பிக்பாஸ் 2 : வித்தியாசமான கெட்டப்புடன் வீட்டுக்குள் கமல்... வைரலாகும் போட்டோஸ்!
பிக்பாஸ் வீட்டில் கமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகர் கமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்தாண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 2 இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. முதல் சீசனைப் போலவே இதற்கும் எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.
இன்றைய நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நேற்றே முடிந்து விட்டது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கமலின் உடை:
இது தொடர்பான புகைப்படங்களில் கமல் வித்தியாசமான கெட்டப்பில் தோற்றமளிக்கிறார். கடந்தமுறை கோட் சூட் சகிதம் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட கமல், இம்முறை பழம்பெரும் நடிகர் நாகேஷ் பாணியில் உடை அணிந்துள்ளார்.

சுற்றிக் காட்டும் கமல்:
ஏற்கனவே பத்திரிகையாளர்களை அழைத்து பிக்பாஸ் சீசன் 2விற்காகப் போடப்பட்டுள்ள வீட்டை தயாரிப்பு நிறுவனத்தார் காட்டிவிட்டனர். இதனால், அவ்வீட்டின் அமைப்பு குறித்த புகைப்படங்களை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். ஆனபோதும், இன்றைய நிகழ்ச்சியின் துவக்கத்திலும் கடந்தமுறை போலவே வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்.

துவக்கவிழா மேடை:
இதற்காக வீட்டின் பல்வேறு பகுதிகளில் அவர் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, துவக்கவிழா மேடையில் அவர் நிற்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

கமல் வெளியிட்ட வீடியோ:
இது தவிர பிக்பாஸ் மேடைக்கு கமல் நடந்து வருவது போன்ற வீடியோ ஒன்றையும் கமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிக்பாஸ் தீம் மியூசிக் ஒலிக்க, கமல் மக்கள் மத்தியில் நடந்து வந்து மேடையில் நிற்கிறார்.

மேடை அமைப்பு:
இந்த மேடையில் இருந்து தான் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி, பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். எனவே, பிக்பாஸ் வீட்டின் அருகிலேயே இதற்கான செட் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications