கள். பிக்பாஸ் வீடோ இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, எப்போதும் சண்டை, சச்சரவுகளோடு தான் இருக்கும். அப்படி இருந்தால் தானே உங்களுக்கு டிஆர்பியும் எகிறும். அப்படியிருக்க இந்த வாஸ்து பிசினஸ் எல்லாம் எதுக்கு பாஸ்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications