பிக்பாஸ் 2 : கமலைப் பார்த்து ‘நாம அடுத்த வாரம்கூட பேசிக்கலாம் சார்’ என்ற டேனி... ஏன் தெரியுமா?
பிக்பாஸ் மேடையில் விஸ்வரூபம் 2 படப்பாடல் இன்று வெளியிடப்படுகிறது.
சென்னை: விஸ்வரூபம் 2 படப்பாடலை வெளியிடுவதற்காக நடிகர் கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 2வில் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு நிகழ்ச்சிகளில் கமல் பங்கேற்று தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து, தவறுகளைச் சுட்டிக் காட்டுவது என தனது ஸ்டைலில் சிறப்பாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்.
இந்நிலையில், சீசன் 2வில் முதல் போட்டியாளர் எலிமினேஷன் இன்று நடைபெற இருக்கிறது. அதோடு, விஸ்வரூபம் 2 படப்பாடலையும் இன்று பிக்பாஸ் மேடையில் கமல் வெளியிட இருக்கிறார்.

மகிழ்ச்சி:
இதற்காக கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாடல் :
இது தொடர்பான ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஸ்ருதி பாடல் ஒன்றைப் பாடுகிறார். அதனை சென்றாயன் தனது ஸ்டைல் ஆங்கிலத்தில் பாராட்டுகிறார்.

அப்பாவுக்கு தப்பாத பிள்ளை:
அதனைத் தொடர்ந்து கமல், ‘இவருக்கு ஆங்கிலம் மிகவும் பிடிக்கும்' எனச் சொல்ல, ஸ்ருதியும் தன் பங்கிற்கு ஆங்கிலத்தில் சென்றாயனிடம் பேசுகிறார். இதேபோன்று கடந்தவாரம் கமலும் சென்றாயனிடம் ஆங்கிலத்தில் பேசியது நினைவுக் கூரத்தக்கது.

என்ஜாய் :
பின்னர், டேனி ‘சார் நாம் தான் வாரம் தோறும் பேசுகின்றோமே, ஸ்ருதியிடம் இரண்டு வார்த்தை பேசிக்கிறேன்' என்று கூறுகிறார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பில் அதிர்கிறது. ஸ்ருதியும் வெட்கத்தில் சிரிக்கிறார். கமலும், ‘என்ஜாய், என்ஜாய்' எனக் கூறுகிறார்.

முதல் எலிமினேஷன்:
இந்நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷன் இன்று தான் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வந்த 16 போட்டியாளர்களில் ஒருவர் இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார். அப்படியாக வாரந்தோறும் போட்டியாளர் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறுகையில் சக போட்டியாளர்கள் அழுது அவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பார்கள்.

எதிர்பார்ப்பு:
எனவே, இந்த வாரம் விஸ்வரூபம் 2 பாடல் வெளியீட்டு கலை நிகழ்ச்சிகளோடு, இந்த அழுகாச்சி காவியமும் கட்டாயம் இருக்கும். கமல் ஸ்டைலில் சொல்வதென்றால், அழுகை பாதி, சிரிப்பு பாதி இரண்டும் கலந்த கலவையாக' இன்று பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications